慣性聚合 高效追讀感興趣之博客、新聞、科技資訊
閱原文 以慣性聚合開啟

推薦訂閱源

U
Unit 42
小众软件
小众软件
Y
Y Combinator Blog
S
SegmentFault 最新的问题
WordPress大学
WordPress大学
宝玉的分享
宝玉的分享
人人都是产品经理
人人都是产品经理
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
L
LangChain Blog
Martin Fowler
Martin Fowler
美团技术团队
B
Blog RSS Feed
GbyAI
GbyAI
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 司徒正美
T
Tailwind CSS Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
T
The Blog of Author Tim Ferriss
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
腾讯CDC
Hugging Face - Blog
Hugging Face - Blog
D
Docker
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கோவை சூலூர் அருகே பாலியல் வன்கொடுமை: 10 வயது சிறுமி கடத்த...
2026-05-24 · via hindutamil

கண்ணம்பாளையம் பகுதியில் சிறுமி உடல் கைப்பற்றப்பட்ட இடத்தை பார்வையிட்ட டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்

Updated on

3 min read

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் 10 வயது மகள் கடந்த 21-ம் தேதி மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் சூலூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

இந்த நிலையில், கண்ணம் பாளையம் செல்லும் வழியில் குளக்கரை பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் நேற்று முன்தினம் இரவு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, பெற்றோரும், உறவினர்களும் சிறுமி உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி சூலூர் காவல் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அதிரடிப் படை போலீஸார் குவிக்கப்பட்டனர். கோவை மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, டிஐஜி சாமிநாதன், எஸ்.பி.பவன்குமார் ரெட்டி மற்றும் சூலூர் எம்எல்ஏ சுகுமார் உள்ளிட்டோர் சென்று சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை நகர மாட்டோம் என்று கூறி விடிய விடிய மறியலில் ஈடுபட்டனர். இதனால், கோவை - திருச்சி நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதற்கிடையே, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக இறங்கினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்தி (33) என்ற இளைஞர், சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றது தெரியவந்தது. நேற்று காலை அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கிஇருந்த கார்த்தியை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில், அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும், இதற்கு அவரது நண்பர் மோகன் (30) உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

<div class="paragraphs"><p>கைதான கார்த்தி, மோகன்</p></div>

கைதான கார்த்தி, மோகன்

தப்ப முயன்றபோது காயம்: முன்னதாக, போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற கார்த்தி, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதிக்க முயன்றபோது, வலது கால், வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோவை போக்சோ நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் நேற்று மாலை மருத்துவமனைக்கு வந்து, அவரிடம் விசாரணை நடத்தினார். அவரை மே 5-ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டார். மோகன், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில்அடைக்கப்பட்டார்.

தலைமை டிஜிபி ஆய்வு: இதற்கிடையே, தமிழக தலைமை டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர், ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் ஆகியோர் கோவைக்கு வந்தனர். சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சம்பத்குமார் இஎஸ்ஐ மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். ‘‘குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரநடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது” என்றார்.

24 மணி நேரத்தில் கைது: கோவையில் செய்தியாளர்களிடம் மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி கூறியதாவது: கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் தொழில் நுட்பஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் அருகில் வசித்து வந்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்தி மீது சந்தேகம் ஏற்பட்டது.

சிறுமியின் தந்தையுடன் நட்பாக பழகிய அவர், அவ்வப்போது அவரது மகன், மகள் இருவருக்கும் தின்பண்டங்கள் வாங்கித் தருவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கண்ணம்பாளையம் குளம் அருகே உள்ள தென்னந்தோப்பில் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். கைது செய்யப்பட்ட கார்த்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அவருக்கு உடந்தையாக நண்பர் மோகன் இருந்துள்ளார். குற்றத்தை மறைத்து சதியில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குபதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு விரைவில் அரசு நிவாரண உதவியும், குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத் தரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, சிறுமி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்தில் உறவினர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி நிர்வாகிகளின் அஞ்சலிக்குப் பிறகு, உடல் தகனம் செய்யப்பட்டது. 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விரைவில் குற்றப்பத்திரிகை: முதல்வர் விஜய் உத்தரவு

கோவை சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் நேற்று கூறியுள்ளதாவது: கோவையில் 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. மனிதநேயமற்ற, மன்னிக்க முடியாத இத்தகைய குற்றச் செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தங்கள் உயிருக்கு உயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த வழக்கில் தொடர்பு உடையதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, உடனடியாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யத்தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.