惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

宝玉的分享
宝玉的分享
B
Blog RSS Feed
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
MyScale Blog
MyScale Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
S
SegmentFault 最新的问题
Y
Y Combinator Blog
月光博客
月光博客
IT之家
IT之家
T
Tailwind CSS Blog
Last Week in AI
Last Week in AI
L
LangChain Blog
博客园_首页
MongoDB | Blog
MongoDB | Blog
P
Proofpoint News Feed
博客园 - Franky
WordPress大学
WordPress大学
云风的 BLOG
云风的 BLOG
M
MIT News - Artificial intelligence
V
Visual Studio Blog
小众软件
小众软件
博客园 - 叶小钗
博客园 - 三生石上(FineUI控件)
N
Netflix TechBlog - Medium

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“வாக்குறுதி ஒவ்வொன்றாக நிறைவேறும்” - இருமொழிக் கொள்கையே ந...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் அர்லேகர்.

Updated on: 

சென்னை: ​மாநிலத்​தின் நிதி​நிலையை சீரமைத்​து, அரசால் அறிவிக்​கப்​பட்ட வாக்​குறு​தி​கள் அனைத்​தும் ஒவ்​வொன்​றாக நிறைவேற்​றப்​படும் என்று ஆளுநர் உரை​யில் தமிழக அரசு உறுதி அளித்​துள்​ளது. தமிழகத்​தில் இரு​மொழிக் கொள்​கையே தொடரும். ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் சிறப்பு போதைப் பொருள் தடுப்​புப் படை அமைக்​கப்​படும். புதிய தொழில் கொள்கை விரை​வில் அறிவிக்​கப்​படும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

முதல்​வர் விஜய் தலை​மை​யில் புதி​தாக ஆட்​சிப் பொறுப்​பேற்​றுள்ள தவெக அரசின் முதல் சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடர், ஆளுநர் உரை​யுடன் நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்​ப​தற்​காக காலை 9.52 மணிக்கு பேரவை வளாகத்​துக்கு வந்த ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகருக்கு பேண்டு வாத்​தி​யங்​கள் முழங்க காவல் துறை அணிவகுப்பு மரி​யாதை அளிக்​கப்​பட்​டது. தொடர்ந்​து, பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகர், செயலர் சாந்தி ஆகியோர் பூங்​கொத்து வழங்கி அவரை வரவேற்​று, பேர​வைக்குள் அழைத்​துச் சென்​றனர்.

அவருக்கு முன்​பாகவே முதல்​வர் விஜய், எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் உள்​ளிட்ட உறுப்​பினர்​கள் அனை​வரும் பேர​வைக்​குள் வந்து அமர்ந்​திருந்​தனர். காலை 10 மணிக்கு தமிழ்த்​தாய் வாழ்த்​து, தேசிய கீதத்துடன் பேர​வைக் கூட்​டம் தொடங்​கியது. பின்​னர், ஆளுநர் அர்​லேகர் தனது உரையை தொடங்​கி​னார். தமிழில் ‘வணக்​கம்’ என்று கூறி​விட்​டு, ஆங்​கிலத்​தில் 37 நிமிடங்​கள் உரையை வாசித்​தார்.

ஆளுநர் உரை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: தமிழக அரசி​யல் வரலாற்​றில் இது​வரை இல்​லாத மாற்​றம் சமீபத்​தில் நடந்​து​முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஏற்​பட்​டுள்​ளது. கட்சி தொடங்​கிய 2 ஆண்​டு​களி​லேயே மக்​களின் பேராதர​வுடன் முதல்​வர் விஜய் ஆட்சி அமைத்​துள்​ளார். நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு, தமிழக அரசி​யலில் அண்​ணா, எம்​ஜிஆருக்கு பிறகு பெரும் புரட்​சியை முதல்​வர் விஜய் ஏற்​படுத்​தி​யுள்​ளார்.

நிர்​வாக அமைப்​பில் மலிந்​துள்ள ஊழலைக் களைந்​து, நேர்​மை​யான நிர்​வாகத்தை மக்​களுக்கு வழங்​கு​வ​தில் இந்த அரசு உறு​தி​யாக உள்​ளது. அதற்​கேற்ப அனைத்து துறை​சார்ந்த கொள்​முதல்​கள், டெண்​டர்​கள் ஒளிவுமறை​வின்​றி, கடுமை​யான கண்​காணிப்பு வழி​முறை​களுக்கு உட்​படுத்​தப்​படும். கடந்த காலங்​களில் நில​விய முறையற்ற நிதிப் பரி​மாற்​றங்​கள், இடைத் தரகர்​களின் தலை​யீடு​கள் முற்​றி​லு​மாக ஒழிக்​கப்​படும். கீழடி, ஆதிச்​சநல்​லூருக்கு யுனெஸ்​கோ​வின் உலக பாரம்​பரியச் சின்ன அங்​கீ​காரம் பெற நடவடிக்கை எடுக்​கப்​படும்.

விரி​வான நிலை​யான சுற்​றுலா கொள்கை வகுக்​கப்​படும். முல்லை பெரி​யாறு அணை நீர்​மட்​டத்தை 152 அடி​யாக உயர்த்​த​வும், தென் மாநில நதி​களை இணைக்​க​வும், ஒலிம்​பிக் உயர்​திறன் மையங்​கள் அமைக்​க​வும், வறுமையற்ற தமிழகம் உரு​வாக்​க​வும் நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படும். ஆசிரியர் காலிப்பணி​யிடங்​களை நிரப்ப போர்க்​கால நடவடிக்கை எடுக்​கப்​படும். தமிழகத்​தில் இரு​மொழிக் கொள்​கையே தொடரும்.

தேசி​யக் கல்விக் கொள்​கையை அரசு கடுமை​யாக எதிர்க்​கிறது. முதலீடு​களை ஈர்க்​கும் வகை​யில் தமிழ்​நாடு முதலீட்​டாளர் ஊக்​கு​விப்பு ஆணை​யம் ஏற்​படுத்​தப்​படும். புதிய தொழில் கொள்கை அறிவிக்​கப்​படும். ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் சிறப்பு போதைப் பொருள் தடுப்​புப் படை அமைக்​கப்​படும்.

தமிழகத்​துக்​கான நிதிப் பகிர்​வில் மத்​திய அரசின் பாரபட்​ச​மான அணுகு​முறை அறிக்​கை​யாக வெளி​யிடப்​படும். தமிழகத்​துக்​கான நியாய​மான நிதிப் பகிர்வை மத்​திய அரசிடம் இருந்து பெறு​வது உறுதி செய்​யப்​படும். உயர்​கல்​வித் துறை​யில் அடிப்​படை சீர்​திருத்​தம் கொண்​டு​வந்து உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். மக்​கள் செலுத்​தும் வரி​யில் இருந்து தமிழகத்​துக்கு உரிய நிதிப் பகிர்வை பெற சட்​டப்​பேர​வை​யில் தீர்​மானம் நிறைவேற்​றப்​படும்.

மாநிலத்​தின் வளர்ச்​சியை ஊக்​குவிக்​க​வும், மக்​களின் வாழ்​வா​தா​ரத்தை மேம்​படுத்​த​வும், அனைத்து துறை​களை​யும் உள்​ளடக்​கிய ‘வெற்​றித் தமிழகம்’ - தொலைநோக்​குத் திட்​டங்​கள் அடுத்த 5 ஆண்​டு​களில் செயல்​படுத்​தப்​படும். அரசால் அறிவிக்​கப்​பட்ட வாக்​குறு​தி​கள் அனைத்​தும் மாநிலத்​தின் நிதி​நிலையை சீரமைத்து வருங்​காலத்​தில் ஒவ்​வொன்​றாக நிறைவேற்​றப்​படும். இவ்​வாறு ஆளுநர் உரை​யாற்​றி​னார்.

ஆளுநர் உரையின் சிறப்பு அம்சங்கள்:

கீழடிக்கு யுனெஸ்​கோ​ அங்கீகாரம்

போதையை ஒழிக்க சிறப்புப் படை

தொழில் வளர்ச்சிக்கு புதிய கொள்கை

உரை​யில் அவர் பேசும்​போது, ‘வேலு நாச்​சி​யார், அஞ்​சலை​யம்​மாள்’ உள்​ளிட்ட சிலரது பெயர்​களை தவறாக உச்​சரித்​தார். அதற்​காக பேர​வை​யில் மன்​னிப்​பும் கோரி​னார். ‘பிறப்​பொக்​கும் எல்லா உயிர்க்​கும்’ என்ற திருக்​குறளை குறிப்​பிட்டு உரையை ஆளுநர் நிறைவு செய்​தார். பின்​னர், ஆளுநர் உரை​யின் தமிழாக்​கத்தை சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகர் வாசித்​தார். கூட்​டத்​தின் நிறை​வாக, மீண்​டும் தேசி​யகீதம் இசைக்​கப்​பட்​டு, 11.10 மணிக்கு கூட்​டம் முடிவடைந்​தது.

தமிழக சட்​டப்​பேரவை மரபின்​படி ஆளுநர் உரை​யின்​போது கூட்​டம் தொடங்​கும் முன்பு தமிழ்த்​தாய் வாழ்த்​தும், நிறை​வாக தேசி​யகீத​மும் இசைக்கப்​படும். வரலாற்​றில் முதல்​முறை​யாக நேற்று நிகழ்ச்​சி​யின் தொடக்​கம், நிறைவு என 2 முறை தேசி​யகீதம் இசைக்​கப்​பட்​டது பேர​வை​யில் ஆளுநர் உரை மீதான வி​வாதம் ஜூன் 23-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. மேகே​தாட்டு அணை கட்​டும் திட்​டத்​துக்​கு எதிர்ப்​பு தெரி​வித்​து பேர​வை​யில்​ முதல்​வர்​ விஜய்​ இன்​று தனித்​ தீர்​மானம்​ கொண்​டு​வர இருப்​ப​தாக தகவல்​ வெளி​யாகியுள்​ளது.