




















Updated on:
தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தற்போது அதிமுகவின் பெயரையோ, சின்னத்தையோ பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகிறார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர் தலில் அதிமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம், வேலு மணி தலைமையில் ஒரு அணி திரண்டது. இந்த இரு அணியி னரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச் சாட்டுகளை கூறி வந்தனர்.
இதனிடையே, சி.வி.சண்முகம் அணியில் இருந்த 4 எம்எல் ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். மேலும், சில எம்எல்ஏக்கள் மீண்டும் பழனிசாமி பக்கம் திரும்பினர். இதை யடுத்து, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் தவிர மற்ற அனைவரும் பழனிசாமியை சந்தித்து சமாதானம் அடைந்தனர்.
இந்நிலையில், சென்னையிலிருந்து அண்மையில் ஊர் திரும்பிய சி.விஜயபாஸ்கர், தனது ஆதரவா ளர்களுடன் ஆலோசித்து, "அரசியலில் அடுத்து என்ன செய்யலாம்?" என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அதற்கு அவர்கள், "நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்" என கூறியுள்ளனர்.
இந்நிலையில், தனது தொகுதிக்கு உட்பட்ட விராலிமலை, அன்ன வாசல் பகுதிகளில் நேற்று முன்தினமும், நேற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசும்போது. ஒரு இடத்தில்கூட அதிமுக கட்சியின் பெயரையோ, சின்னத்தையோ. பொதுச் செயலாளர் பழனி சாமி பெயரையோ அவர் பயன் படுத்தவில்லை. மேலும், பொதுவாகக் கட்சிநிகழ்ச்சிகளில் கட்சித் துண்டை அணிந்து கொள்ளும் அவர், இந்த நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் அதை அணிந்து கொள்ளவில்லை.
அத்துடன், நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சி தொடர்பாக வாட்ஸ் அப்பில் பயன்படுத் தப்பட்ட அறிவிப்பிலும் அதிமுக சின்னமோ, தலைவர்களின் படங்களோ இடம்பெறவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின்போது பயன்படுத்திய வாகனத்தில் தான் நன்றி தெரிவித்து வருகிறார். ஆனால், அந்த வாகனத்தில் முகப்பில் இருந்த இரட்டை இலை சின்னம் மட்டும் அகற்றப்படவில்லை.
இதனால் அவர் அதிமுகவிலிருந்து விலகி, தவெ கவில் இணைய உள்ளதாக தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஊகங்களுக் கெல்லாம் அவர் பதில் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.
இதற்கிடையில், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் கொத்தமங்கலம் டி.பாண்டியன், கடையக்குடி திலகர் உள்ளிட்ட பலர் அதிமுகவிலிருந்து விலகி, அமைச்சர் முகமது பர்வேஸ் முன்னி லையில் புதுக்கோட்டையில் நேற்று தவெகவில் இணைந்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。