惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

美团技术团队
T
The Blog of Author Tim Ferriss
C
Check Point Blog
博客园_首页
J
Java Code Geeks
云风的 BLOG
云风的 BLOG
L
LangChain Blog
小众软件
小众软件
Stack Overflow Blog
Stack Overflow Blog
爱范儿
爱范儿
Vercel News
Vercel News
博客园 - Franky
V
V2EX
IT之家
IT之家
U
Unit 42
N
Netflix TechBlog - Medium
腾讯CDC
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
罗磊的独立博客
博客园 - 叶小钗
H
Help Net Security
V
Visual Studio Blog
GbyAI
GbyAI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உலகக் கோப்பையில் முதல் வெற்றி: நியூஸிலாந்துக்கு 3-1 அதிர்...
ஆர்.முத்துக்குமார் · 2026-06-22 · via hindutamil

Updated on: 

வான்கூவரில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை பிரிவு-ஜி போட்டியில் நியூஸிலாந்து அணியை 3-1 என்ற கோல்கள் கணக்கில் நொறுக்கிய எகிப்து உலகக் கோப்பையில் தங்கள் முதல் வெற்றியை ஈட்டியது.

இது மூலம் ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று ‘ஜி’ பிரிவில் ஈரான், பெல்ஜியத்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது. 1934, 1990 மற்றும் 2018 உலகக் கோப்பை தொடர்களில் வெற்றி பெற முடியாமல் இருந்த எகிப்துக்கு இது முதல் உலகக் கோப்பை வெற்றியாக அமைந்தது. இது எகிப்து ரசிகர்களுக்கு கொண்டாட்ட விருந்தாக அமைந்தது.

ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் நியூஸிலாந்தின் சர்மான் முதல் கோலை அடித்து முன்னிலை அளித்தார். ஆனால், அதன் பிறகு இடைவேளையைத் தாண்டி புதிய ஆக்ரோஷத்தைக் காட்டிய எகிப்து அணி 3 கோல்களைத் திணித்தது. 58-வது நிமிடத்தில் எகிப்தின் முஸ்தபா ஜீகோ முதல் கோலை அடித்து நியூஸிலாந்தை சமன் செய்தார்.

ஆனால், அதன் பிறகான ஓர் ஆக்ரோஷ உந்துதலில் எகிப்து தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தைத் தொடுக்க நியூஸிலாந்தினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முகமது சாலா 67-வது நிமிடத்திலும் ட்ரெசெகெட் 82-வது நிமிடத்திலும் கோல்களை அடித்தனர். ஜீகோ இன்னொரு கோலையும் அடித்திருந்தால் அது எகிப்துக்கு 4 கோல்களாக ஆகியிருக்கும். ஆனால், நியூஸிலாந்து கோல் கீப்பர் குரோகோம்ப் அற்புதமாகத் தடுத்தார்.

ஒருவிதத்தில் முகமது சாலாதான் இந்த வெற்றிக்குக் காரணம் எனலாம். ஒரு கோல் அடித்ததோடு இன்னொரு கோல் போட சாதனமாகத் திகழ்ந்தார்.

போட்டியின் முதல் பாதியில் எகிப்தின் ஆட்டம் மந்தமாகவே காணப்பட்டது. அதன் காரணமாக, அவர்களின் நீண்டகால வெற்றியற்ற பயணம் தொடரும் என்றே தோன்றியது. அந்த நேரத்தில், ஒரு கார்னர் கிக் வாய்ப்பில் எகிப்து வீரர்களின் பலவீனமான தடுப்பைப் பயன்படுத்திய நியூஸிலாந்து வீரர் ஃபின் சுர்மான் சக்திவாய்ந்த ‘ஹெடர்’ மூலம் கோல் அடித்து நியூசிலாந்தை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

முதல் பாதியில் முகமது சாலாவின் குறிப்பிடத்தக்க முயற்சி பெனால்டி பகுதி எல்லையிலிருந்து எடுத்த ஃப்ரீ-கிக் மட்டுமே; ஆனால் அந்த வாய்ப்பு கோலாகத் தகையவில்லை. இலக்கைத் தவறவிட்டது.

இடைவேளையில் தலைமைப் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன் அளித்த கடுமையான அறிவுரைக்குப் பிறகு எகிப்தின் ஆட்டத்தில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டது. இரண்டாம் பாதியில் அவர்கள் வேகமும் தாக்குதலும் நிறைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ச்சியான அழுத்தத்தால் நியூஸிலாந்து தனது பகுதியிலேயே தற்காப்பில் மூழ்கியது.

59-வது நிமிடத்தில், நியூஸிலாந்தின் முதல் கோலைப் போன்றே ஒரு கார்னர் வாய்ப்பில் எவராலும் கவனிக்கப்படாமல் இருந்த முஸ்தபா ஜீகோ, முகமது ஹானி வழங்கிய துல்லியமான கிராஸை ஹெடர் மூலம் கோலாக மாற்றி ஆட்டத்தை சமன் செய்தார்.

சமநிலை கோலுக்குப் பத்து நிமிடங்களுக்குள், வேகமான எதிர்தாக்குதலில் சாலா தனது முத்திரையை பதித்தார். ஜீகோவுடன் பாஸ் பரிமாற்றம் செய்த அவர், தனது வழக்கமான பாணியில் பந்தை வலைக்குள் செலுத்தி எகிப்தை முதல் முறையாக முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

அதோடு நிற்காமல், 82-வது நிமிடத்தில் இடதுபுறத்தில் இருந்து சாலா எடுத்த ஃப்ரீ கிக்கை மாற்று வீரர் டிரெசெகெட் அபாரமான டைவிங் ஹெடர் மூலம் கோலாக்கினார். அந்த கோல் எகிப்தின் வெற்றியை உறுதி செய்ததுடன், நாக்-அவுட் சுற்றுக்கான கதவையும் அவர்களுக்கு அகலமாகத் திறந்தது.

பல ஆண்டுகளாக உலகக் கோப்பை வெற்றிக்காக காத்திருந்த எகிப்து ரசிகர்களுக்கு, வான்கூவரில் கிடைத்த இந்த வெற்றி மறக்க முடியாத வரலாற்று தருணமாக அமைந்தது.