惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

I
InfoQ
博客园_首页
美团技术团队
M
MIT News - Artificial intelligence
人人都是产品经理
人人都是产品经理
Blog — PlanetScale
Blog — PlanetScale
H
Help Net Security
J
Java Code Geeks
T
Tailwind CSS Blog
Jina AI
Jina AI
量子位
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
G
Google Developers Blog
爱范儿
爱范儿
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
宝玉的分享
宝玉的分享
小众软件
小众软件
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - 三生石上(FineUI控件)
L
LangChain Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
V
Visual Studio Blog
博客园 - Franky
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“தேர்தல் பிரச்சார மனநிலையிலேயே முதல்வர் விஜய் பேசுகிறார்”...
செய்திப்பிரிவு · 2026-06-02 · via hindutamil

Updated on: 

சென்னை: “முதல்வர் விஜய் இன்னும் தேர்தல் பிரச்சார மனநிலையிலேயே பேசுவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டுக்கான தெளிவான ‘விஷன் ஸ்டேட்மென்ட்’ வழங்க வேண்டும்” என்று திமுகவின் எழிலன் கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம அவர் கூறியது:“டெல்லியில் செய்தியாளர்களைச் சந்திக்காமல் அவசர அவசரமாக காரில் ஏறிப் போன முதல்வர் விஜய் இன்று திருச்சியில் பொதுமக்களுக்குப் பதிலாகக் ‘கேப்டிவ் ஆடியன்ஸ்’ எனப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டத்தை வைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

முன்னாள் முதல்வர்கள் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்த பிறகு ஊடகவியலாளர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால், முதல்வர் விஜய் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் காரில் ஏறித் தப்பிச் செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அண்ணா கூறியதைப்போல, ‘எதிர்க்கட்சியாக இருக்கும்போது கிண்ணத்தை எப்படி வேண்டுமானாலும் சுழற்றலாம்; ஆனால் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஆட்சி என்பது நெய்க் கரன்டியைப் போன்றது, அதனைச் சிந்தாமல் கையாள வேண்டும்’. முதல்வர் விஜய் இன்னும் தேர்தல் பிரச்சார மனநிலையிலேயே பேசுவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டுக்கான தெளிவான ‘விஷன் ஸ்டேட்மென்ட்’ வழங்க வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மாதந்தோறும் மின்கட்டணம் மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்காமல், இன்னும் இரு மாதங்களுக்கு ஒருமுறைக் கட்டணம் வசூலிப்பதையும், அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதில் மக்களை ஏமாற்றாமல், 2006-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி நிபந்தனையின்றி 7,000 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்த அரசாணையை முதல்வர் விஜய் படித்துப் பார்க்க வேண்டும்.

மகளிர் உரிமைத்தொகை, காலை உணவுத்திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைத் தாம் தொடர்வதாகக் கூறிவரும் முதல்வர் விஜய், புதியதாக தமிழ்நாட்டுக்கு என்ன செய்யப்போகிறார்?.

100 யூனிட் இலவச மின்சாரத்தின் தொடக்கம் 1989-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி வழங்கிய இலவச மின்சாரத்தில்தான் உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் ஆணவப் படுகொலைகள் குறித்துக் கேள்வி எழுப்புகிறோம். முன்பு திமுகவை நோக்கி விஜய் எழுப்பிய கேள்விகள் இப்போது அவரிடமே ‘பூமராங்’ ஆகத் திரும்பி வருகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்தைவிட ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் மாநில உரிமைகளை முதல்வர் விஜய் விட்டுக் கொடுக்கிறாரா? மேகேதாட்டு மற்றும் மும்மொழிக்கொள்கை குறித்து அவர் ஏன் மவுனம் காக்கிறார்?. முதல்வர் விஜய் தமது அமைச்சர்களை ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அறிவுறுத்த வேண்டும். வெறும் ரசிகர்மன்றத் தலைவராகச் செயல்படாமல் பொறுப்புள்ள முதல்வராகச் செயல்பட வேண்டும்” என்று எழிலன் கூறினார்.