惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

P
Proofpoint News Feed
云风的 BLOG
云风的 BLOG
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Hugging Face - Blog
Hugging Face - Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Google DeepMind News
Google DeepMind News
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
雷峰网
雷峰网
B
Blog
月光博客
月光博客
博客园 - 【当耐特】
WordPress大学
WordPress大学
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
I
InfoQ
The GitHub Blog
The GitHub Blog
Engineering at Meta
Engineering at Meta
Jina AI
Jina AI
博客园 - Franky
MyScale Blog
MyScale Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Last Week in AI
Last Week in AI
B
Blog RSS Feed
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ மே 21 - 27
2026-05-20 · via hindutamil

Updated on

3 min read

கடகம்:

(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் தொடங்கும் தருணத்தில் ராசிநாதன் சந்திரன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். நீங்கள் எடுக்கும் முடிவில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. நீங்கள் நடந்து கொள்ளும் விதம் சிலருக்கு புதிராக இருக்கும். தொழிலில் நல்ல அபிவிருத்தி உண்டாகும். புதிய தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள்.

பங்குதாரர்களுடன் சிறு வாக்கு வாதங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் பண வரவிற்கு குறைவிருக்காது. அதிக வருமானம் கிடைக்கும். உடல் நிலையில் அவ்வப்போது தொந்தரவுகள் வருவதை தவிர உங்களுக்கு நன்மையே நடக்கும். வேலைப் பளுவின் காரணமாக நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெற்று தக்க சன்மானம் பெறுவர்.

நிர்வாகத் திறமை கொண்டவர்கள் உயர்ந்த நிலையை அடையப் பெறுவார்கள். பெண்களின் நீண்ட நாளைய கனவு நனவாகும். கணவரின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு உண்டான பொறுப்புகள் அதிகரிக்கும். நேர்மையாக நடந்து கொள்வதன் மூலம் ஆசிரியரிடம் பாராட்டைப் பெறலாம்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பூசம்: எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். ராசியாதிபதி சனியும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்று சஞ்சாரம் செய்வதால் பண வரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும்.

ஆயில்யம்: இந்த வாரம் வீண் பிரச்சனைகள் தலை தூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மன வருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப் பளு கூடும்.

பரிகாரம்: திங்கட்கிழமைகளில் அம்பாளை மல்லிகை மலர் கொண்டு வழிபட்டு வாருங்கள்.

சிம்மம்:

(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் கேது - களத்திர ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் - லாப ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் கேந்திரங்கள் பலமாக இருக்கிறது. உடன் பணிபுரிவோர் ஆதரவாக இருப்பார்கள். கோபுர தரிசனம் உங்களுக்கு கை கொடுக்கும். வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சனைகள் எழலாம். கவனமுடன் இருப்பது மிக முக்கியம். தொழிலில் உன்னத நிலையை உங்களுக்கு எடுத்துக் காட்டுவார்கள். நிறைய உழைத்தாலும் அதற்கேற்ற பலனை நீங்கள் சற்று குறைவாகத்தான் பெற முடியும்.

குடும்பத்தை பொறுத்தவரை சுப நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து குல தெய்வ பிரார்த்தனையை முடித்து வைப்பர். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் கூடிய விரைவில் நிகழும். உத்தியோகத்தில் முன்னேற்றமும், ஊக்கமும் சற்று குறைந்து காணப்படும். வங்கிக் கடன் சிலருக்கு கிடைக்கப் பெறுவீர்கள்.

உடன் பணிபுரிபவர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். பெண்கள் சிறப்பாக செயல்பட்டு குடும்பத்தில் நற்பெயர் சம்பாதிப்பீர்கள்.கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு நண்பர்களுடன் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். தேவையில்லாத விசயங்களில் தலையிட வேண்டாம்.

மகம்: இந்த வாரம் குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கு இடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.

பூரம்: இந்த வாரம் உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரம் மூலம் பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சனை தீரும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை.

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்து தியானம் செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வ மாலை சாற்றுங்கள்

கன்னி:

(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை- ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். அதே வேளையில் சனி பகவான் சப்தம ஸ்தானத்தில் இருக்கிறார். சிறு சிறு உடல் உபாதைகளால் அவதிப்பட நேரலாம். ஆதலால் மன சோர்வும் உண்டாகலாம். செலவுகள் ஏற்படும் நேரம். தொழிலைப் பொறுத்தவரை உங்களுக்கு முக்கியமான கால கட்டம். புதிய தொழில் துவங்குவது இருக்கும் தொழிலை விரிவுபடுத்துவது போன்ற அனைத்துமே செய்யலாம்.

குடும்பத்தில் சந்தோஷம் குடிகொண்டிருக்கும். அனைத்து வசதி வாய்ப்புகளும் தாமாகவே வந்து சேரும். அரசு வேலைகளில் இருந்த தொய்வு நிலை மாறும். உங்கள் பேச்சிற்கு அனைவரும் கட்டுப்பட்டு நடப்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெற்று அதிக ஆதாயங்களைப் பெறுவீர்கள். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள்.

அது உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு வெற்றியாய் அமையும். பெண்களுக்கு ஆடம்பர பொருட்கள் வந்து சேரும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பிறரால் தொல்லை வரும். மாணவர்களுக்கு வருகின்ற தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற சிறப்பாக பயிலுவீர்கள். வெற்றி உண்டாகும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு குறையும். முயற்சிகள் கால தாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.

அஸ்தம்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பண வரத்து திருப்தி தரும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பண தேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும்.

பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வரவும்.

<div class="paragraphs"><p><em>இந்த வார கிரகங்களின் நிலை</em></p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.