
























“ரத்தத்தின் ரத்தமே” என்று எம்ஜிஆர் சொன்னபோதெல்லாம், ஏதோ தாங்களே கட்சிக்கு ரத்தம் கொடுத்ததைப் போன்று உணர்ந்தார்கள். இதனால் ஏகப்பட்ட நெருக்கடிகளையும் எதிர்கொண்டார்கள் எம்ஜிஆர் ரசிகர்கள். மிகவும் தீவிரமாக இருந்த அவர்களில் சிலரை ஜெயிலில் இருந்த ரவுடிகளை பரோலில் எடுத்து பழிதீர்த்த சம்பவங்களும் நடந்தன. இதனால், திமுக-வும் அதிமுக-வும் என்றைக்குமே சந்திக்க முடியாத எதிரெதிர் துருவங்களாக மாறிப் போயின. அதிமுக-வினரும் திமுகவினரும் பொது இடங்களில் கைகுலுக்கக் கூட தயங்கினார்கள். இத்தகையை நிலைப்பாடுதான் அதிமுக-வை முதல் தேர்தலிலேயே ஆட்சிக் கட்டிலிலும் அமரவைத்தது.
அதிமுக-வுக்கு ஜெயலலிதா தலைமையேற்ற பிறகு இந்தப் போக்கு இன்னும் தீவிரமானது. ‘தீய சக்தி’ என்ற வார்த்தை பிரயோகத்தை ஜெயலலிதா சர்வ சாதாரணமாய் உபயோகித்தார். 2021 தேர்தலில் தோற்றாலும் அதிமுகவை வலுவான எதிர்க்கட்சி நிலைக்கு கொண்டு வந்த பழனிசாமி, கடந்த 5 ஆண்டுகளில் கட்சியை கட்டுக்கோப்பாகவே வழிநடத்தினார். இவ்வாறாக அதிமுகவின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。