惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
爱范儿
爱范儿
博客园 - Franky
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
WordPress大学
WordPress大学
宝玉的分享
宝玉的分享
雷峰网
雷峰网
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
IT之家
IT之家
有赞技术团队
有赞技术团队
美团技术团队
Last Week in AI
Last Week in AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
大猫的无限游戏
大猫的无限游戏
The Cloudflare Blog
Jina AI
Jina AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Engineering at Meta
Engineering at Meta
T
Tailwind CSS Blog
J
Java Code Geeks
Martin Fowler
Martin Fowler
I
InfoQ
小众软件
小众软件
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்: சென்னை நேரு உள் விளை...
செய்திப்பிரிவு · 2026-05-06 · via hindutamil

தமிழக முதல்வராக விஜய் நாளை பதவியேற்க உள்ளார். சென்னையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தை நேற்று ஆய்வு செய்த அதிகாரிகள். படம்: ம.பிரபு

Updated on: 

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்று தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​துள்ள தவெக ஆட்​சி​யமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு விஜய் கடிதம் அனுப்​பி​யுள்​ளார். ஆளுநர் அழைப்பு விடுத்த பிறகு, முதல்​வ​ராக விஜய் நாளை பதவி​யேற்க உள்​ளார். சென்னை நேரு உள் விளை​யாட்டு அரங்​கில் பதவி​யேற்பு விழாவை பிரம்​மாண்​ட​மாக நடத்த ஏற்​பாடு​கள் முழு​வீச்​சில் நடந்து வரு​கின்​றன. ‘மாதம் 200 யூனிட் இலவச மின்​சா​ரம், தமிழகம் முழு​வதும் அனைத்து பேருந்​துகளி​லும் பெண்​களுக்கு இலவசப் பயணம்’ ஆகிய 2 முக்​கிய திட்​டங்​களுக்​கான கோப்​பு​களில் அவர் முதல் கையெழுத்​திடு​வார் என்று கூறப்​படு​கிறது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 108 இடங்​களைக் கைப்​பற்​றி, தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​துள்ள தவெக, ஆட்சி அமைப்​ப​தற்​கான பணி​களில் தீவிர​மாக இறங்​கி​யுள்​ளது. இதுதொடர்​பாக சென்னை பனையூரில் உள்ள கட்​சித் தலைமை அலு​வல​கத்​தில், வெற்றி பெற்ற வேட்​பாளர்​களு​டன் கட்​சித் தலை​வர் விஜய் நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார்.

முன்​ன​தாக, முதல்​வருக்கு இணை​யான பாது​காப்​புடன் அலு​வல​கம் வந்த விஜய்க்கு தொண்​டர்​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர். பின்​னர், தவெக கொள்​கைத் தலை​வர்​களின் சிலைகளுக்கு அவர் மாலை அணி​வித்து மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார். வெற்றி பெற்ற வேட்​பாளர்​களுக்கு வாழ்த்து தெரி​வித்​தார்.

இதையடுத்து நடை​பெற்ற கூட்​டத்​தில், தவெக சட்​டப்​பேர​வைக் குழுத் தலை​வ​ராக விஜய் ஒரு​மன​தாகத் தேர்வு செய்​யப்​பட்​டார். இதற்​கான உறு​தி​மொழிப் பத்​திரத்​தில் அனைத்து வெற்றி வேட்​பாளர்​களும் கையெழுத்​திட்​டனர். இத்​தேர்​தலில் பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டு, இரண்​டிலும் வெற்றி பெற்​றுள்ள விஜய், சட்ட விதி​களின்​படி, ஒரு தொகு​தி​யில் ராஜி​னாமா செய்ய வேண்​டும்.

அதன்​படி, திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜி​னாமா செய்ய விஜய் முடிவு செய்​துள்​ள​தாகத் தெரி​கிறது. அங்கு நடை​பெற உள்ள இடைத்​தேர்​தலில், முன்​னாள் அமைச்​சர் கு.ப.கிருஷ்ணனை வேட்​பாள​ராக நிறுத்​த​வும் நேற்​றைய கூட்​டத்​தில் ஆலோ​சிக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே, ஆட்​சி​யமைக்க உரிமை கோரி ஆளுநர் அர்லேகருக்கு விஜய் கடிதம் எழு​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக ஆளுநர் மாளி​கைக்கு மின்​னஞ்​சலில் அனுப்​பி​யுள்ள கடிதத்​தில், மே 7-ம் தேதி (நாளை) பதவி​யேற்க தயா​ராக உள்​ள​தாக​வும், 2 வார காலத்​துக்​குள் சட்​டப்​பேர​வை​யில் பெரும்​பான்​மையை நிரூபிப்​போம் என்​றும் அதில் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக ஆளுநரை இன்று சந்​திக்​க​வும் விஜய் திட்​ட​மிட்​டுள்​ளார். அப்​போது, ஆட்​சி​யமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரிடம் வழங்​கு​வார்.

ஆளுநர் அழைப்பு விடுக்​கும்​பட்​சத்​தில், முதல்​வ​ராக விஜய் நாளை பதவி​யேற்​பார் என்று கூறப்​படு​கிறது. அவருடன் அமைச்​சர்​களும் பதவி​யேற்க உள்​ளனர். அமைச்​சர​வை​யில் செங்​கோட்​டையன், ஜேசிடி. பிர​பாகர், ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா, சிடிஆர். நிர்​மல்​கு​மார், மரிய வில்​சன், ராஜ்மோகன், அருண்​ராஜ், சத்​தி​ய​பா​மா, விஜயலட்​சுமி, ஸ்ரீநாத் உள்​ளிட்​டோர் இடம்​பெற வாய்ப்பு உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

பதவி​யேற்பு விழாவை சென்னை நேரு உள் விளை​யாட்டு அரங்​கில் பிரம்​மாண்​ட​மாக நடத்த ஏற்​பாடு​கள் நடந்து வரு​கின்​றன. இதையொட்டி, தவெக வெற்றி வேட்​பாளர்​கள் அனை​வரும் மாமல்​லபுரம் அரு​கில் உள்ள நட்​சத்​திர விடு​தி​யில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். இதற்​கிடையே, முதல்​வ​ராக நாளை பதவி​யேற்​கும் விஜய், மக்​கள் நலன் சார்ந்த 2 முக்​கிய திட்​டங்​களுக்​கான கோப்​பு​களில் கையெழுத்​திட உள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

‘‘தகு​தி​யுள்ள வீடு​களுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்​சா​ரம் வழங்​கப்​படும். அதே​போல, நகரப் பேருந்​துகள் மட்​டுமின்​றி, மாநிலம் முழு​வதும் இயங்​கும் அனைத்து அரசுப் பேருந்​துகளி​லும் பெண்​கள் கட்​ட​ணமின்றி பயணிக்​கும் வகை​யில் ‘வெற்​றிப் பயணம்’ திட்​டம் செயல்​படுத்​தப்​படும்’ என்று தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது முக்​கிய வாக்​குறு​தியை விஜய் அளித்​திருந்​தார். பதவி​யேற்​றதும், இந்த இரு முக்​கிய திட்​டங்​களுக்​கான கோப்​பு​களில் விஜய் முதல் கையெழுத்​திடு​வார் என்று தவெக வட்​டாரத்​தில் கூறப்​படு​கிறது.

தலைமைச் செயலர் ஆலோ​சனை: பதவி​யேற்பு விழா குறித்து தலை​மைச் செயலர் சாய்​கு​மார் தலை​மை​யில் நேற்று ஆலோ​சனை நடை​பெற்​றது. இதில், உள்​துறைச் செயலர் மணி​வாசன், பொதுத் துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தாக்​கர், டிஜிபி சந்​தீப்​ ​ராய்​ ரத்​தோர், சென்​னை ​காவல்​ ஆணை​யர்​ அபின்​ தினேஷ் மோடக்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​. விழா நடை​பெறும்​ நேரு உள்​விளை​யாட்​டு அரங்​கில்​ செய்​யப்​பட வேண்​டிய ஏற்​​பாடு​கள்​, ​பாது​காப்பு அம்​சங்​கள்​ குறித்​து இக்​கூட்​டத்​தில்​ ஆலோ​சிக்​கப்​பட்​டது.