




















விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கட்டா குஸ்தி’. இதன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இப்படம் ஜூலை 3-ம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்க, விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。