惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Recent Announcements
Recent Announcements
人人都是产品经理
人人都是产品经理
月光博客
月光博客
博客园 - 三生石上(FineUI控件)
GbyAI
GbyAI
博客园 - 司徒正美
美团技术团队
Vercel News
Vercel News
IT之家
IT之家
U
Unit 42
Y
Y Combinator Blog
罗磊的独立博客
Microsoft Security Blog
Microsoft Security Blog
MongoDB | Blog
MongoDB | Blog
Jina AI
Jina AI
V
Visual Studio Blog
B
Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
MyScale Blog
MyScale Blog
博客园 - 叶小钗
A
About on SuperTechFans
WordPress大学
WordPress大学
Hugging Face - Blog
Hugging Face - Blog
B
Blog RSS Feed

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
4 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவையில் அரசு தயாரித்த உரைய...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழக அரசு தயாரித்து அளித்த உரையை சட்​டப்​பேர​வை​யில் ஆளுநர் அர்​லேகர் எவ்​வித மாற்​ற​மும் இன்றி முழு​மை​யாக வாசித்​தார். கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில் ஆளுந​ராக இருந்த ஆர்​.என்​.ர​வி, 2023-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டத்​தொடரில், அரசு தயாரித்த உரை​யில் சில​வற்றை தவிர்த்​தும், சில தகவல்​களை சேர்த்​தும் வாசித்​தார்.

அதன்​பிறகு 2024, 2025, 2026-ம் ஆண்​டு​களில் பேர​வைக் கூட்​டத்​தின் தொடக்​கத்​தில் தேசிய கீதம் இசைக்​கப்​பட​வில்லை என்று அதிருப்தி தெரி​வித்​து, தனது உரையை வாசிக்​காமல் வெளி​யேறி​னார். இவ்​வாறு கடந்த 4 முறை​யாகவே அரசு தயாரித்து அளித்த உரையை சட்​டப்​பேர​வை​யில் ஆளுநர் முழு​மை​யாக படிக்​க​வில்​லை.

இதற்​காக தீர்​மானம் கொண்​டு​வந்​து, அரசு தயாரித்து அளித்த ஆளுநர் உரையே அவைக்​குறிப்​பில் பதிவு செய்​யப்​பட்டு வந்​தது. இந்​நிலை​யில், தவெக அரசின் முதல் சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் உரை​யுடன் நேற்று தொடங்​கியது. இதில் தற்​போதைய பொறுப்பு ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் தனது உரையை முழு​மை​யாக வாசிப்​பாரா என்ற சந்​தேகம் எழுந்​தது.

ஆனால், நேற்​றைய கூட்​டத்​தில் தமிழக அரசு தயாரித்த உரையை எவ்​வித மாற்​ற​மும் இன்றி ஆளுநர் அர்​லேகர் முழு​மை​யாக வாசித்​தார். பதவி​யேற்பு விழாக்​களில் மத்​திய அரசு அறி​வுறுத்​தலின்​படி, வந்தே மாதரம், தேசிய கீதத்தை தொடர்ந்து 3-வ​தாக தமிழ்த்​தாய் வாழ்த்து பாடப்​பட்​டது சர்ச்​சை​யானது.

இந்த நிலை​யில், ஆளுநரின் வேண்​டு​கோளை ஏற்​று, கூட்​டத் தொடரின் தொடக்​கத்​தி​லும் தேசிய கீதம் இசைக்​கப்​பட்​ட​தால், 4 ஆண்​டு​கால பிரச்​சினை சுமுக​மாக முடிவுக்கு வந்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

இதுதொடர்​பாக, ஆளுநர் அர்​லேகர் தனது சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: தமிழக சட்​டப்​பேர​வை​யில் புதிய உதயம் தோன்​றிய நாள் இன்று (ஜூன் 18) என்​பதை மகிழ்ச்​சி​யுடன் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

சில ஆண்​டு​களுக்​குப் பிறகு ஆளுநரின் முழு உரை​யும் எவ்​வித இடையூறும் இன்​றி, சட்​டப்​பேர​வை​யில் வாசிக்​கப் பெற்​றது மனநிறை​வைத் தரு​கிறது. முதல்​முறை​யாக பேர​வை​யில் ஆளுநர் உரை​யின் தொடக்​கத்​தி​லும், நிறை​வாக​வும் தேசிய கீதம் பாடப்​பட்ட சரித்​திர நிகழ்வு நடை​பெற்​றுள்​ளது.

தமிழக அரசு மற்​றும் மக்​கள் மாளிகை இடையே இணக்​க​மான சூழல் நிலவ வேண்​டும் என்ற எதிர்​பார்ப்பை பூர்த்தி செய்​து, மக்​களாட்​சி​யின் மாண்பை நிலை​நாட்​டும் வித​மாக இது அமைந்​துள்​ளது.

ஒரு ஜனநாயக ஆட்​சி​யானது, ஒருங்​கிணைந்த, இணக்​க​மான உறவை அனைத்து தரப்​பிலும் நிலை​நாட்​டி, மக்​களின் தேவை​களைப் பூர்த்தி செய்​வதையே நிலை​யான, முன்​னு​தா​ரண​மான நோக்​க​மாகக் கொண்டு செயல் பட வேண்​டும். அந்த இலக்கை நோக்கி நாம் அனை​வரும் இணைந்து பயணிக்​கத் தொடங்கி இருப்​பது மனதுக்கு நிறை​வைத்​ தரு​கிறது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.