惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
Microsoft Security Blog
Microsoft Security Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 叶小钗
博客园 - 三生石上(FineUI控件)
爱范儿
爱范儿
T
Tailwind CSS Blog
F
Fortinet All Blogs
Blog — PlanetScale
Blog — PlanetScale
WordPress大学
WordPress大学
H
Help Net Security
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Y
Y Combinator Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
GbyAI
GbyAI
Martin Fowler
Martin Fowler
有赞技术团队
有赞技术团队
腾讯CDC
V
V2EX
Jina AI
Jina AI
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
B
Blog
M
MIT News - Artificial intelligence
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
புதுச்சேரியில் மும்மொழி கொள்கை: திமுக, அதிமுக எதிர்ப்பு
2026-04-27 · via hindutamil

Updated on

2 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கையில் இந்தி திணிப்பால் போராட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது. அதேபோல் அதிமுகவும் இரு மொழி கொள்கைக்கே ஆதரவு தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026 - 27 கல்வியாண்டு முதல், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழியைக் கட்டாயமாக்கும் புதிய அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, ‘தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023’-ன் பரிந்துரைகளை அமல்படுத்த உள்ளனர். இந்த அறிவிப்பைச் செயல்படுத்த பள்ளிகளுக்கு ஒரு வார கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு திமுக, அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளர் சிவா கூறியதாவது: மாணவர்களிடையே பன்மொழித் திறனை வளர்க்கிறோம் என்ற பெயரில் மும்மொழிப் பாடத்திட்டத்தின் திணிப்பினால், ஒரு வெளிநாட்டு மொழி, இரு பிராந்திய மொழிகள் படிக்கலாம் என்று சொல்லி, ஆங்கிலத்தை மட்டும் வைத்துக்கொண்டு, பிரெஞ்சு பாடம் நீக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் கல்விச் சுமையை அதிகரிப்பதோடு, அவர்களின் இயல்பான கற்றல் முறையையும் பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது.

போதுமான தயாரிப்புகள் இன்றி, பாடம் எடுக்க புத்தகங்கள் கூட இன்றி, இவ்வளவு அவசரமாக ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவருவது கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு புதுச்சேரி மண்ணின் தனித்துவமான பிரெஞ்சு கலாச்சார அடையாளத்தையும் அதன் நீண்டகால மொழி வரலாற்றையும் சிதைக்கும் வஞ்சகச் செயலாகும்.

புதுச்சேரி பூர்வகுடி மக்களின் உரிமையை இது நேரடியாகப் பறிக்கிறது. மேலும், பல ஆண்டுகளாக பிரெஞ்சு மொழி பயிற்றுவித்து வரும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் வேலை வாய்ப்பையும் இந்தத் தன்னிச்சையான முடிவு கேள்விக்குறியாக்கியுள்ளது.

மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் பன்முகத் தன்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும். அண்ணா வகுத்துத் தந்த இரு மொழிக் கொள்கையே (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மாணவர்களின் எதிர்காலத்திற்கும் மாநில உரிமைகளுக்கும் உண்மையான பாதுகாப்பு என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மக்களின் விருப்பத்தைக் கேட்காமல் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தன்னிச்சையான முடிவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். புதுச்சேரி மாநில திமுக சார்பில் கல்வி துறையை கண்டித்து மிகப்பெரிய மொழி உரிமை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இரு மொழி கொள்கைக்கே ஆதரவு- அதிமுக அன்பழகன் உறுதி: புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”சிபிஎஸ்இ பாடத்தில் மூன்று மொழிகள் கொண்டு வருவதில் உள்ள அறிவிப்பால் மாணவர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் தமிழக கல்வி வாரியம் பின்பற்றப்படுகிறது. தனியாக கல்வி வாரியம் இல்லை.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரு மொழி கொள்கை மட்டுமே ஏற்று உறுதியாக இருந்தார். புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் உள்ள பள்ளிகளில் மும்மொழி கொள்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

புதுச்சேரியைப் பொருத்தவரை பல தனியார் கல்வி நிறுவனங்கள் அரசின் சட்டத் திட்டங்களுக்கு உட்படுவது இல்லை. மத்திய அரசு சொன்னவுடன் செய்ய வேண்டியதில்லை. மாணவர்கள் பாதிக்காத வகையில் மும்மொழி கொள்கையை விஷயத்தை அமல்படுத்த அரசு சீரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மும்மொழி கொள்கை அவசியமற்ற ஒன்று. இரு மொழி கொள்கைக்கு தான் அதிமுக ஆதரவு உண்டு,” என்றார்.