




















அண்ணா அறிவாலயம்: கோப்புப்படம்
Updated on:
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூன் 17ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக சட்டப்பேரவைக் கட்சியின் கொறடா எ.வ.வேலு வெளியிட்ட அறிவிப்பில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் 17-06-2026 புதன்கிழமை மாலை 6.00 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கில்" நடைபெறும். அதுபோது கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 18 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுவது, கடந்த ஒரு மாத கால தவெக ஆட்சி குறித்து எவ்வாறு விமர்சனங்களை முன்வைப்பது என்பது திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக இந்தக் கூட்டம் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。