惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
博客园 - 司徒正美
博客园 - 【当耐特】
爱范儿
爱范儿
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
IT之家
IT之家
人人都是产品经理
人人都是产品经理
雷峰网
雷峰网
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
大猫的无限游戏
大猫的无限游戏
月光博客
月光博客
宝玉的分享
宝玉的分享
V
V2EX
S
SegmentFault 最新的问题
V
Visual Studio Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
Martin Fowler
Martin Fowler
Jina AI
Jina AI
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园_首页
L
LangChain Blog
D
Docker
腾讯CDC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
டெல்லியில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் 2 நாள் ஆலோசனை: இறுதிக...
செய்திப்பிரிவு · 2026-06-25 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். அமெரிக்க பிரதிநிதிகளுடன் டெல்லியில் நடத்திய 2 நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் தகவலை அமைச்சர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2-வது முறை​யாக பதவி​யேற்ற பின், உலக நாடு​களுக்​குப் பரஸ்பர வரி​வி​திப்பு முறையை கொண்டு வந்​தார். அமெரிக்க பொருட்​களுக்கு இந்​தியா போன்ற நாடு​கள் 100 சதவீதத்​துக்​கும் அதி​க​மாக வரி விதிப்​ப​தாக அதிபர் ட்ரம்ப் குற்​றம் சாட்​டி​னார்.

இந்​தி​யா​வில் இருந்து அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு 25 சதவீத வரி விதிக்​கப்​பட்டு வந்​தது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வதற்கு அமெரிக்கா தடை விதித்​திருந்​தது. இதை ஐரோப்​பிய நாடு​களும் பின்​பற்றி ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதைத் தவிர்த்து வளை​குடா நாடு​களிடம் கச்சா எண்​ணெய் வாங்​கத் தொடங்​கின. ரஷ்​யா​விடம் இருந்து சீனா மற்​றும் இந்​தியா போன்ற நாடு​கள் கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால்​தான், உக்ரைன் போரை தொடர்ந்து நடத்​து​வதற்​கான நிதி ரஷ்​யா​வுக்கு கிடைப்​ப​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்​றம் சாட்​டி​னார்.

இதற்கு அபராத​மாக இந்​தி​யா​வுக்கு கூடு​தலாக 25 சதவீத வரி விதிப்​ப​தாக அதிபர் ட்ரம்ப் அறி​வித்​தார். இதனால் இந்​தி​யா​வுக்கு அமெரிக்கா விதித்த இறக்​குமதி வரி 50 சதவீத​மாக உயர்ந்​தது. இது அமெரிக்கா​வுக்​கான இந்​திய ஏற்​றும​தி​யைக் கடுமை​யாக பாதித்​தது. இதன் காரண​மாக இந்​தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்​சு​வார்த்தை தடைபட்​டது.

இதையடுத்து ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்குமதியை இந்​தியா குறைக்​கத் தொடங்​கியது. அதன்​பின் இந்​தியா - அமெரிக்கா வர்த்​தகம் தொடர்​பான பேச்சுவார்த்தைகள் மீண்​டும் தொடங்​கின. அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்​கா​வில் இருந்து 500 பில்​லியன் டாலர் அளவுக்கு இறக்​குமதி செய்​ய​வும், முதலீடு செய்​ய​வும் இந்​தியா உறு​தி​யளித்​துள்​ளது. இதன் காரண​மாக, இந்​திய ஏற்​றும​தி​கள் மீது விதிக்​கப்​பட்ட வரி 25 சதவீதத்​தில் இருந்து 18 சதவீத​மாக குறைக்க அமெரிக்கா ஒப்​புக் கொண்​டது.

பிரான்​ஸில் நடை​பெற்ற ஜி7 கூட்​டத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி ஆகியோர் நீண்ட இடைவெளிக்​குப் பின் நேரில் சந்​தித்து பேசினர். அப்​போது இந்​தியா - அமெரிக்கா இடையே மிகச் சிறந்த வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று அதிபர் ட்ரம்ப் அறி​வித்​தார்.

இந்​தப் பேச்​சு​வார்த்​தைகளின் முன்​னேற்​றத்தை ஆய்வு செய்வதற்காக, அமெரிக்க வர்த்​தகப் பிர​தி​நிதி தூதர் ஜேமிசன் கிரீர் மற்​றும் அவரது குழு​வினர் டெல்லி வந்​துள்​ளனர். அவர்களுடன் மத்​திய வர்த்​தகத் துறை அமைச்​சர் பியூஷ் கோயல் தலை​மையி​லான மத்​திய அரசு குழு​வினர் நேற்​று​முன்​தினம் பேச்சு​வார்த்​தையைத் தொடங்​கினர். இருதரப்பு பேச்​சு​வார்த்தை டெல்​லி​யில் நேற்​றுடன் முடிந்​தது.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்​தில் அமைச்​சர் பியூஷ் கோயல் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

இந்​தியா - அமெரிக்கா இடையி​லான வர்த்​தகப் பேச்​சு​வார்த்​தைகளின் நிலை குறித்து அமெரிக்க வர்த்​தகப் பிர​தி​நிதி தூதர் ஜேமிசன் கிரீர் மற்​றும் அவரது குழு​வினருடன் விவா​தித்​தோம். பொருளா​தார உறவு​களை மேலும் வலுப்​படுத்​து​வதற்​கான வழிகளை நாங்​கள் ஆராய்ந்​தோம். இரு நாடு​கள் இடையே​யான பொருளா​தா​ரக் கூட்​டாண்​மையை மேம்​படுத்​து​வதற்​கான வழிகளை​யும் நாங்​கள் ஆராய்ந்​தோம். அமெரிக்க தூதர் கிரீரின் தலை​மைத்​து​வத்​தை​யும், நமது பேச்​சு​வார்த்​தைகளை ஆக்கப்பூர்வ​மான மற்​றும் தொலைநோக்கு சிந்​தனை​யுடன் முன்னோக்கி கொண்டு செல்​வ​தில் இரு குழுக்​களும் தொடர்ந்து மேற்​கொண்டு வரும் முயற்​சிகளை​யும் நான் பாராட்​டு​கிறேன். இவ்​வாறு பியூஷ் கோயல் கூறி​னார்.

டெல்​லி​யில் 2 நாட்​கள் நடை​பெற்ற வர்த்தக ஒப்​பந்​தப் பேச்​சு​வார்த்தை வெற்​றிகர​மாக முடிந்​துள்​ளது. இந்​தப் பேச்​சு​வார்த்​தை​யின் அடுத்​தகட்​ட​மாக ஒப்​பந்​தம் மேற்​கொள்​வதற்​கான நடவடிக்​கை​களில் இருதரப்​பும் மீண்​டும் ஆலோ​சனை நடத்​தும்​ என்​று மத்​தி​ய அரசு வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.