惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - Franky
J
Java Code Geeks
腾讯CDC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Jina AI
Jina AI
博客园 - 司徒正美
Stack Overflow Blog
Stack Overflow Blog
美团技术团队
L
LangChain Blog
WordPress大学
WordPress大学
A
About on SuperTechFans
Martin Fowler
Martin Fowler
月光博客
月光博客
Y
Y Combinator Blog
U
Unit 42
D
Docker
Recent Announcements
Recent Announcements
Hugging Face - Blog
Hugging Face - Blog
B
Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
G
Google Developers Blog
Last Week in AI
Last Week in AI
T
The Blog of Author Tim Ferriss
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வானூர் தொகுதியில் வெற்றி வாகை சூடுவது யார்?
2026-04-20 · via hindutamil

Updated on

3 min read

உலக மக்களை ஈர்க்கும் ஆரோவில் சர்வதேச நகரம், உலக பிரசித்தி பெற்ற திருவக்கரை வக்கரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளை கொண்டது வானூர் சட்டப்பேரவை தொகுதி. மில்லியன் ஆண்டு கடந்த வரலாற்று சுவடுக்கு உயிர் கொடுக்கும் கல் மரம் நிறைந்த பகுதியாகும்.

வானூர் (தனி) தொகுதியில் கோட்டக்குப்பம் பேரூராட்சி, வானூர் ஒன்றியத்தில் உள்ள 65 ஊராட்சிகள், கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன. மீனவ கிராமங்களை உள்ளடக்கிய தொகுதியாகும். செம்மண், மலை, கருப்பு கல் (கருப்பு கிரானைட்) உள்ளிட்ட கனிம வளங்களை கொண்டது.

இதனால் குவாரிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதன்மூலம் பெருமுதலாளிகளின் வாழ்வு ஏற்றத்தோடு செல்கிறது. சாமானிய மக்களின் வாழ்வுக்கும் உதவுகிறது. புதுச்சேரி மாநிலத்துக்கு மிக அருகாமையில் இருப்பதால், அம்மாநில பகுதியின் இடையிடையே வானூர் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்கள் பின்னிப்பிணைந்து இருக்கின்றன.

பெரும்பாலான மக்கள் புதுச்சேரி கலாச்சாரம் சார்ந்து வாழ்கின்றனர். அம்மாநிலத்தில் உள்ள பல தொழிற்சாலைகள், வானூர் இளைஞர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி வகுக்கிறது. வன்னியர்கள், பட்டியலின மக்கள் 60 சதவீதம் வாழ்கின்றனர். உடையார், ரெட்டியார், நாயுடு மற்றும் மீனவர் சமுதாயத்தினர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்டோரும் குறிப்பிட்ட அளவு உள்ளனர்.

சுதந்திர இந்தியாவுக்கு பிறகு 1962 முதல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை இதுவரை 14 முறை வானூர் தொகுதி சந்தித்துள்ளது. 1962, 1967, 1971, 1977, 1980 என தொடர்ந்து 5 தேர்தல்களில் திமுக வாகை சூடியது. 1984-ல் அதிமுக, 1989-ல் திமுக, 1991-ல் அதிமுக, 1996-ல் திமுக என மாறிமாறி வெற்றி பெற்றுள்ளது.

அதன்பிறகு 2001, 2006, 2011, 2016, 2021 என தொடர்ந்து 5 முறை அதிமுக மகுடம் சூடியிருக்கிறது. திமுக, அதிமுக என தலா 7 முறை வெற்றிக் கனியை சுவைத்துள்ளது. வரலாற்று சுவடுகள் நிறைந்த வானூர் தொகுதியில் இம்முறை திமுக, அதிமுக நேரடியாக மோதுகிறது.

வானூர் தொகுதி மீது விசிகவுக்கு விருப்பம் இருந்தாலும், 2021-ல் அக்கட்சியின் வேட்பாளர் வன்னி அரசுவை மக்கள் அங்கீகரிக்கவில்லை. வெளியூர் நபர் என்ற முத்திரையால் விசிகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனால், 2026-ல் திமுக களமிறங்கி இருக்கிறது.

திமுக வேட்பாளர் கவுதம் திராவிடமணி, அதிமுக வேட்பாளர் முருகன் ஆகிய இருவருமே புதுமுகங்கள். விசிக தலைவர் திருமாவளவனின் பிரச்சாரம் திமுக வேட்பாளருக்கு கை கொடுக்கும். மேலும் அவர், திராவிட மாடல் அரசின் சாதனைகள், தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரிக்கிறார்.

அதிமுக வேட்பாளர் முருகனுக்கு கடந்த 2009-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் தலைமை வாய்ப்பு வழங்கியது. ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இரட்டை வாக்குரிமை பெற்றிருப்பதாக எழுந்த சர்ச்சை காரணமாக முருகன் மாற்றப்பட்டார். அவருக்கு மாற்றாக அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்ட ஆனந்தன் வெற்றி பெற்றார்.

இதனால் முருகனின் வெற்றிக்கனி கை நழுவியது. 17 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கிறார். அதிமுக பொதுச் செயலாளரின் விழுப்புரம் பிரச்சாரத்துக்கு பிறகு கூட்டணி தலைவர்கள் தலையை காட்டாமல் இருந்தாலும், அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முன்னிலைப்படுத்தி ரத்தத்தின் ரத்தங்களுடன் தனி ஒருவனாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

கால் நூற்றாண்டாக கோலோச்சி வரும் இரட்டை இலையின் வெற்றிக்கனியை தக்க வைக்க போராடுகிறார். அதே நேரத்தில் இரட்டை இலையிடம் இருந்து பறிக்க உதயசூரியனும் முனைப்பு காட்டி வருகிறது.

நாம் தமிழர் கட்சி சார்பில் கரிகாலன் போட்டியிடுகிறார். இலவசங்களை தவிர்த்து குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி, தரமான கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும், யாரிடமும் தமிழக மக்களை கையேந்த விடமாட்டேன் என்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கொள்கை முழக்கங்களை மக்களிடம் எடுத்துக்கூறி ஏர் சுமக்கும் உழவர் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுரேஷ் போட்டியிடுகிறார். ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு 8 கிராம் தங்கம், குடும்பத் தலைவிக்கு ரூ.2,500, பிஎச்டி வரை படிக்கும் மாணவர்களுக்கு பிணையில்லா ரூ.20 லட்சம் கடன் உதவி, ஆண்டுக்கு 6 விலையில்லாகாஸ் சிலிண்டர், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் உள்ளிட்ட விஜய்-ன் தேர்தல் அறிக்கையை மேற்கொள்காட்டி விசில் அடித்து பிரச்சாரம் செய்கிறார். இவருக்கும், நாதக கட்சி வேட்பாளருக்கும் தங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தலைவர்கள் வரமாட்டார்களா என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.

மக்களின் எதிர்பார்ப்புகள்

வானூர் தொகுதியில் அதிகளவில் கிரானைட் கற்கள் கிடைப்பதால், அவற்றை பாலீஷ் போடும் தொழிற்சாலை மற்றும் கரும்பு சக்கையில் இருந்து காகித தொழிற்சாலை அமைக்க வேண்டும். தொழிற்பேட்டையை உருவாக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அவசியம். நெல் சாகுபடியும் இருப்பதால், போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்க வேண்டும்.

கண்டமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் தொடங்க வேண்டும். கண்டமங்கலத்தில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி தொடங்க வேண்டும். அரசு வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும். அரசு பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ தொடங்கி தொழிற்கல்விக்கு வழிகாண வேண்டும்.

ஐடி பூங்காவில் பல நிறுவனங்களை இடம்பெற செய்து, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க செய்ய வேண்டும். கோட்டக்குப்பம், பொம்மையார்பாளையம், பிள்ளைச்சாவடி பகுதியில் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்படுகிறது. ஒரு இடத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டால், அருகாமையில் உள்ள பகுதியில் மண்ணரிப்பு ஏற்படுகிறது.

இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. உப்பு நீர் நுழைவதை தடுக்க நீர் மேலாண்மையை மேற்கொள்ள வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி, மழை நீரை சேமிக்கும்போது, நிலத்தின் அடியில் உப்பு நீர் நுழைவதை தடுக்கலாம் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

ஏரி, குளங்களில் உள்ள கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. காகித அறிக்கையை தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றுகின்றனர் என விவசாயிகளும், மக்களும் நொந்து கொள்கின்றனர்.

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மற்றும் கோட்டக்குப்பத்துக்கு இணையான வளர்ச்சியை தலைமையிடமாக உள்ள வானூருக்கும் கிடைக்க, தமிழக அரசு கவனம் செலுத்தி திட்டங்களை வகுக்க வேண்டும். வட்டார மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களை, மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப தரம் உயர்த்த வேண்டும். மருத்துவர், செவிலியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

தடையின்றி சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். புதுச்சேரியை ஒட்டி இருப்பதால் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நிம்மதியுடன் வாழ சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.

குவாரிகள், ரியல் எஸ்டேட் தொழில் செழிப்பாக உள்ளதால் சமூக விரோதிகளின் நடமாட்டமும் அதிகம் உள்ளன. புதுச்சேரி மற்றும் பிற மாவட்ட ரவுடிகளின் புகலிடமாகவும் இருக்கிறது. முளையிலேயே களையெடுக்க காவல்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளன.

வாக்காளர்கள் விவரம்

  • ஆண்கள் - 1,02,719

  • பெண்கள் - 1,07,089

  • மூன்றாம் பாலினத்தவர் - 16

  • மொத்தம் - 2,09,824