惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

量子位
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
IT之家
IT之家
T
Tailwind CSS Blog
WordPress大学
WordPress大学
S
SegmentFault 最新的问题
美团技术团队
博客园 - 叶小钗
V
V2EX
博客园 - Franky
大猫的无限游戏
大猫的无限游戏
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 【当耐特】
罗磊的独立博客
博客园_首页
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
爱范儿
爱范儿
宝玉的分享
宝玉的分享
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Jina AI
Jina AI
月光博客
月光博客
有赞技术团队
有赞技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இறால் பண்ணை, வேதித் தொழிற்சாலைகளில் அவசர ஆய்வு நடத்த வேண்...
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

Updated on: 

சென்னை: ​மாநிலத்​தில் உள்ள அனைத்து இறால் பண்​ணை​கள், கடல் உணவு பதப்​படுத்​தும் நிறு​வனங்​கள் மற்​றும் அபாயகர​மான வேதித் தொழிற்​சாலைகளைத் தமிழக அரசு உடனடி​யாக அவசர ஆய்​வுக்கு உட்​படுத்த தமிழ்​நாடு அறி​வியல் இயக்​கம் கோரிக்கை விடுத்​துள்​ளது.

இது தொடர்​பாக தமிழ்​நாடு அறி​வியல் இயக்​கத்​தின் மாநிலத் தலை​வர் திரு​நாவுக்​கரசு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் இயங்கி வரும் தனி​யார் கடல் உணவு பதப்​படுத்​தும் நிறு​வனத்​தில், ஜூன் 21-ம் தேதி ஏற்​பட்ட அமோனியா வாயுக் கசிவு காரண​மாக 7-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர்.

இந்​தச் சம்​பவம் மிகுந்த அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. கடல் உணவு​களை பதப்​படுத்​தத் தேவை​யான பனிக்​கட்​டிகளைத் தயாரிக்கஅமோனியா குளிர்​ப​தனப் பொருளாகப் பயன்​படுத்​தப்​படு​கிறது.

திரவ நிலை​யில் சேமிக்​கப்​படும் அமோனி​யாவை மைனஸ் 33.3 டிகிரி செல்​சி​யஸ் வெப்​ப நிலை​யில் பராமரிக்க வேண்​டும். இதற்​காகத் தொடர்ச்​சி​யான குளிர்​ப​தனச் சுழற்சி முறை​யும், சென்​சார்​களு​டன் கூடிய மூன்​றடுக்கு பாது​காப்பு எச்​சரிக்கை அமைப்​பும் கட்​டா​யம் இருக்க வேண்​டும்.

சுற்​றுச்சூழல் பாது​காப்​புச் சட்​டம் 1986-ன் ​படி, இந்த அமைப்​பு​கள் ஒவ்​வோர் ஆண்​டும் தணிக்கை செய்​யப்பட வேண்​டும். ஆனால் தற்​போது விபத்து நடந்த தொழிற்​சாலை​யில் இத்​தகைய எந்​தவொரு பாது​காப்பு விதி​முறை​களும் பின்​பற்​றப்​பட​வில்லை என்​பது வெளிப்​படை​யாகத் தெரி​கிறது.

எண்​ணூர் கோரமண்​டல் உர ஆலை விபத்​து, தொடர்ச்​சி​யான பட்​டாசு ஆலை விபத்​துகள் போன்​றவை அரசு கண்​காணிப்பு அமைப்​பு​களின் பலவீனத்​தையே காட்​டு​கின்​றன. எனவே கண்​காணிப்பு அமைப்பை வலுப்​படுத்​தும் வகை​யில் தமிழக அரசு சட்​டத்​திருத்​தத்​தைக் கொண்டு வர வேண்​டும்.

தொழிற்​சாலைக் கண்​காணிப்​புக் குழுக்​களில் அரசு அதி​காரி​களு​டன் சேர்த்​து, உள்​ளூர் மக்​கள், தமிழ்​நாடு அறி​வியல் இயக்​கம் போன்ற சுற்​றுச்​சூழல் அமைப்​பு​கள் மற்​றும் துறை​சார் வல்​லுநர்​களைப் பிர​தி​நி​தி​களாக இணைக்க வேண்​டும்.

பாது​காப்​புத் தணிக்கை ஆண்​டுக்கு ஒரு​முறை என்​ப​தற்​குப் பதிலாக, 6 மாதங்​களுக்கு ஒரு​முறை கட்​டாய​மாக்​கப்பட வேண்​டும். விதி​மீறல் இல்லை என்​ப​தற்​கான சான்​றிதழை அரசுடன் இணைந்து மக்​கள் பிர​தி​நி​தி​கள் குழு​வும் வழங்க வேண்​டும்.

தமிழகம் முழு​வதும் உள்ள இறால் பண்​ணை​கள் மற்​றும் வேதித் தொழிற்​சாலைகளில் உடனடி​யாக ஆய்வு நடத்​தப்பட வேண்​டும். தொழிற்​சங்​கங்​களு​டன் இணைந்து வெளி​மாநிலத் தொழிலா​ளர்​களுக்​காகப் பிரத்​யேக​மான கொள்​கைத் திட்​டங்​களை அரசு உரு​வாக்கி செயல்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.