惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

C
Check Point Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Jina AI
Jina AI
Microsoft Security Blog
Microsoft Security Blog
IT之家
IT之家
V
Visual Studio Blog
量子位
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 聂微东
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
大猫的无限游戏
大猫的无限游戏
Y
Y Combinator Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
D
Docker
MyScale Blog
MyScale Blog
小众软件
小众软件
云风的 BLOG
云风的 BLOG
美团技术团队
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Last Week in AI
Last Week in AI
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 【当耐特】

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பள்ளி மாணவர் அடையாள அட்டையில் சாதி விவரமா? - அமைச்சர் செங...
செய்திப்பிரிவு · 2026-06-27 · via hindutamil

Updated on: 

சென்னை: ‘பள்ளி மாணவர் அடையாள அட்டையில் சாதி விவரம் இடம்பெற உள்ளதாக வெளியான தகவல் தவறானது’ என வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், ‘மாணவர்களுக்கு சாதி விவரம் அடங்கிய அடையாள அட்டை வழங்கப்படும்’ என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு திமுக, அதிமுக, அமமுக, இந்திய கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பள்ளி மாணவர்கள் எளிதாகவும், விரைவாகவும் வருவாய்த்துறை சார்ந்த சேவைகளைப் பெறும் நோக்கில், பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பள்ளிகளிலேயே சமூகச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படுகின்றன.

மாணவர்கள் நலன்கருதி இ-சேவை மையங்கள் மூலமாக இச்சேவைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுசார்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களுக்கான அடையாள அட்டை குறித்து வெளியான கருத்துகள் குறித்து சில தவறான புரிதல்கள் ஏற்பட்டுள்ளன.

மாணவர்களுக்கான சமூகச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக வருவாய்த்துறை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து செயல்படும். ஆனால், மாணவர்களுக்கான அடையாள அட்டையின் வடிவமைப்பு, அதில் இடம்பெறும் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் பள்ளிக் கல்வித் துறையின் முடிவுக்கு உட்பட்டவையாகும். மேலும், மாணவர் அடையாள அட்டையில் இடம்பெற உள்ள விவரங்கள் குறித்து தற்போது துறைகளுக்கு இடையேயான ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இதுதவிர மாணவர்களின் தனியுரிமை மற்றும் தகவல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக எதிர்காலத்தில் ஏதேனும் மின்னணு தகவல் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டாலும், மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி பெயர் மற்றும் ரத்த வகை போன்ற அடிப்படை விவரங்கள் மட்டுமே வெளிப்படையாக இடம்பெறவும், பிற விவரங்கள் தேவைக்கேற்ப பாதுகாப்பான க்யூஆர் குறியீடு வடிவில் மட்டுமே அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பான அனைத்து அம்சங்களும் சம்பந்தப்பட்ட துறைகளின் விரிவான ஆலோசனைக்குப் பின்னரே முடிவு செய்யப்படும். எனவே, சமூக விவரங்கள் மாணவர் அடையாள அட்டையில் இடம்பெற உள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை” என்று அவர் கூறியுள்ளார்.