惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
有赞技术团队
有赞技术团队
博客园_首页
H
Help Net Security
GbyAI
GbyAI
aimingoo的专栏
aimingoo的专栏
V
Visual Studio Blog
The Cloudflare Blog
腾讯CDC
Jina AI
Jina AI
Last Week in AI
Last Week in AI
月光博客
月光博客
博客园 - 叶小钗
Google DeepMind News
Google DeepMind News
B
Blog RSS Feed
Blog — PlanetScale
Blog — PlanetScale
人人都是产品经理
人人都是产品经理
Engineering at Meta
Engineering at Meta
Y
Y Combinator Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 聂微东
爱范儿
爱范儿
N
Netflix TechBlog - Medium
F
Fortinet All Blogs

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நிலக்கரி இறக்குமதியில் ரூ.487 கோடி முறைகேடு புகார்: 4 நிற...
2026-05-19 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: நிலக்​கரி இறக்​கும​தி​யில் ரூ.487 கோடி முறை​கேடு செய்​த​தாக தொழில​திபர் அகமது புஹாரி​யுடன் தொடர்​புடைய 4 நிறு​வனங்​கள் மீது அமலாக்​கத் துறை பதிவு செய்​திருந்த வழக்கை சென்னை சிபிஐ சிறப்பு நீதி​மன்​றம் ரத்து செய்​துள்​ளது.

கடந்த 2011-12 மற்​றும் 2014-15 ஆகிய கால​கட்​டங்​களில் இந்​தோ​னேசி​யா​வில் இருந்து தரம் குறைந்த நிலக்​கரியை இந்​தி​யா​வுக்கு இறக்​குமதி செய்​ததன் மூலம் மத்​திய அரசுக்கு ரூ.487 கோடி வரை இழப்பு ஏற்​படுத்தி முறை​கேடு செய்​த​தாக சென்​னையை தலை​மை​யிட​மாகக் கொண்ட கோஸ்​டல் எனர்ஜி நிறு​வனம், அதன் இயக்​குந​ரான தொழில​திபர் அகமது ஏஆர் புஹாரி, கோஸ்​டல் எனர்​ஜென், துபாயை தலை​மை​யிட​மாகக் கொண்ட டிஎம்​சிசி மற்​றும் எல்​எல்சி நிலக்​கரி மற்​றும் எண்​ணெய் நிறு​வனங்​கள், பிரிசி​யஸ் எனர்ஜி ஹோல்​டிங்ஸ், மொரீஷியஸில் உள்ள மியூச்​சுரியா எனர்ஜி ஹோல்​டிங்ஸ் மீது சிபிஐ வழக்​குப்​ப​திவு செய்​தது.

இந்த வழக்​கின் அடிப்​படை​யில் கடந்த 2018-ம் ஆண்டு அமலாக்​கத் துறை​யும் அகமது ஏஆர் புஹாரி மற்​றும் இந்​நிறு​வனங்​களுக்கு எதி​ராக சட்​ட விரோதப் பணப்​பரி​மாற்ற தடைச்​சட்​டத்​தின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​திருந்​தது. இந்த வழக்​கில் சென்னை சிபிஐ நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரி​கையை அமலாக்​கத் துறை தாக்​கல் செய்​தது.

இந்​நிலை​யில், அகமது ஏஆர் புஹாரிக்கு எதி​ராக சிபிஐ பதிவு செய்​திருந்த அடிப்​படை மூல வழக்கை டெல்லி உயர் நீதி​மன்​றம் கடந்​தாண்டு ரத்து செய்​தது. அதன் அடிப்​படை​யில் அகமது ஏஆர் புஹாரி மற்​றும் பிரிசி​யஸ் எனர்​ஜி, மியூச்​சுரியா எனர்ஜி ஆகிய நிறு​வனங்​களுக்கு எதி​ராக அமலாக்​கத் துறை பதிவு செய்​திருந்த வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றம் ரத்து செய்​தது.

எஞ்​சிய கோஸ்​டல் எனர்​ஜி, கோஸ்​டல் எனர்​ஜென் மற்​றும் 2 துபாய் நிறு​வனங்​கள் என 4 நிறு​வனங்​களுக்கு எதி​ராக அமலாக்​கத் துறை பதிவு செய்​திருந்த வழக்​கு​கள் மீதான விசா​ரணை சென்னை சிபிஐ சிறப்பு நீதி​மன்ற நீதிபதி ஜெ.ஓம்​பிர​காஷ் முன்​பாக நடந்​தது.

அப்​போது அமலாக்​கத் துறை தரப்​பில் சிறப்பு வழக்​கறிஞர் என்​.ரமேஷ், எதிர்​மனு​தா​ரர்​கள் தரப்​பில் வழக்​கறிஞர்​கள் பி.சதீஷ்சுந்​தர், என்​.​பாலாஜி உள்​ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்​டனர். அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி ஜெ.ஓம்​பிர​காஷ் பிறப்​பித்​துள்ள தீர்ப்​பில், “ஏற்​கெனவே அகமது ஏஆர் புஹாரிக்கு எதி​ராக சிபிஐ பதிவு செய்​திருந்த அடிப்​படை மூல வழக்கை டெல்லி உயர் நீதி​மன்​ற​மும், மற்ற இரு நிறு​வனங்​களுக்கு எதி​ரான அமலாக்​கத் துறை வழக்கை சென்னை உயர் நீதி​மன்​ற​மும் ரத்து செய்​துள்​ள​தால், எஞ்​சிய 4 நிறு​வனங்​களுக்கு எதி​ராக அமலாக்​கத் துறை பதிவு செய்​திருந்த வழக்​கு​களும் ரத்து செய்​யப்​படு​கின்​றன.

ஒரு​வேளை எதிர்​காலத்​தில் அகமது ஏஆர் புஹாரி மற்​றும் அவர் தொடர்​புடைய இந்​நிறு​வனங்​கள் மீது சிபிஐ பதிவு செய்​திருந்த அடிப்​படை மூல வழக்கு மீண்​டும் உயிர்ப்​பிக்​கப்​பட்​டால் அமலாக்​கத் துறை​யும் இந்த சட்​ட​விரோதப் பணப்​பரி​மாற்ற வழக்கை மீண்​டும் தொடரலாம்” என அனு​ம​தி​யளித்​து உத்​தர​விட்​டுள்​ளார்​.