惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
I
InfoQ
L
LangChain Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
Y
Y Combinator Blog
博客园_首页
Martin Fowler
Martin Fowler
宝玉的分享
宝玉的分享
A
About on SuperTechFans
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Vercel News
Vercel News
T
The Blog of Author Tim Ferriss
C
Check Point Blog
B
Blog RSS Feed
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
爱范儿
爱范儿
Stack Overflow Blog
Stack Overflow Blog
aimingoo的专栏
aimingoo的专栏
WordPress大学
WordPress大学
F
Fortinet All Blogs
月光博客
月光博客
GbyAI
GbyAI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஏப்​ரலில் 2.39 லட்சம் மின் வாகனம் விற்​பனை: கடந்த ஆண்டை வ...
2026-05-08 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வின் மின் வாகன துறை, நடப்பு 2026- 27 நிதியாண்டை மிக வலு​வான வளர்ச்​சி​யுடன் தொடங்​கி​யுள்​ளது. கடந்த ஏப்​ரல் மாத விற்​பனை​யில் இது​வரை இல்​லாத அளவாகப் 41 சதவீத புதிய உச்​சத்தை மின் வாகன விற்​பனைத் தொட்டுள்ளது.

இது குறித்து மத்​திய அரசின் வாகன் இணை​யதள தரவு​களில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: கடந்த ஏப்​ரலில் இரு சக்​கர, மூன்று சக்​கர, பயணி​கள் மற்​றும் வர்த்தக வாக​னங்​கள் என அனைத்​துப் பிரிவு​களை​யும் சேர்த்து மொத்​தம் 2,39,025 மின்​சார வாக​னங்​கள் விற்​பனை​யாகி உள்​ளன.

இது கடந்த 2025 ஏப்​ரலில் விற்​பனை​யான 1,69,360 வாகனங்களுடன் ஒப்​பிடு​கை​யில் 41 சதவீத வளர்ச்​சி​யாகும். இந்திய மின்​சார வாக​னச் சந்​தை​யில் இரு சக்கர வாக​னப் பிரிவே பெரும் பங்களிப்பை வழங்​கி​யுள்​ளது. ஏப்​ரல் மாதத்​தில் மட்​டும் 1,48,740 மின் ஸ்கூட்​டர்​கள் மற்​றும் மோட்​டார் சைக்​கிள்​கள் விற்பனை​யாகி உள்​ளன.

இது முந்​தைய ஆண்​டின் ஏப்​ரல் மாத விற்​பனையை விட (92,536 வாக​னங்​கள்) 61 சதவீதம் அதி​க​மாகும். மொத்த மின்​சார வாகன விற்​பனை​யில் இரு சக்கர வாக​னங்​களின் பங்கு மட்​டும் 62 சதவீதமாக உள்​ளது. இவ்​வாறு தரவு​களில் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது.

பெட்​ரோல் விலை உயர்வு குறித்த அச்​சம் மற்​றும் உலகளா​விய கச்சா எண்​ணெய் விநி​யோக நெருக்​கடி காரண​மாக, வாடிக்கையாளர்​கள் மின்​சார வாக​னங்​களை நோக்கி அதி​கம் ஈர்க்​கப்​படு​வ​தாகத் இத்​துறை வல்​லுநர்​கள் தெரிவிக்​கின்​றனர்.

ஓலா எலக்ட்​ரிக், டிவிஎஸ் மோட்​டார், பஜாஜ் ஆட்​டோ, ஏதர் எனர்ஜி மற்​றும் ஹீரோ விடா ஆகிய 5 நிறு​வனங்​கள் மட்​டுமே சந்​தை​யில் 84 சதவீதப் பங்​கைக் கொண்​டுள்​ளன. மூன்று சக்கர மின் வாகன விற்​பனை கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதி​கரித்து 64,549 எண்ணிக்​கை​யில் பதி​வாகி​யுள்​ளது. மொத்த 3 சக்கர வாகன விற்பனை​யில் மின்​சார மாடல்​கள் சுமார் 60 சதவீதப் பங்​கைப் பிடித்​துள்​ளன.

இதன் மூலம் சிஎன்ஜி 3 சக்கர வாக​னங்​களின் ஆதிக்​கத்தை இவை மெல்​லக் குறைத்து வரு​கின்​றன. மஹிந்​திரா மற்​றும் பஜாஜ் ஆட்டோ நிறு​வனங்​களுக்கு இடையே இப்​பிரி​வில் கடும் போட்டி நில​வு​கிறது.

மின் கார்​கள் 73% உயர்வு: பயணி​கள் வாக​னப் பிரி​வில் (கார்​கள், எஸ்​யூ​வி) வியக்​கத்​தக்க வளர்ச்சி ஏற்​பட்​டுள்​ளது. ஏப்​ரலில் 23,265 மின்​சா​ரக் கார்​கள் விற்​பனை​யாகி உள்​ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்​பிடு​கை​யில் 73 சதவீத வளர்ச்​சி​யாகும். டாடா மோட்​டார்ஸ் 8,500 வாக​னங்களு​டன் 37% சந்​தைப் பங்​கைப் பெற்று முதலிடத்​தில் நீடிக்​கிறது. சரக்கு மற்​றும் போக்​கு​வரத்து வாக​னப் பிரி​வில் 148 சதவீத அசுர வளர்ச்சி ஏற்​பட்​டுள்​ளது. மொத்தம் 2,236 வாக​னங்​கள் விற்​பனை​யாகி உள்​ளன.

இதில் சிறிய ரகச் சரக்கு வாக​னங்​களின் பங்​களிப்பு மட்​டும் 81 சதவீத​மாகும். மின்​சா​ரப் பேருந்​துகள் விற்​பனை​யும் 23 சதவீதம் அதி​கரித்​துள்​ளது. இப்​பிரி​வில் டாடா மோட்​டார்ஸ் 36 சதவீத சந்தைப் பங்​களிப்​புடன் முன்​னிலை​யில் உள்​ளது. மஹிந்​திரா & மஹிந்​திரா 5,394 வாக​னங்​களு​டன் ஜேஎஸ்​டபிள்​யூ, எம்​.ஜி மோட்டார்​ நிறு​வனத்​தைப்​ பின்னுக்குத் தள்ளி 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது.