惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Hugging Face - Blog
Hugging Face - Blog
GbyAI
GbyAI
Engineering at Meta
Engineering at Meta
有赞技术团队
有赞技术团队
博客园 - 【当耐特】
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
WordPress大学
WordPress大学
博客园_首页
美团技术团队
H
Help Net Security
MongoDB | Blog
MongoDB | Blog
宝玉的分享
宝玉的分享
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
J
Java Code Geeks
A
About on SuperTechFans
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
IT之家
IT之家
T
The Blog of Author Tim Ferriss
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
B
Blog
雷峰网
雷峰网
爱范儿
爱范儿

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மதுரை சித்திரை திருவிழாவில் குப்பை தேங்காமல் சுகாதாரமாக ந...
2026-04-30 · via hindutamil

மாசி வீதிகளில் தேர்கள் சென்ற பின் குப்பையை உடனுக்குடன் அகற்றிய தூய்மைப் பணியாளர்கள்.

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Updated on

2 min read

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் கடந்த ஆண்டைப்போல், மாநகராட்சி ஆணையர் சித்ராவின் ஏற்பாட்டில் 350 தூய்மைப் பணியாளர்கள் குழுவினர் தேருக்கு முன்னும், பின்னும் சென்று குப்பையை உடனுக்குடன் அகற்றி அப்புறப் படுத்தினர்.

இதனால் குப்பையில்லாமல் சுகாதாரமான தேர்த் திருவிழாவை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய மாநகராட்சி நிர்வாகத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா, கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா, நேற்று காலை மாசி வீதிகளில் கோலாகலமாக நடந்தது. கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் இருந்து காலை 6.30 மணிக்கு தேர் புறப்பட்டது. பக்தர்கள், பூக்கள், மாலைகளை தூக்கி வீசி ஆர்ப்பரித்தனர்.

தேருக்கு பின்னால் ஊர்வலமாக வந்த பக்தர்களுக்கு, பல்வேறு தன்னார்வ அமைப்புகள், இந்து அமைப் புகள், தனியார் நிறுவனங்கள் வழிநெடுக அன்னதானம், பழங்கள், தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள், மோர் போன்ற வற்றை வழங்கினர்.

சிலர் பிளாஸ்டிக் விசிறிகளையும், தொப்பிகளையும் வழங்கினர். அன்னதானம் வழங்கியவர்கள் புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றை தட்டுகளில் வைத்து தேரோட்டம் தொடங்கி யது முதல் முடியும் வரை வழங்கினர்.

அதனால், தேர்கள் சென்ற பின்பு மாசி வீதிகளில் பூக்கள், உணவுக்கழிவு, தட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், பக்தர்கள் அணிந்திருந்த செருப் புகள் போன்றவை சிதறிக் கிடந்தன. அவற்றை, ஆணையர் சித்ரா ஏற்பாட்டில் நகர்நலப் பிரிவு உதவி அலுவலர் அபிஷேக் தலைமையில் 200 மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், 150 தற்காலிக பணியாளர்கள் குழுவினர், தேருக்கு முன்பும் பின்பும் சென்று தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

தேர் செல்வதற்கு முன் குப்பையில்லாமல் பார்த்துக் கொள்வதும், தேர் சென்ற பின்னர் குவிந்த குப்பையை உடனுக்குடன் அகற்றுவதுமாக தேர்த்திருவிழாவை சுகாதார மான விழாவாக மாநகராட்சி நிர்வாகம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

<div class="paragraphs"><p>தேர் கடந்து சென்றவுடன் தூய்மை பணி நடந்து குப்பையின்றி பளிச்சிடும் மாசி வீதிகள்.</p></div>

தேர் கடந்து சென்றவுடன் தூய்மை பணி நடந்து குப்பையின்றி பளிச்சிடும் மாசி வீதிகள்.

படம்: நா.தங்கரத்தினம்

கடந்த காலங்களில், தேரோட்டத்தின்போது குவியும் குப்பையை மறுநாள் காலை யில்தான் மாநகராட்சி அகற்றும். அதுவரை குப்பை தேங்கி சுகாதார சீர்கேடாக காணப்படும்.

கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாநகராட்சி ஆணையராக சித்ரா பொறுப்பேற்ற பிறகு நடந்த சித்திரைத் திருவிழாவில் குப்பை தேங்காமல் உடனுக்குடன் அகற்ற முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

மாநகராட்சி யின் இந்த தூய்மைப் பணிக்கு கடந்த ஆண்டே மக்களிடம் பாராட்டுகள் கிடைத்தன. அதேபோல், இந்த ஆண்டும் குப்பையில்லா தேர்த் திருவிழா முடிந்துள்ளது.

இதற்கு காரண மான ஆணையர் சித்ராவுக்கும், களத்தில் நின்று சவாலுடன் பணியாற்றிய நகர்நலப் பிரிவு உதவி அலுவலர் அபிஷேக், சுகாதார ஆய்வாளர் ரமேஷ், தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து நகர்நலப் பிரிவு உதவி அலுவலர் அபிஷேக் கூறுகையில், தேர்த்திருவிழாவில் 350 பணி யாளர்கள் அப்புறப்படுத்திய குப்பையை 25 டிராக்டர்கள் மூலம் எல்லீஸ் நகருக்கு கொண்டு சென்று, அங்கிருந்து லாரிகள் மூலம் வெள்ளக்கல் கொண்டு செல்லப்பட்டது. தேர் நிலையை அடைந்தவுடன் மாசி வீதிகள் அனைத்தும் தூய்மையாகின. மொத்தம் 100 டன் குப்பையை அகற்றி உள்ளோம் என்றார்.