惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园_首页
雷峰网
雷峰网
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
WordPress大学
WordPress大学
腾讯CDC
T
Tailwind CSS Blog
A
About on SuperTechFans
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
T
The Blog of Author Tim Ferriss
G
Google Developers Blog
The Cloudflare Blog
D
DataBreaches.Net
Recent Announcements
Recent Announcements
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
博客园 - 聂微东
阮一峰的网络日志
阮一峰的网络日志
月光博客
月光博客
博客园 - 司徒正美
MongoDB | Blog
MongoDB | Blog
Google DeepMind News
Google DeepMind News
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தேரோட்டம் கோலா...
செய்திப்பிரிவு · 2026-06-22 · via hindutamil

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம்.

Updated on: 

விருத்தாசலம்: சிதம்​பரம் நடராஜர் கோயி​லில் இன்று ஆனி திரு​மஞ்சன தரிசனம் நடை​பெறுகிறது. இதையொட்​டி, திரு​மஞ்சன தேரோட்​டம் நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது.

சிதம்​பரம் நட​ராஜர் கோயி​லில் ஆனித் திரு​மஞ்சன தரிசன உற்சவ கொடியேற்​றம் ஜூன் 13-ம் தேதி சித்​சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்​தில் ஏற்​றப்​பட்​டு, பஞ்​சமூர்த்தி வீதி உலா நடை​பெற்​றது. தொடர்ந்து 14-ம் தேதி முதல் வெள்ளி சந்​திர பிறை வாக​னத்​தில் சாமி வீதி உலா, தங்க சூரிய பிறை வாக​னத்​தில் சாமி வீதி உலா, வெள்ளி பூத வாக​னத்​தில் சாமி வீதி உலா, வெள்ளி ரிஷப வாக​னத்​தில் சாமி வீதி உலா, வெள்ளி யானை வாக​னத்​தில் சாமி வீதி உலா, தங்க கைலாச வாக​னத்​தில் சாமி வீதி உலா என 20-ம் தேதி வரை தங்​கரதத்​தில் பிச்​சாண்​ட​வர் வீதி உலா​வும் நடை​பெற்​றது.

தொடர்ந்து நேற்று முக்​கிய நிகழ்​வான தேர்த் திரு​விழா நடை​பெற்​றது. மேள​தாளம் முழங்​கிட வேத மந்​திரங்​கள், தேவாரம், திரு​வாசகம் ஓதிட கோயி​லிலிருந்து ஸ்ரீநட​ராஜர், ஸ்ரீ சிவ​காமசுந்​திரி அம்​பாள், விநாயகர், சுப்​ரமணி​யர், சண்​டிகேஸ்​வரர் ஆகிய சுவாமிகள் தனித்​தனி தேர்​களில் எழுந்​தருளினர். இதையடுத்​து, பக்​தர்​கள் தேரின் வடம் பிடித்து இழுந்​தனர். தேருக்கு முன்​னால் சிவனடி​யார்​கள், தேவ விற்​பன்​னர்​கள் வேத மந்​திரங்​கள், தேவாரம், திரு​வாசகம் படியபடியே சென்​றனர்.

தேர் கீழ​வீதி நிலை​யில் இருந்து புறப்​பட்டு கீழ​வீ​தி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி​கள் வழி​யாக மாலை​யில் நிலையை அடைந்​தது. இரவு 8 மணிக்கு ஆயிரங்​கால் முன் முகப்பு மண்​டபத்​தில் ஸ்ரீசிவ​காமசுந்​தரி அம்​மாள் சமேத ஸ்ரீமன் நடராஜ மூர்த்​திக்கு ஏககால லட்​சார்ச்​சனை நடை​பெற்​றது.

இதே​போல் இன்று அதி​காலை 4 முதல் 6 மணி வரை ஸ்ரீசிவ​காமசுந்​தரி அம்​மாள் சமேத ஸ்ரீமன்​நட​ராஜ மூர்த்​திக்கு மகாபிஷேக​மும், தொடர்ந்து சித்​சபை​யில் ரகசிய பூஜை​யும் பஞ்​சமூர்த்தி வீதி உலா​வும் நடை​பெறும். பிற்​பகலில் ஆனித் திரு​மஞ்சன தரிசன​மும், ஞான​காச சித்​சபை பிர​வேச​மும் நடை​பெறும்.

தேர்த்​திரு​விழா மற்​றும் ஆனித் திரு​மஞ்சன விழாவை முன்​னிட்டு சிதம்​பரம் நகருக்​குள் போக்​கு​வரத்து மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. விழாவையொட்டி 500-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.