惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Microsoft Security Blog
Microsoft Security Blog
量子位
大猫的无限游戏
大猫的无限游戏
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
IT之家
IT之家
博客园 - 三生石上(FineUI控件)
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园 - Franky
美团技术团队
Last Week in AI
Last Week in AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
人人都是产品经理
人人都是产品经理
罗磊的独立博客
Jina AI
Jina AI
小众软件
小众软件
S
SegmentFault 最新的问题
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
雷峰网
雷峰网
博客园 - 聂微东
博客园_首页
The Cloudflare Blog
WordPress大学
WordPress大学
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
有赞技术团队
有赞技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தவெக ஆட்சி அமைக்க இன்னும் 10 சீட் தேவை - விஜய்க்கு ஆதரவு ...
செய்திப்பிரிவு · 2026-05-05 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும் சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது ஆதரவைப் பெற விஜய் திட்டமிட்டுள்ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், விஜய்​யின் தவெக 108 இடங்களைக் கைப்​பற்றி தனிப்​பெரும் கட்​சி​யாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்​கத் தேவை​யான பெரும்​பான்மை பலமான 118 இடங்​களைப் பெறாத​தால், தமிழகத்தில் தற்​போது ‘தொங்கு சட்டப்​பேர​வை’ அமை​யும் சூழல் உரு​வாகி​யுள்​ளது.

ஆட்சி அமைக்க இன்​னும் 10 இடங்​கள் தேவைப்​படு​வ​தால், கட்​சிகளிடம் ஆதரவு கோரு​வது குறித்து கட்சி நிர்​வாகி​களு​டன் விஜய் தீவிர ஆலோசனை​யில் ஈடு​பட்​டுள்​ளார்.

தற்​போது தவெக முன்பு இரண்டு வாய்ப்​பு​கள் உள்​ளன. ஒன்று, அதிமுக​வின் ஆதர​வைக் கோரு​வது. மற்​றொன்​று, திமுக கூட்டணிக் கட்​சிகளின் ஆதரவை கோரு​வது.

அதி​முக தலைமையிலான கூட்​டணி 53 இடங்​களை கைப்​பற்​றி​யுள்​ளது. ஒரு​வேளை அதி​முக ஆதரவு அளித்​தால் தவெக மிக எளி​தாக ஆட்சி அமைக்க முடி​யும். ஆனால், பிரச்​சா​ரத்​தின்​போது அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை விஜய் கடுமை​யாக விமர்​சித்துப் பேசினார். இந்தச் சூழலில், தற்போது பழனி​சாமி ஆதரவு அளிப்​பாரா என்​பது தெரிய​வில்​லை.

மற்​றொருபுறம், திமுக கூட்​ட​ணி​யில் உள்ள காங்​கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்​சிகளின் ஆதர​வைப் பெற​வும் விஜய் திட்டமிட்டு வரு​கிறார்.

இதற்​கிடையே, தவெக​வின் வெற்​றிக்கு வாழ்த்து தெரி​வித்​துள்ள காங்​கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்​தி, தொலைபேசி வாயிலாக விஜய்​யைத் தொடர்பு கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக தகவல்​கள் கசிந்​துள்​ளன.

காங்​கிரஸ் மட்டுமின்றி, திமுக கூட்​ட​ணி​யில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்​சிகள் மற்​றும் அதி​முக கூட்​ட​ணி​யில் உள்ள பாமக ஆகிய​வற்​றுட​னும் பேச்​சு​வார்த்தை நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. பாமக தரப்​பில் இருந்து இது​வரை சாதக​மான பதில் வராத​தால், திருமாவளவன் தலை​மையி​லான விசிக​வுடன் பேச்​சு​வார்த்​தையைத் தொடங்​க​வும் விஜய் தரப்பு ஆர்​வம் காட்டி வரு​கிறது.

தேர்​தலுக்கு முன்​பு, கூட்​ட​ணிப் பேச்​சு​வார்த்​தைகள் நடந்து வந்த நிலை​யில், கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு ‘ஆட்​சி​யிலும் அதி​காரத்​தி​லும் பங்​கு’ என்று விஜய் கூறிவந்​தார். அந்த எதிர்​பார்ப்​புடன் விஜய்க்கு ஆதரவு அளிக்​கப்​போவது யார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.