惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog
D
Docker
J
Java Code Geeks
腾讯CDC
Blog — PlanetScale
Blog — PlanetScale
G
Google Developers Blog
M
MIT News - Artificial intelligence
L
LangChain Blog
T
The Blog of Author Tim Ferriss
P
Proofpoint News Feed
MyScale Blog
MyScale Blog
博客园 - Franky
GbyAI
GbyAI
Hugging Face - Blog
Hugging Face - Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 聂微东
N
Netflix TechBlog - Medium
B
Blog RSS Feed
Y
Y Combinator Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Google DeepMind News
Google DeepMind News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உ.பி.யில் ரூ.36,230 கோடி செலவில் 600 கி.மீ. தூரத்துக்கு க...
2026-04-30 · via hindutamil

Updated on

2 min read

லக்னோ: உத்தர பிரதேசத்​தில் ரூ.36,230 கோடி செல​வில் 12 மாவட்​டங்​களை இணைத்து 594 கி.மீ. தூரத்​துக்கு அமைக்​கப்​பட்​டுள்ள கங்கா எக்ஸ்பிரஸ் சாலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்​தார்.

உத்தர பிரதேசத்​தில் 594 கி.மீ. தூரத்​துக்கு கங்கா எக்ஸ்பிரஸ் 6 வழிச் சாலை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இத்திட்டத்​துக்கு ரூ.36,230 கோடி செல​விடப்​பட்​டுள்​ளது. இந்த 6 வழிச் சாலை மீரட்​டிலிருந்​து, பிர​யாக்​ராஜ் வரை 12 மாவட்​டங்​களை இணைக்​கிறது. இந்த நெடுஞ்​சாலை​யில் வாக​னங்​கள் 120 கிமீ வேகத்​தில் செல்​லலாம்.

இந்த விரைவுச் சாலை மூலம் மீரட் - பிர​யாக்​ராஜ் பயண நேரம் 10 முதல் 12 மணி நேரத்​திலிருந்து 6 முதல் 8 மணி நேர​மாக குறைந்​துள்​ளது. ஷாஜ​கான்​பூரில் உள்ள இந்த நெடுஞ்சாலை​யில் 3.5 கி.மீ தூரம் அவசர​கால விமான ஓடுதளம் போல் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இந்த நெடுஞ்​சாலை​யின் 4-ல் 3 பகு​தியை அதானி குழு​மம் அமைத்துள்ளது. தொழில் வளர்ச்​சியை மைய​மாக வைத்து இந்த நெடுஞ்​சாலை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த 6 வழிச்​சாலையை வருங்​காலத்​தில் 8 வழிச்​சாலை​யாக​வும் விரிவுபடுத்த முடி​யும்.

இதை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்​தார். உ.பி. ஹர்தோய் மாவட்​டத்​தில் நடை​பெற்ற விழா​வில் கங்கா எக்​ஸ்​பிரஸ் விரைவுச் சாலையை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசி​ய​தாவது: நாட்​டின் மிக நீள​மான பசுமைவழி விரைவுச் சாலை​யான கங்கா விரைவுச் சாலை ஐந்தாண்டுகளுக்​குள் கட்டி முடிக்​கப்​பட்​டுள்​ளது. இது​தான் தற்​போதைய அரசின் வேக​மான செயல்​பாடு. மாற்​றத்தை ஏற்​படுத்​தும் இந்த விரைவுச்​சாலை திட்​டம் போக்குவரத்தை மேம்​படுத்​து​வதோடு, உத்​தரப் பிரதேசம் முழு​வதும் முன்​னேற்​றத்தை ஏற்​படுத்​தும்.

கங்கை நதி, உத்​தரப் பிரதேசத்​திற்​கும், நாட்​டிற்​கும் வாழ்​வா​தா​ர​மாக இருப்​பது​போல், இந்த விரைவுச் சாலை உத்தரப் பிரதேசத்​தின் வளர்ச்​சி​யின் புதிய வாழ்வாதாரமாக மாறும். சமீபத்​தில், டெல்​லி- டே​ராடூன் விரைவுச் சாலையை நாட்​டுக்கு அர்ப்​பணித்​தேன். வளர்ந்து வரும் இந்​தி​யா​வின் விதியை வடிவ​மைக்​கும் உயிர் நாடிகளாக இந்த விரைவுச் சாலைகள் உரு​வாகி வருகின்​றன.

இந்த விரைவுச் சாலை புனிதத் தலங்​களுக்​கான பயண நேரத்தை ஒரு சில மணிநேரங்​களாகக் குறைக்​கும். ஒரு காலத்​தில் பின்​தங்​கிய மாநில​மாக இருந்த உத்தரபிரதேசம், தற்​போது டிரில்​லியன் டாலர் பொருளாதா​ர​மாக மாறி வரு​கிறது. உ.பி.​யில் சமாஜ்​வாதி கட்சி வளர்ச்​சிக்கு எதி​ரான​தாக மட்​டும் அல்​லாமல், பெண்களுக்கு எதி​ராக​வும் செயல்​படு​கிறது.

இண்​டியா கூட்​டணி கட்​சிகள் அனைத்​தும் பெண்​கள் இட ஒதுக்​கீடு மசோ​தாவுக்கு எதி​ராக சமீபத்​தில் வாக்களித்ததை நாடு பார்த்​தது. மகளிர் இடஒதுக்​கீடு சட்ட திருத்த மசோதா நிறைவேறி​யிருந்​தால், 2029-ல் மக்களவையிலும், சட்​டப்​பேர​வை​யிலும் பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்​கீடு கிடைத்​திருக்​கும். தொகுதி மறுவரையறை மூலம் உத்​தரப் பிரதேசத்துக்கு அதிக தொகு​தி​கள் கிடைப்​ப​தற்கு எதி​ராக தமிழகத்​தின்​ தி​முக செயல்​படு​கிறது. இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசி​னார்​.