惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Hacker News - Newest:
Hacker News - Newest: "LLM"
美团技术团队
MyScale Blog
MyScale Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
L
LangChain Blog
雷峰网
雷峰网
P
Proofpoint News Feed
G
Google Developers Blog
V
Visual Studio Blog
Recorded Future
Recorded Future
The GitHub Blog
The GitHub Blog
U
Unit 42
Stack Overflow Blog
Stack Overflow Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
F
Fortinet All Blogs
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
Docker
博客园 - Franky
SecWiki News
SecWiki News
Attack and Defense Labs
Attack and Defense Labs
S
Secure Thoughts
Vercel News
Vercel News
S
Security Archives - TechRepublic
S
Security Affairs
Engineering at Meta
Engineering at Meta
D
DataBreaches.Net
N
News | PayPal Newsroom
K
KPMG report finds enterprise disconnect between AI and its ROI | CIO
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
M
MIT News - Artificial intelligence
博客园 - 【当耐特】
博客园 - 聂微东
Spread Privacy
Spread Privacy
爱范儿
爱范儿
大猫的无限游戏
大猫的无限游戏
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
H
Heimdal Security Blog
Security Latest
Security Latest
Blog — PlanetScale
Blog — PlanetScale
P
Privacy & Cybersecurity Law Blog
H
Help Net Security
T
Threat Research - Cisco Blogs
N
Netflix TechBlog - Medium
量子位
T
Threatpost
WordPress大学
WordPress大学
I
InfoQ
T
Tailwind CSS Blog
CTFtime.org: upcoming CTF events
CTFtime.org: upcoming CTF events

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
“மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை தேவை” - செந்தில் பாலாஜி
அனலி · 2026-06-14 · via hindutamil

Updated on: 

சென்னை: “இன்ஸ்டா இன்ஃப்ளூயன்ஸர்களுக்கு கண்டண்ட் கொடுக்கும் வேலையை செய்யாமல், நள்ளிரவில் போராடும் மக்களின் துயர் துடைக்க மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முன்னாள் மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாற்றத்தைத் தருகிறேன்” என்று சொல்லி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற தவெக அரசு தனது ஒரு மாத கால ஆட்சியில்- வாக்களித்த மக்களு்க்கு பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. 6 மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு என தாங்கமுடியாத துயரத்தில்- நள்ளிரவிலும் பொதுமக்கள் நடுத் தெருவிற்கும், சாலைகளுக்கும் வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

“சாலை மறியல் இல்லாத இரவுகள் இல்லை” என்ற நிலை- மாநிலத்தின் தலைநகரிலும், மற்ற பகுதிகளிலும் இந்த ஆட்சியின் நிர்வாக அவலத்தை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

“பதவியேற்றவுடன் மாற்றத்தைத் தருவேன்” என்ற பஞ்ச் டயலாக் பேசிய முதலமைச்சர் மவுனமாக இருக்கிறார். மின்வெட்டுக்குப் பதிலும் சொல்வதில்லை.

பத்திரிகையாளர்களையும் சந்திப்பது இல்லை. பொறுப்பாக பதில்சொல்ல வேண்டிய மின்துறை அமைச்சரோ தினம் ஒரு Conspiracy theory எழுதி அதை ஊடகங்களிடம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார். தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க “Fake Reels” போடுவது போல் தினமும் திசை திருப்பும் வேலையை மட்டும் செய்கிறார்.

“ஃபியூஸ் கேரியரை திருடுகிறார்கள்” என்று சொல்லி ஒரு சிசிடிவி கேமரா வீடியோவை பதிவிடுகிறார் அமைச்சர். பகலில் நடக்கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின் தடை ஏற்படுகிறது? என்று சாதாரண பாமரனுக்கும் கேள்வி எழும் என்பதை அமைச்சர் யோசிக்கவில்லையா? ஃபியூஸ் திருடு போனால் மொத்தமாக தானே மின்சாரம் போக வேண்டும்? விட்டுவிட்டு போவது எப்படி? பிரச்சினையைதீர்ப்பதற்குப் பதில் அமைச்சர் கதை அளக்கிறார்.

கஷ்டப்படும் மக்கள் காதில் பூ சுத்துகிறார். அடுத்து “ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்” என்றார்.காவல்துறையே விசாரித்து அப்படி காணாமல் போன “ஹார்ட் டிஸ்க்குகளில்” முக்கியத் தகவல்கள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டது. “ஹார்ட் டிஸ்க்” திருட்டுக்கும் “கரன்ட் கட்டுக்கும்” என்ன சம்பந்தம்? மூன்றாவதாக “மின்வாரியப் பணியாளர்கள் சதி செய்கிறார்கள்” எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் களத்தில் நிற்கும் தனது பணியாளர்கள் மீதே பழி போட்டார்.

மக்களும் குழந்தைகளும் துன்பத்தில் இருப்பதை ரசிக்க மின் துறை பணியாளர்கள் என்ன அவர்களின் தலைவர் போன்றவர்கள் என்று நினைக்கிறாரா அமைச்சர்? தன் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டகரன்ட் கட் காரணம் குறித்து இப்படியா கப்சா விடுவது?

தவெக ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம்“மின்வெட்டால் பள்ளிக்கு விடுமுறை விடும்”அவலம் தான்! தங்கள் பயிர்கள் தண்ணீர் இன்றி காய்வதால் விவசாயிகள் போராடும் துயரம்தான்! பத்திரிக்கையாளர்களை பார்த்தவுடன் பவர் கட்குறித்து அமைச்சர் சொல்லும் காரணங்கள் எல்லாமே இந்த தவெக அரசு சீரான மின்சாரத்தை அளிக்க முடியாமல் திணருகிறது என்பதுதான்!

ஆனால் எதனால் மின்வெட்டு நடக்கிறது? என்பதுபற்றி அதிகாரிகளை வைத்து அமைச்சரோ, அமைச்சரை வைத்து முதலமைச்சரோ ஒரு ரிவ்யூ மீட்டிங்காவது நடத்தியிருக்கிறார்களா? இல்லை! எதுவுமே இல்லை! இதுவும் தவெக ஆட்சியில்நடத்துள்ள மாற்றம்தான்! ஒரே மாதத்தில் மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள படு மோசமான நிர்வாக தோல்வி இந்த ஆட்சியின் மாற்றம்தான்!

தமிழ்நாட்டின் மின் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்பது எந்த அரசும் உணர வேண்டிய உண்மை. அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப திறமையாக நிர்வகித்து- மக்களை இன்னலுக்கு உட்படாமல் காப்பதுதான் ஆட்சியின் நிர்வாகத் திறமை. அதைத்தான் எங்கள் தலைவர் தலைமையிலானதிராவிட மாடல் அரசு செய்தது. புள்ளிவிவரங்களுடன் சொல்ல வேண்டுமென்றால்,2021ல் அதிகபட்ச உச்சமாக 16,481 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. 2022ல் 17,196மெகாவாட், 2023ல் 18,053 மெகாவாட், 2024ல் 19,049, 2025ல் 20,148 மெகாவாட், 2026 ஏப்ரலில் 20,974 மெகாவாட் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்தாலும், திராவிட மாடல் ஆட்சி இருந்தவரை சீரான மின்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்கியிருக்கிறோம்.

சென்னையைப் பொருத்தவரை கடந்த ஆண்டு மின்தேவை 4,663 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. 2024ல் 4,769 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. அப்படி இருந்தாலும் மின்வெட்டு எங்குமே நடக்கவில்லை. பொதுமக்கள் நள்ளிரவில் கைக்குழந்தைகளுடன், வயதானவர்களுடன், நோயாளிகளுடன் தெருவுக்கு வந்து போராடும் நிலை ஏற்படவில்லை. அது மட்டுமா? இந்தியாவிலேயே மிக குறைவான மின்வெட்டு கொண்ட மாநிலம் தமிழ்நாடு. வளர்ந்த நாடுகளுக்கு இணையான சேவையை வழங்குகிறது என்று ஒன்றிய அமைச்சரே தமிழ்நாட்டைப் பாராட்டினார்.

கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் 2 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி தடையில்லா மின்சாரம் கொடுத்தோம். நாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு வருவாய்க்கும், செலவினத்திற்கும் இடையே இருந்த இடைவெளியை 5000 கோடி ரூபாயாகக் குறைத்தது திராவிட மாடல் ஆட்சி.

எண்ணற்ற மின் உற்பத்திக்கான திட்டங்கள், துணை மின் நிலையம், மின்வழித்தடம், மின்மாற்றிகள் அமைத்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 90,000 மின்மாற்றிகள் புதியதாகவும், பழுதடைந்த மின்மாற்றிகளை மாற்றியும் மின்வாரியத்தின் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது திராவிட மாடல் ஆட்சியில்தான்!

ஆகவே, நிர்வாகம் தெரியாமல் மற்றவர்கள் மீது பழி போடுவதற்கே “பத்திரிக்கையாளர் சந்திப்பை” பயன்படுத்துவதை மின்துறை அமைச்சர் கைவிட்டு, மின்வெட்டு பிரச்சனையை தீர்த்து பொதுமக்கள் இரவில் நிம்மதியாக உறங்க, பள்ளிக்கூடங்கள் மூடாமல் இருக்க, விவசாயிகள் வேதனைக் கண்ணீர் வடிக்காமல் இருக்க த.வெ.க அரசுஇனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்ஸ்டா இன்ஃப்ளூயன்ஸர்களுக்கு கண்டண்ட் கொடுக்கும் வேலையை செய்யாமல், ரியலாக நிர்வாகம் செய்ய முயலவேண்டும். மு.க.ஸ்டாலின் சொன்னதுபோல ”பலரை சில காலம் ஏமாற்றலாம்; சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது” என்பதை மின்வெட்டை தடுப்பது எப்படி எனத் தெரியாமல் தத்தளிக்கும் மின்துறை அமைச்சரும், இப்படியொரு திறமையற்ற அமைச்சரை நியமித்து மக்களை சொல்லொனாத் துயரத்திற்கு ஆளாக்கியிருக்கும் முதல்வரும் “ரீல்ஸை” மறந்து “ரியாலிட்டிக்கு” வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.