惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
Recent Announcements
Recent Announcements
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
有赞技术团队
有赞技术团队
J
Java Code Geeks
T
The Blog of Author Tim Ferriss
MyScale Blog
MyScale Blog
人人都是产品经理
人人都是产品经理
aimingoo的专栏
aimingoo的专栏
U
Unit 42
The GitHub Blog
The GitHub Blog
云风的 BLOG
云风的 BLOG
T
Tailwind CSS Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 三生石上(FineUI控件)
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
小众软件
小众软件
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 司徒正美
腾讯CDC
I
InfoQ
GbyAI
GbyAI
博客园_首页

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அசாமில் பாஜக ஹாட்ரிக் வெற்றி: 2-வது முறை முதல்வராகிறார் ஹ...
செய்திப்பிரிவு · 2026-05-05 · via hindutamil

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்றதையடுத்து, குவாஹாட்டியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மாநில தலைவர் திலீப் சைக்கியா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.படம்: பிடிஐ

Updated on: 

குவாஹாட்டி: அ​சாம் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான கூட்​டணி ஹாட்​ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்​துள்​ளது. இக்​கூட்​டணி 100-க்​கும் மேற்​பட்ட தொகு​தி​களைக் கைப்​பற்றி உள்​ளது. இதையடுத்​து, ஹிமந்த பிஸ்வா சர்மா 2-வது முறை​யாக முதல்​வ​ராக பொறுப்​பேற்​பார் எனத் தெரி​கிறது.

அசாமில் 126 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. அங்கு 2016-ம் ஆண்டு பாஜக முதல் முறை​யாக ஆட்​சி​யைப் பிடித்​தது. அப்​போது சர்​வானந்த சோனோ​வால் முதல்​வ​ரா​னார். 2021-ல் நடை​பெற்ற தேர்​தலில் பாஜக 2-வது முறை​யாக ஆட்​சி​யைப் பிடித்​தது. அப்​போது, ஹிமந்த பிஸ்வா சர்மா முதல்​வ​ரா​னார்.

இந்​நிலை​யில், கடந்த ஏப்​ரல் 9-ம் தேதி அசாமில் ஒரே கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற்​றது. இதில் ஆளும் பாஜக, அசாம் கண பரிஷத் மற்​றும் போடோ மக்​கள் முன்​னணி ஆகிய கட்​சிகள் அடங்​கிய தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) போட்​டி​யிட்​டது.

இது​போல காங்​கிரஸ் தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் ராய்​ஜோர் தளம், ஏஜெபி, சிபிஐ (எம்), ஏபிஹெச்​எல்சி மற்​றும் சிபிஐ (எம்​எல்) ஆகிய கட்​சிகள் போட்டியிட்டன. இதுத​விர அனைத்து இந்​திய ஜனநாயக முன்​னணி (ஏஐ​யுடிஎப்) தனி​யாக போட்​டி​யிட்​டது. இதில் 85.96% வாக்​கு​கள் பதி​வானது. 722 வேட்​பாளர்​கள் போட்​டி​யிட்​டனர்.

இந்​நிலை​யில், அசாமில் பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன. ஆட்​சி​யைப் பிடிக்க 64 இடங்​கள் தேவைப்​படு​கின்​றன. இதில் ஆளும் பாஜக தலை​மையி​லான என்​டிஏ கூட்​டணி 102 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளது. இதில் பாஜக 82, போடோலாந்து மக்​கள் முன்​னணி 10, அசாம் கண பரிஷத் 10 இடங்​களில் வெற்றி பெற்​றுள்​ளன. இதன்​மூலம் இக்​கூட்​டணி தொடர்ந்து 3-வது முறை​யாக (ஹாட்​ரிக்) அமோக வெற்றி பெற்​றுள்​ளது. ஹிமந்த பிஸ்வா சர்மா 2-வது முறை​யாக முதல்​வ​ராக பொறுப்​பேற்​பார் எனத் தெரி​கிறது.

காங்​கிரஸ் தலை​மையி​லான எதிர்க்​கட்​சிகள் கூட்​டணி 21 இடங்​களி​லும் ஏஐயுடிஎப் 2 இடங்​களி​லும் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி ஒரு இடத்​தி​லும் வெற்றி பெற்​றுள்​ளன. அசாமில் ஹாட்​ரிக் வெற்றி பெற்​றதையடுத்​து, மாநிலம் முழு​வதும் பாஜக​வினர் வெற்​றி்க் கொண்​டாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். முதல்​வர் சர்​மா​வும் கட்சி நிர்​வாகி​களு​டன் கொண்​டாட்​டத்​தில் ஈடு​பட்​டார். அப்​போது அவர் வெற்​றிச் சின்​னத்​தைக் காண்​பித்​தார்.

அமித் ஷா வாழ்த்து: மத்​திய உள் துறை அமைச்​சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்​தில், “அசாமில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி தொடர்ந்து 3-வது முறை​யாக அமோக வெற்றி பெற்​றுள்​ளது. இது பிரதமர் நரேந்​திர மோடி மற்​றும் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலை​மையி​லான இரட்டை இன்​ஜின் அரசு மீது மக்​கள் வைத்​துள்ள நம்​பிக்​கை​யின் பிர​திபலிப்​பு. இந்த வெற்​றிக்​காக கட்​சி​யின் தேசிய தலை​வர் நிதின் நவின், முதல்​வர் சர்​மா, மாநில பாஜக தலை​வர் திலீப் சைக்​கியா மற்​றும் கட்​சித் தொண்​டர்​களுக்கு வாழ்த்​துகள்" என பதி​விட்​டுள்​ளார்.

முதல்​வர் ஹிமந்த வெற்றி: ஜலுக்​பரி தொகு​தி​யில் பாஜக சார்​பில் போட்​டி​யிட்ட முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்​மா, 89,434 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றார். ஹிமந்த பிஸ்வா சர்மா மொத்​தம் 1,27,151 வாக்​கு​கள் பெற்ற நிலை​யில் இவரை எதிர்த்து போட்​டி​யிட்ட காங்​கிரஸ் வேட்​பாளர் பிதிஷா நியோக் 37,717 வாக்​கு​கள் மட்​டுமே பெற்​றுள்​ளார்.

கவுரவ் கோகோய் தோல்வி: மக்​களவை எதிர்க்​கட்​சித் துணைத் தலை​வ​ரும் அசாம் காங்​கிரஸ் தலை​வ​ரு​மான கவுரவ் கோகோய், ஜோர்​ஹட் மக்​களவை தொகுதி உறுப்​பின​ராக உள்​ளார். முன்​னாள் முதல்​வர் தருண் கோகோய் மகனான இவர், ஜோர்​ஹட் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸ் சார்​பில் போட்​டி​யிட்​டார். இந்​தத் தொகு​தி​யில் பாஜக சார்​பில் போட்​டி​யிட்ட ஹிதேந்​திர நாத் கோஸ்​வாமி 69,439 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். கோகோய் 23,182 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தார்.

ஹிதேந்​திர நாத் கோஸ்​வாமி 2017 முதல் 2021 வரையி​லான காலத்​தில் சட்​டப்​பேர​வைத் தலை​வ​ராகப் பதவி வகித்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. கடந்த 2021-ம் ஆண்டு நடை​பெற்ற அசாம் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக 75 இடங்​களி​லும் காங்​கிரஸ் கூட்​டணி 50 இடங்​களி​லும் வெற்றி பெற்​றன. இந்​தத் தேர்​தலில் காங்​கிரஸ் கூட்​டணி வென்ற தொகு​தி​கள் மேலும் குறைந்​துள்​ளன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.