惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
Recent Announcements
Recent Announcements
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
有赞技术团队
有赞技术团队
J
Java Code Geeks
T
The Blog of Author Tim Ferriss
MyScale Blog
MyScale Blog
人人都是产品经理
人人都是产品经理
aimingoo的专栏
aimingoo的专栏
U
Unit 42
The GitHub Blog
The GitHub Blog
云风的 BLOG
云风的 BLOG
T
Tailwind CSS Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 三生石上(FineUI控件)
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
小众软件
小众软件
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 司徒正美
腾讯CDC
I
InfoQ
GbyAI
GbyAI
博客园_首页

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மெரினாவில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
2026-04-27 · via hindutamil

சென்னை மெரினாவில் தீப்​பற்றி எரிந்த கார்​.

Updated on

1 min read

சென்னை: மெரினா கடற்​கரை​யில் நிறுத்​தப்​பட்​டிருந்த கார் தீப்​பற்றி எரிந்த சம்​பவம், பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. சென்​னை​யில் மென்​பொறி​யாள​ராகப் பணிபுரிந்து வரும் ஸ்ரீநாத் என்​பவர், நேற்று அதி​காலை சூரிய உதயத்​தைக் காண்​ப​தற்​காகத் தனது காரில் மெரினா கடற்​கரைக்கு வந்​தார்.

மெரினா சர்​வீஸ் சாலை​யில் காரை நிறுத்​தி​விட்டு கடற்​கரைக்​குச் சென்​றார். சிறிது நேரம் கழித்து அவர் மீண்​டும் காரை நோக்கி வந்​த​போது, எதிர்​பா​ராத வித​மாக கார் திடீரெனத் தீப்​பற்றி எரி​யத் தொடங்​கியது.

கண்​ணிமைக்​கும் நேரத்​தில் தீ காரின் அனைத்​துப் பகு​தி​களுக்​கும் பரவிய​தால், அந்த இடமே கரும்​புகை மண்​டல​மாகக் காட்​சி​யளித்​தது. இதைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்த அங்​கிருந்த பொது​மக்​களும், நடைப்​ப​யிற்சி மேற்​கொண்​ட​வர்​களும் உடனடி​யாக காவல் துறை​யினருக்​கும், தீயணைப்​புத் துறைக்​கும் தகவல் அளித்​தனர்.

தகவலின் பேரில், திரு​வல்​லிக்​கேணி தீயணைப்பு நிலைய வீரர்​கள் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்​து, தீயை அணைத்​தனர். எனினும், இந்த விபத்​தில் கார் முற்​றி​லும் எரிந்து எலும்​புக்​கூ​டாக மாறியது.

அதிர்​ஷ்ட​வச​மாக கார் நிறுத்​தப்​பட்​டிருந்த போது தீ விபத்து ஏற்​பட்​ட​தால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்​கப்​பட்​டது. காரில் ஏற்​பட்ட மின் கசிவு காரண​மாகத் தீ விபத்து ஏற்​பட்​டதா அல்​லது வேறு ஏதேனும் காரணமா என்​பது குறித்​துக் காவல்​துறை​யினர் தீவிர விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.