


















Updated on
:
1 min read
சென்னை: காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் இப்போது தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் சில அதிகாரிகள் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அந்த வகையில், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் இப்போது கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாகவும், உளவுத் துறை கூடுதல் டிஜிபியாகவும் இருந்தவராவார்.
அதேவேளையில், பால் உற்பத்தி ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக இருந்த ராஜீவ் குமார் ஐபிஎஸ் இப்போது ஊனமாஞ்சேரி காவல் பயிற்சி பள்ளி டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
உளவுத் துறை ஐஜியாக இருந்த செந்தில்வேலன் ஐபிஎஸ் இப்போது தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் கே.மணிவாசன் பிறப்பித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。