惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 三生石上(FineUI控件)
月光博客
月光博客
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
WordPress大学
WordPress大学
Hugging Face - Blog
Hugging Face - Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
M
MIT News - Artificial intelligence
腾讯CDC
B
Blog RSS Feed
H
Help Net Security
J
Java Code Geeks
有赞技术团队
有赞技术团队
Y
Y Combinator Blog
博客园_首页
Last Week in AI
Last Week in AI
博客园 - 【当耐特】
博客园 - Franky
B
Blog
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - 叶小钗
Martin Fowler
Martin Fowler

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழ்​நாடு யு-20 கால்​பந்து அணிக்கு நிதி மறுப்பு: விளையாட...
2026-04-26 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: விவே​கானந்தா கால்​பந்து கோப்​பைக்​கான போட்டியில் பங்​கேற்​கச் செல்​லும் தமிழ்​நாடு 20 வயதுக்​கு உட்பட்டோர்​ (​யு-20) கால்​பந்து அணிக்கு நிதி மறுக்​கப்​பட்​டுள்​ளது. இந்த விஷ​யத்​தில் தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணையம்​(எஸ்​டிஏடி) தலை​யிட திண்​டுக்​கல் மாவட்ட கால்​பந்து கழகம் கோரிக்கை விடுத்​துள்​ளது.

இதுதொடர்​பாக திண்​டுக்​கல் மாவட்ட கால்​பந்து கழகத்​தின் செயலர் எஸ்​.சண்​முகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறியுள்​ள​தாவது: அகில இந்​திய கால்​பந்து சம்​மேளனம்​(ஏஐஎஃப்​எஃப்) சார்​பில் மாணவர், மாணவி​கள், இளம் கால்​பந்து வீரர், வீராங்கனை​களுக்​காக 13, 15, 20 வயதுக்​குட்​பட்​டோர், சீனியர்​பிரிவு சந்தோஷ் டிராபி, ராஜ்​மாதா ஜீஜா​பாய் டிராபிக்​கான மகளிர் சீனியர் தேசிய அளவி​லான கால்​பந்​துப் போட்​டிகள் ஆண்​டு​தோறும் நடத்தப்​படு​கின்​றன. இந்​தப் போட்​டிகளில் பங்​கேற்று விளை​யாடு​வது இளம் வீரர்​களின் விளை​யாட்டு வாழ்க்​கை, கல்​வி, வேலை​வாய்ப்பு முன்​னேற்​றத்​துக்கு மிக​வும் முக்​கிய​மான​தாகும். குறிப்பாக வயது வரம்பு கொண்ட போட்​டிகளில் ஒரு வருடம் விளையாட வாய்ப்பு கிடைக்​கா​விட்​டால், அடுத்த ஆண்டு அதே வயது பிரி​வில் பங்​கேற்க இயலாது.

தமிழ்​நாடு கால்​பந்து கழகத்​துக்​காக முன்​னாள் நீதிபதி ஏ.கே.​ராஜன் தலை​மை​யில் நியமிக்​கப்​பட்ட நிர்​வாகக்​குழு கடந்த காலங்​களில் 20 வயதுக்​குட்​பட்​டோர் விவே​கானந்தா கோப்பை போட்​டிக்கு தமிழக அணியை அனுப்​புவ​தில் தேவை​யான நடவடிக்கை எடுக்​க​வில்​லை. போட்​டிக்கு செல்ல நிதி இல்லை என்று தெரிவிக்​கப்​பட்​ட​தால் வீரர்​கள் பாதிக்​கப்​படும் நிலை ஏற்பட்​டது.

இதையடுத்து திண்​டுக்​கல் மாவட்ட கால்​பந்து கழகத்​தின் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்து நீதி​மன்ற உத்​தர​வின்​படி தமிழ்​நாடு அணியை போட்டிக்கு அனுப்பி வைத்​தோம். அந்த அணி​யில் விளை​யாடிய வீரர்​கள் பின்​னர் தேசிய அளவி​லான சந்​தோஷ் டிராபி போட்​டி​யில் விளை​யாடினர்.

ஆனால், நீதி​மன்ற உத்​தர​வின்​படி அணி சென்று வருதல் உள்​ளிட்​ட​வற்​றுக்​காக செல​விடப்​பட்ட தொகை இன்று வரை தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தால்​​(எஸ்​டிஏடி), எங்​களுக்கு திருப்ப வழங்​கப்​பட​வில்​லை.

இதே நிலை இந்த ஆண்​டும் தொடர்​கிறது. 20 வயதுக்​குட்​பட்ட வீரர்​கள் கொண்ட தமிழ்​நாடு அணி ஐஎஸ்​எல், தேசிய லீக் போன்ற போட்​டிகளுக்கு முன்​னேறு​வதற்கு இத்​தகைய தேசிய போட்​டிகள் முக்​கிய வாயி​லாக உள்​ளன. இந்த வாய்ப்பை மறுப்​பது, வீரர்​களின் விளை​யாட்டு வாழ்க்​கை, கல்​வி, வேலை​வாய்ப்​புக்கு பெரும் பா​திப்பை ஏற்​படுத்​தும்.

எனவே, தமிழ்​நாடு கால்​பந்து நிர்​வாகக் குழு​வும், தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​ய​மும் உடனடி​யாக தேவை​யான நடவடிக்​கை எடுத்​து 20 வயதுக்​குட்​பட்​ட வீரர்​களின்​ எதிர்​காலத்​தை பாது​காக்​கவேண்​டும்​.இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.