惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Engineering at Meta
Engineering at Meta
雷峰网
雷峰网
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
B
Blog
Y
Y Combinator Blog
WordPress大学
WordPress大学
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
小众软件
小众软件
G
Google Developers Blog
云风的 BLOG
云风的 BLOG
罗磊的独立博客
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 叶小钗
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
量子位
The Cloudflare Blog
T
The Blog of Author Tim Ferriss
博客园_首页
B
Blog RSS Feed
Hugging Face - Blog
Hugging Face - Blog
IT之家
IT之家
阮一峰的网络日志
阮一峰的网络日志
L
LangChain Blog
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் திமுகவின் சித...
2026-05-01 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: மோசடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமல் அதிமுக, பாமக மற்றும் கூட்டணி கட்சி முகவர்கள் கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4ம் தேதி எண்ணப்படுகின்றன. அரும்பாடு பட்டு செய்த வெள்ளாமையின் பயன்களை அறுவடை செய்து வீட்டுக்கு கொண்டு வரும் நடைமுறைக்கு ஒப்பானது தான் வாக்கு எண்ணிக்கை என்பதால் அதில் அதிமுக மற்றும் பாமக கூட்டணி கட்சிகளின் முகவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மார்ச் மாத மத்தியில் தொடங்கி ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெற்ற பரப்புரையின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக இரவு, பகல் பாராமலும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமலும் உழைத்ததிலும், ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது தேனீக்களைப் போலப் பணியாற்றி அனைத்து வாக்காளர்களையும் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சென்று வாக்களிக்கச் செய்ததிலும் அதிமுக, பாமக, பாஜக, அமமுக, தமாகா, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே காணப்பட்ட ஒருங்கிணைப்பு வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை, வாக்குப்பதிவு என இதுவரை நாம் கடந்து வந்த இரு கட்டங்களை விட வரும் மே 4ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை எனும் மூன்றாம் கட்டம் தான் மிகவும் முக்கியமாகும். இந்தத் தேர்தலில் வெற்றி நமக்கு தான் என்பதை தேர்தல் பரப்புரையின் போதே நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது. வாக்குப்பதிவு நாளன்றும் ஆட்சியாளர்களுக்கு எதிரான தங்களின் கோபத்தை மக்கள் வெளிப்படுத்தியதைப் பார்க்க முடிந்தது. நாம் அடையப் போகும் இந்த வெற்றிக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து வழங்கப்போவது மே 4ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் அறிவிக்கப்படவுள்ள அதிகாரப்பூர்வ முடிவுகள் தான். அதனால் தான் வாக்கு எண்ணிக்கை எனும் மூன்றாம் கட்டத்தில் நாம் இன்னும் விழிப்புடனும், ஒருங்கிணைப்புடனும் பணியாற்ற வேண்டும்.

ஐந்தாண்டு காலமாக தமிழ்நாட்டைச் சுரண்டி கொள்ளையடித்த திமுக, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள அனைத்து வகையான தில்லு முல்லுகளையும் அரங்கேற்றும். தமிழ்நாட்டில் வெளியாகியுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பலவும் கூட திமுகவின் சித்து விளையாட்டுகள் தான். மக்களுடன் மக்களாக களப்பணியாற்றி, அவர்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்த நமக்கு மக்களின் மனநிலையும், ஆட்சியாளர்களுக்கு எதிரான கோபமும் நன்றாகத் தெரியும். அவ்வாறு இருக்கும் போது செயற்கையாக சித்தரிக்கப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை எவரும் நம்பத் தேவையில்லை. மாறாக, வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ள அனைவரும் வாக்கு எண்ணும் நாளான மே 4ம் தேதி காலை 6 மணிக்கே வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று விட வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து படிவங்களையும் முகவர்களுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கைத் தொடங்குவதற்கு முன்பாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவானதாக 17 சி படிவத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கையும், அந்த வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியிருக்கும் வாக்குகளின் எண்ணிக்கையும் ஒன்றாக உள்ளனவா? என்பதை சரி பார்க்க வேண்டும். அதன் பின்னர் தான் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்குவதற்கே அனுமதிக்க வேண்டும்.

எத்தகைய சூழலிலும் ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்கப்பட்டு, அதன் விவரங்கள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையை தொடங்க அனுமதிக்கக் கூடாது. வாக்கு எண்ணும் மையங்களில் தொகுதியின் தேர்தல் அதிகாரி, பார்வையாளர் ஆகியோரிடம் அறிமுகம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் ஏதேனும் தவறுகள் நடந்தால் உடனடியாக அவர்களிடம் புகார் செய்ய வேண்டும். அதையும் மீறி முறைகேடுகளில் ஈடுபட எவரேனும் முயன்றால் உடனடியாக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எழுத்து மூலம் புகார் தெரிவிக்க வேண்டும்.

வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு முன்பாகவே அஞ்சல் வாக்குகள் எண்ணி முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதிகபட்சமாக கடைசி இரு சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாக அஞ்சல் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படுவதை பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் முகவர்கள் உறுதி செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் எந்த சூழலிலும் முகவர்கள் அவர்களின் கடமையில் இருந்து விலகக் கூடாது.

தமிழ்நாட்டின் தலை விதியைத் தீர்மானிக்கப் போவது இந்தத் தேர்தலின் முடிவுகள் தான். அதில் எந்த மோசடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமல் அதிமுக, பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் முகவர்கள் கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும். வெற்றி நமதே!” என்று அன்புமணி அறிவுறுத்தியுள்ளார்.