惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

人人都是产品经理
人人都是产品经理
博客园_首页
IT之家
IT之家
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Vercel News
Vercel News
美团技术团队
D
Docker
WordPress大学
WordPress大学
T
Tailwind CSS Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
The Cloudflare Blog
Y
Y Combinator Blog
F
Fortinet All Blogs
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
G
Google Developers Blog
爱范儿
爱范儿
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
月光博客
月光博客
MongoDB | Blog
MongoDB | Blog
S
SegmentFault 最新的问题
GbyAI
GbyAI
Hugging Face - Blog
Hugging Face - Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பிஹாரில் 2 பெண் நடன கலைஞர்களை கடத்தி 13 பேர் கும்பல் துப்...
செய்திப்பிரிவு · 2026-06-22 · via hindutamil

Updated on: 

பாட்னா: பிஹாரில் 2 பெண்​களைக் கடத்தி, துப்​பாக்கி முனையில் கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​ உள்​ளது.

ஜார்க்​கண்ட் மாநிலம் லாத்​தேஹர் மாவட்​டத்​தைச் சேர்ந்த உறவினர்​களான இரண்டு பெண்​கள், பிஹார் தலைநகர் பாட்னாவின் மிதாபூர் பகு​தி​யில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி நடனக் கலைஞர்​களாகப் பணி​யாற்றி வந்​தனர். இந்த நிலை​யில், நவ்​பத்​பூர் காவல் எல்​லைக்​குட்​பட்ட பகு​தி​யில் நடை​பெற்ற ‘திலகம்' சடங்கு விழா​வில் நடன​மாடு​வதற்​காக, முன்னா குமார் என்​பவ​ரால் இந்த இரு பெண்​களும் முறைப்​படி அழைக்கப்பட்டிருந்​தனர்.

இதற்​காகப் புறப்​பட்ட பெண்​களை, விழா நடக்​கும் இடத்​திற்கு அழைத்​துச் செல்​லாமல், சிலர் திட்​ட​மிட்டு தனிமை​யான இடத்திற்கு கடத்​திச் சென்​றுள்​ளனர். காவல்​துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்​கை​யின்​படி, கடத்​தப்​பட்ட அந்த இரு பெண்​களும் தனித்​தனி இடங்​களில் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். பின்​னர், துப்​பாக்கி முனை​யில் சுமார் 13 பேர் கொண்ட கும்​பலால் அந்​தப் பெண்​கள் இரவு முழு​வதும் அடுத்​தடுத்து கூட்​டுப் பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதற்கு அந்​தப் பெண்​கள் எதிர்ப்பு தெரி​வித்​த​போது, அவர்​களைக் கொடூர​மாகத் தாக்​கி, கொலை மிரட்​டலும் விடுத்​துள்​ளனர். மறுநாள் காலை​யில், பாதிக்​கப்​பட்ட பெண்​கள் இரு​வரும் ஒரு வாக​னத்​தில் ஏற்​றிச் செல்​லப்​பட்​டனர். அந்த வாக​னம் புல்​வாரி ஷெரீப் காவல் நிலை​யப் பகு​தியை அடைந்​த​போது, தங்​களுக்கு நேர்ந்த கொடூரத்தை வெளி​யில் சொல்ல நினைத்த பெண்​கள், வாக​னத்​திற்​குள் இருந்​த​படியே கூச்​சலிட்​டனர். சத்​தம் கேட்டு உஷா​ரான அப்​பகுதி பொது​மக்​கள், உடனடி​யாக காவல்துறையினருக்​குத் தகவல் கொடுத்​தனர்.

இது குறித்து புல்​வாரி ஷெரீப் துணை கோட்ட போலீஸ் அதி​காரி தீபக் குமார் கூறுகை​யில், "பெண்​கள் இரு​வர் கூட்​டுப் பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கப்​பட்ட தகவல் கிடைத்த உடனே, முதற்​கட்​ட​மாக ஜீரோ எப்​ஐஆர் பதிவு செய்​யப்​பட்​டது. பின்​னர் மேல் விசா​ரணைக்​காக அது நவ்​பத்​பூர் காவல் நிலை​யத்​திற்கு மாற்​றப்​பட்​டது. குற்​ற​வாளி​களில் முன்னா குமார், சூரஜ் குமார் மற்​றும் பானு குமார் ஆகிய மூன்று பேர் அடை​யாளம் காணப்பட்டுள்​ளனர். தலைமறை​வாக உள்ள மற்​றவர்​களைப் பிடிக்க சிறப்​புப் புல​னாய்​வுக் குழு அமைக்​கப்​பட்​டு, தீவிர தேடுதல்​ வேட்​டை நடை​பெற்​று வரு​கிறது" என்​றார்​.