























Updated on
:
1 min read
“தயவுசெய்து என்னை மன்னித்துவிடு நண்பா” என்று நடிகர் சூரியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார் நடிகர் கொட்டாச்சி.
வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கத்தில் உருவாகும் ‘பூ காய் கனி’ படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கொட்டாச்சியின் மகள் மானசி நாயகியாக அறிமுகமாகிறார். இந்த விழாவில் இயக்குநர் வெற்றி வீரன் மகாலிங்கம் மற்றும் கொட்டாச்சி இருவருமே சூரி எந்தவொரு உதவியும் செய்வதில்லை என்று குற்றம்சாட்டினார்கள். இது இணையத்தில் வைரலாக பேசப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்புக் கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கொட்டாச்சி. அந்த வீடியோவில் கொட்டாச்சி, “நண்பன் சூரி குறித்து பேசிய வீடியோவை அனைவரும் பகிர்ந்திருக்கிறீர்கள். என்றைக்குமே சூரி எனக்கு நண்பர் தான். எங்களுடைய நட்புக்குள் எந்தவொரு விரிசலுமே இல்லை. அவர் மீது எனக்கு எந்தவொரு கோபமும் கிடையாது.
இன்றைக்கு இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால், அதற்கு அவரது உழைப்பும், திறமையும்தான். சினிமாவில் திறமைக்குதான் வேலை, உழைப்புக்குதான் மரியாதை.நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநரும், சூரியும் நல்ல நண்பர்கள். அவர்களுக்கு இடையே நடந்த ஆரம்பகால வேதனையை அந்த இடத்தில் பகிர்ந்துக் கொண்டார். அப்போது கொட்டாச்சியும் சூரியின் ஆரம்ப கால நண்பர் தானே என்று ஒருவர் கேட்க, நான் சமீபத்தில் நடந்த விஷயத்தை பற்றி பேசிவிட்டேன்.
தயவுசெய்து சூரி என்னை மன்னித்துவிடுங்கள். என் நண்பன் எனக்கு பண்ணவில்லை என்ற குறையை பகிர்ந்தேன். நீங்கள் நிறைய குழந்தைகளின் படிப்புக்கு பண உதவி செய்து வருகிறீர்கள். அதை எல்லாம் கேள்விப்படும்போது பெருமையாக இருக்கிறது. சினிமாவில் இதை பண்ணவில்லை என்று உணர்ச்சிவசப்பட்டு அந்த இடத்தில் சொல்லியிருக்க கூடாது. ஆனால், சொல்லிவிட்டேன். தயவு செய்து என்னை மன்னித்துவிடு நண்பா” என்று தெரிவித்துள்ளார் கொட்டாச்சி.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。