惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
腾讯CDC
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Jina AI
Jina AI
N
Netflix TechBlog - Medium
有赞技术团队
有赞技术团队
博客园 - 【当耐特】
MongoDB | Blog
MongoDB | Blog
P
Proofpoint News Feed
L
LangChain Blog
aimingoo的专栏
aimingoo的专栏
GbyAI
GbyAI
B
Blog
F
Fortinet All Blogs
T
Tailwind CSS Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
G
Google Developers Blog
A
About on SuperTechFans
C
Check Point Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
MyScale Blog
MyScale Blog
B
Blog RSS Feed

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘கிரெட்’ நிறுவனர் to ‘வாட்ஸ்அப்’ குளோபல் சிஇஓ - யார் இந்த...
சு.சி.வீரகுந்தவை · 2026-06-23 · via hindutamil

Updated on: 

உலகம் முழுவதும் 300 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்அப் நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பு இப்போது ஓர் இந்தியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்தான் குணால் ஷா. வாட்ஸ்அப் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை செயல் அதிகாரியாக (குளோபல் சிஇஓ) ‘கிரெட்’ நிறுவனர் குணால் ஷாவை நியமித்துள்ளது மெட்டா நிறுவனம்.

1979-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் பிறந்து, மும்பையில் வளர்ந்த குணால் ஷா, நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜவுளித் தொழிலில் ஈடுபட்டிருந்த அவரது குடும்பம் ஒரு கட்டத்தில் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. இதனால், குடும்பத்துக்கு உதவுவதற்காக 15 வயதிலேயே சிறிய வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். இளம் வயதிலேயே வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்ட இந்த அனுபவம்தான், பின்னர் அவரது தொழில்முனைவோர் பயணத்துக்கான அடித்தளமாக அமைந்தது.

மும்பையிலுள்ள வில்சன் கல்லூரியில் தத்துவவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், பின்னர் மேலாண்மைப் படிப்பில் சேர்ந்தார். ஆனால், நடைமுறை அனுபவமே அதிகம் கற்றுத் தரும் என்ற நம்பிக்கையால் எம்பிஏ படிப்பை முழுமையாக முடிக்காமல் வெளியேறினார்.

2009-ல் ‘பைசா பேக்’ (PaisaBack) என்ற நிறுவனத்தைத் தொடங்கிய குணால் ஷா, ஓர் ஆண்டுக்குப் பிறகு சாந்தீப் டாண்டனுடன் இணைந்து ‘ஃப்ரீ சார்ஜ்’ (FreeCharge) எனும் நிறுவனத்தை உருவாக்கினார். அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த மொபைல் ரீசார்ஜ் சந்தையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும் புதிய அணுகுமுறையை அவர் அறிமுகப்படுத்தினார்.

ஆன்லைன் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு அதே மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்களை வழங்கிய ‘ஃப்ரீ சார்ஜ்’, குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றி, 2015-ல் ‘ஸ்நாப்டீல்’ (Snapdeal) நிறுவனம் ‘ஃப்ரீ சார்ஜ்’ நிறுவனத்தை சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலருக்கு கையகப்படுத்தியதன் மூலம் உச்சத்தை எட்டியது. அப்போது இந்திய ஸ்டார்ட்அப் உலகின் முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாக அது பார்க்கப்பட்டது.

‘ஃப்ரீ சார்ஜ்’ வெற்றிக்குப் பிறகு, 2018-ல் குணால் ஷா தொடங்கிய நிறுவனம்தான் ‘கிரெட்’ (CRED). பெரும்பாலான ஃபின்டெக் நிறுவனங்கள் அதிகமான வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்ட நிலையில், நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்ட பயனர்களை மட்டும் மையப்படுத்தும் வித்தியாசமான அணுகுமுறையை ‘கிரெட்’ பின்பற்றியது.

கிரெடிட் கார்டு பில் கட்டணம் செலுத்துதல், முதலீடு மற்றும் பிற நிதிச் சேவைகளை வழங்கும் இந்த நிறுவனம், அதன் தனித்துவமான வணிக மாதிரி மற்றும் விளம்பர உத்திகளால் விரைவில் கவனம் பெற்றது. குறிப்பாக, ராகுல் டிராவிட் நடித்த ‘இந்திராநகர் கா கூண்டா’ விளம்பரம் கிரெட் செயலியை நாடு முழுவதும் பிரபலப்படுத்தியது.

இன்று சுமார் 1.5 கோடி பயனர்களைக் கொண்ட ‘கிரெட்’, இந்தியாவின் முக்கிய ஃபின்டெக் நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்த மகத்தான எண்ணிக்கையை சாத்தியப்படுத்தியது அதன் நிறுவனர் குணால் ஷாவின் வணிக வியூகங்கள்.

தனது நிறுவனங்களைத் தாண்டி, இந்திய ஸ்டார்ட்அப் உலகின் செல்வாக்கு மிக்க முதலீட்டாளர்களில் ஒருவராகவும் குணால் ஷா அறியப்படுகிறார். Razorpay, Unacademy, CoinSwitch, Khatabook உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அவர் முதலீடு செய்துள்ளார்.

நுகர்வோர் நடத்தை, தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் புதிய வணிக உத்திகள் குறித்த அவரது கருத்துகள் தொழில்முனைவோர் வட்டாரங்களில் பரவலாக விவாதிக்கப்படுகின்றன. சந்தையில் வெற்றி பெற வேண்டுமெனில், ஏற்கெனவே உள்ள தயாரிப்புகளை விட குறிப்பிடத்தக்க அளவில் சிறந்த அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற அவரது ‘டெல்டா 4’ சிந்தனையும் கவனம் பெற்றது.

ஏன் ‘வாட்ஸ்அப்’புக்கு குணால் ஷா?

புதிய தயாரிப்புகளை உருவாக்கும் திறன், நுகர்வோர் தேவைகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை வளர்த்த அனுபவம் ஆகியவை குணால் ஷாவை இந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவராக மாற்றியுள்ளதாக மெட்டா கருதுகிறது.

உலகளவில் மிகப் பெரிய பயனர் அடித்தளத்தைக் கொண்டிருந்தாலும், வாட்ஸ்அப் தனது வணிகத் தொடர்புகள், டிஜிட்டல் கட்டணச் சேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளை மேலும் விரிவுபடுத்த முயன்று வருகிறது. இந்த அடுத்தகட்ட வளர்ச்சியை வழிநடத்தும் பொறுப்பே தற்போது குணால் ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

15 வயதில் குடும்பத்துக்கு உதவ சிறிய வேலைகளைச் செய்த இளைஞர், இன்று உலகின் மிகப் பெரிய தகவல் தொடர்பு தளங்களில் ஒன்றின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். குணால் ஷாவின் பயணம் ஒரு தனிநபரின் வெற்றிக் கதையாக மட்டுமல்ல, இந்தியாவில் உருவாகும் நிறுவனங்களும், இந்தியத் தொழில்முனைவோர்களும் உலக அரங்கில் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாகவும் பார்க்கப்படுகிறது.

‘ஃப்ரீ சார்ஜ்’ மூலம் டிஜிட்டல் சேவைத் துறையில் கவனம் பெற்றவர், ‘கிரெட்’ மூலம் தனித்துவமான ஃபின்டெக் பிராண்டை உருவாக்கியவர், இப்போது வாட்ஸ்அப்பின் அடுத்த அத்தியாயத்தை எழுதும் பொறுப்பை ஏற்றுள்ளார். அந்த அத்தியாயம் எப்படியிருக்கும் என்பதை தொழில்நுட்ப உலகம் மட்டுமல்ல, இந்திய ஸ்டார்ட்அப் உலகமும் எதிர்பார்ப்புடன் கவனித்துக் கொண்டிருக்கிறது.