惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
J
Java Code Geeks
博客园 - 聂微东
量子位
C
Check Point Blog
T
The Blog of Author Tim Ferriss
T
Tailwind CSS Blog
G
Google Developers Blog
Google DeepMind News
Google DeepMind News
B
Blog
罗磊的独立博客
腾讯CDC
GbyAI
GbyAI
博客园 - 【当耐特】
A
About on SuperTechFans
M
MIT News - Artificial intelligence
U
Unit 42
D
Docker
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Y
Y Combinator Blog
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
S
SegmentFault 最新的问题
有赞技术团队
有赞技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அலிசனின் 2 ‘சேவ்’களால் பிழைத்தது பிரேசில் - ‘டஃப்’ தந்த ம...
ஆர்.முத்துக்குமார் · 2026-06-14 · via hindutamil

Updated on: 

நியூயார்க் நகரில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘சி’- பிரிவு ஆட்டத்தில் ஆஃப்கான் கோப்பைச் சாம்பியன் மொராக்கோவை 5 முறை உலக சாம்பியன்களான பிரேசில் எதிர்கொண்ட ஆட்டம் எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வி இன்றி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இதனால் புள்ளிகள் பகிரப்பட்டுள்ளது.

1934-ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஸ்பெயினுக்கு எதிராக முதல் போட்டியில் தோற்ற பிறகே முதல் போட்டியைத் தோற்காமல் பிரேசில் காப்பாற்றி வந்துள்ளது. அதாவது 21 உலகக் கோப்பை முதல் போட்டிகளில் 17 வெற்றிகளுடன் தோல்வியடையாத சாதனையை இன்றும் பராமரித்தது.

மொராக்கோ ஆஃப்கான் கோப்பை சாம்பியன் என்பதாலும் பிரேசில் ஒரு மிகப்பெரிய திறமைகளைக் கொண்ட அணி என்பதாலும் தரவரிசையில் பிரேசில் 6-ம் இடத்திலும் மொராக்கோ 7-ம் இடத்திலும் இருப்பதால் இந்த உலகக் கோப்பையின் குழு மட்ட மோதலில் இது பெரிய போட்டியாக கருதப்பட்டது. ஆனால், விளம்பரங்களின் ஹைப்புக்கு ஈடு கொடுத்து ஆடிய அணி மொராக்கோ என்றால் மிகையாகாது. பிரேசில் அணி முதல் அரைமணி நேரத்தில் திக்கித் திணறியது. மொராக்கோவின் நட்சத்திர வீரர் ஹக்கிமி வலது புறத்தில் பிரேசிலுக்கு கடும் சிக்கல்களை ஏற்படுத்தினார்.

மொராக்கோவின் முதல் கோல்!

அந்தச் சிக்கல்களின் விளைவாக முதல் அரைமணி நேர ஆட்டத்திலேயே 7 முறை கோலை நோக்கிய ஷாட் முயற்சி செய்தது மொராக்கோ. ஆனால், எதுவும் இலக்கு நோக்கி இல்லை. என்றாலும் இந்த அரைமணி நேரத்தில் பிரேசில் கால்கள் மெதுவாகவும் களைப்படைந்ததாகவுமே இருந்தது. இத்தகைய ஆட்டப்போக்கில்தான் 21-வது நிமிடத்தில் பிரேசிலின் தடுப்பு வீரர்கள் எங்கே என்ற கேள்வி எழுமாறு அந்த மொராக்கோ கோல் அமைந்தது. மிட்ஃபீல்டில் ஒரு தளர்வான பந்தை மொராக்கோ வீரர் பிராஹிம் டயஸ் எடுத்து சக வீரர் சைபாரியிடம் கொடுக்க அங்கு பிரேசில் தடுப்பு வீரர்கள் இல்லை.

பந்து பெனால்டி பகுதிக்குள் செல்லாமலேயே பிரேசில் கோல் கீப்பர் முன்னால் வந்து தடுக்க முனைந்தார், கோல் வலை காலியாக இருக்க, சைபாரி பந்தை தூக்கி விட்டார் கோல் வலைக்குள் பந்து புகுந்தது மொராக்கோ 1-0 என்று முன்னிலை பெற்றது. இதில் பிரேசில் ஆடிப்போய் விட்டது.

பிரேசிலுக்கு உயிர் கொடுத்த ‘மேஜிக்’ வினிசியஸ் ஜூனியர்:

26-வது நிமிடத்தில் அஷ்ரப் ஹக்கிமி மீண்டும் ஒரு கோல் முயற்சியை மேற்கொண்டார். ஆனால், பந்து வைடாகச் சென்றது. ஒரு கோலை வாங்கிய பிறகே உணர்வு பெற்ற பிரேசில், கொஞ்சம் உஷ்ணத்தைக் கூட்டியது. வேகத்தைக் கூட்டியது, அந்த நிலையில்தான் ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் பிரேசில் அணிக்கு உயிர் கொடுத்தார்.

பிரேசிலின் இன்னொரு வீரர் கிமாரேஸ் கொடுத்த அட்டகாசமான பாஸை இடது விங்கில் இருந்த வினீஷியஸ் பெற்று உள்ளே வந்தார். பந்தை வலது காலுக்கு மாற்றிக் கொண்டு மொராக்கோ கோல் கீப்பர் ஒன்றுமே செய்ய முடியாதபடிக்கு டாப் கார்னரில் சக்தி வாய்ந்த ஷாட்டை கோலுக்குள் செலுத்தினார். உண்மையில் மேஜிக் கோல். இத்தகைய கோல்தான் இன்று பிரேசிலை உயிர்ப்பித்தது என்றால் மிகையாகாது. வினிசியஸின் 10-வது சர்வதேச கோல் ஆகும் இது.

இடைவேளைக்கு சற்று முன்னதாக பிரேசிலின் பக்வெட்டா அடித்த சிசர் ஷாட் முயற்சியை மொராக்கோ கோல்கீப்பர் தடுத்தார். கடைசி நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் மிக வேகமாக ஒரு பந்தை எடுத்துச் சென்றார். ஆனால் மொராக்கோ நட்சத்திர வீரர் ஹக்கிமி அதைத் தடுத்தார். வினிசியஸ் நடுவரிடம் ஃபவுல் என்று மன்றாடினார். ஆனால், ஃபவுல் கொடுக்காத நடுவர் ஃப்ரீ கிக்கையும் மொராக்கோவுக்கு வழங்கினார். வினிசியஸ் கடுப்பானார். இடைவேளை இவ்வாறு கொஞ்சம் உஷ்ணத்துடன் முடிந்தது. இரு அணிகளும் 1-1 என்று இருந்தது.

இடைவேளையின் போது இரண்டு பிரேசில் வீரர்கள் காஸ்மிரோ மற்றும் இபனேஸுக்கு மஞ்சள் அட்டைக் காட்டப்பட்டதால் இடைவேளைக்குப் பிறகு மேலாளர் ஆன்சிலோட்டி அவர்களைக் களமிறக்காமல் ரஃபீனா மற்றும் ஹென்றிக் ஆகியோரைக் களமிறக்கினார், இவர்களுடன் குனியாவும் சேர பிரேசில் அணிக்குக் கொஞ்சம் வேகம் கிடைத்தது.

ஆனாலும் மொராக்கோவின் தடுப்பு உத்தியைத் தாண்டி கோலாக மாற்ற முடியாமல் திணறியது. கோல் நோக்கிய ஷாட்களும் அரிதானது. ஆனால் ஆட்டம் முடியும் தறுவாயில் பிரேசில் மிகவும் ஆக்ரோஷமாக ஆடியது. கோலாக அது மாறவில்லை. லூயிஸ் ஹென்றிக் ஏறக்குறைய வெற்றி கோல் அடித்திருப்பார். ஆனால் மொராக்கோ கோல்கீப்பர் பானோ அருமையாக பிரஷர் சூழ்நிலையில் தடுத்தார்.

ஆட்டம் 90 நிமிடங்கள் சென்ற பிறகு கடைசி 10 நிமிட ஸ்டாப்பேஜ் டைமுக்குச் சென்றது. அதில் 99வது நிமிடத்தில் மொராக்கோ ஏறக்குறைய வெற்றிக்கான கோலை அடித்திருக்கும், அத்தகைய அட்டகாசமான முயற்சியை அதைவிடவும் கூர்மையான பிரேசில் கோல்கீப்பர் அலிசன் தடுத்துக் காப்பாற்றினார்.

முதலில் மொராக்கோ வீரர் எல் அய்னோயி பிரேசில் கோல் வலையின் வலது மூலையை நோக்கி அடித்த அற்புதமான ஷாட்டை அலிசன் டைவ் அடித்து தட்டி விட்டார். ஆனால் அங்கு இன்னொரு மொராக்கோ வீரர் அமய்மவ்னி பந்தை கோலுக்குள் திருப்பி விட்ட முயற்சியையும் அலிசன் தடுத்தாட்கொண்டார். இதனால் பிரேசில் தப்பிப் பிழைத்தது. இல்லையெனில் மொராக்கோவிடம் இன்று தோல்வி கண்டிருக்கும்.

பிரேசில் அணி இன்னும் நிறைய கடின உழைப்பை இட வேண்டியுள்ளது. உத்தி ரீதியாகவும் இத்தாலி பயிற்சியாளர் ஆன்சிலொட்டி நிறைய பிரேசில் அணியிடத்தில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.