






















சென்னை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் நிர்மல்குமார் கடந்த மே 15-ம் தேதி தரிசனம் செய்தார். அமைச்சரின் தரிசனத்துக்கு பிறகே கோயில் நடை தாமதமாக அடைக்கப்பட்டது. அதேபோல, கருவறையில் தரிசனம் செய்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை எதிர்த்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் அமர்வு திருப்பரங்குன்றத்துக்கு அமைச்சர் சென்றபோது என்ன நடந்தது என அறநிலையத்துறை செயலாளர், அடுத்த வாரம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。