惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
The Cloudflare Blog
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
V
Visual Studio Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 司徒正美
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
月光博客
月光博客
The GitHub Blog
The GitHub Blog
L
LangChain Blog
D
DataBreaches.Net
T
The Blog of Author Tim Ferriss
F
Fortinet All Blogs
博客园 - Franky
阮一峰的网络日志
阮一峰的网络日志
GbyAI
GbyAI
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
宝玉的分享
宝玉的分享
Engineering at Meta
Engineering at Meta
V
V2EX
MyScale Blog
MyScale Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘பாய் பிரண்ட் இல்லையா? கவலையை விடுங்கள்...’ - உங்கள் சுமை...
2026-05-22 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: டெல்லி மாநகரச் சந்​தைகளில் நீங்​கள் எப்​போ​தாவது பொருள்​கள் வாங்​கச் சென்​றிருந்​தால், அங்​குள்ள கள நில​வரம் உங்​களுக்கு நன்​றாகவே தெரிந்​திருக்​கும்.

ஒரு கையில் மூன்​றுக்​கும் மேற்​பட்ட பொருள்​கள் அடங்​கிய பைகள், மற்​றொரு கையில் தின்​பண்​டப் பொட்​டலங்​கள், பையி​லிருந்து நழுவி விழும் அலைபேசி, கடுமை​யான வியர்​வை, கட்​டுக்​கடங்​காத மக்​கள் கூட்​டம், இரண்டு விநாடிகளுக்கு ஒரு​முறை “கொஞ்​சம் வழி விடுங்​கள்” என்று உரக்​கக் கத்​தும் குரல்​கள் என அந்த இடமே பரபரப்​பாகக் காணப்​படும்.

லஜ்பத் நகர், சரோஜினி நகர் அல்​லது சாந்​தினி சவுக் என டெல்​லி​யின் எந்​தவொரு பாரம்​பரியமிக்க சந்​தை​யாக இருந்​தா​லும், அங்கு பொருள்​கள் வாங்​கு​வது என்​பது எவ்​வளவு உற்​சாக​மானதோ, அதே அளவுக்கு பெரும் சோர்வை ஏற்​படுத்​தக்​கூடிய​தாகும்.

ஆனால், டெல்​லியைச் சேர்ந்த புதிய தொழில்​முனைவு (ஸ்டார்ட்-அப்) நிறு​வனம் ஒன்று தற்​போது இந்த நிலையை மாற்​றியமைக்க முயன்று வரு​கிறது.

உண்​மை​யைக் கூற வேண்​டுமெனில், சோர்​வடைந்த கணவர்​கள், எரிச்​சலடை​யும் காதலர்​கள், திணறிப்​போகும் தாயார்​கள் மற்​றும் ஒட்​டுமொத்த நுகர்​வோரின் சுமை​யைக் குறைக்​கும் ஒரு வரப்​பிர​சாத​மாக இந்த ஸ்டார்​அப் உரு​வெடுத்​துள்​ளது. பெண்​கள் இனி பாய் பிரண்ட் இல்லை என்று கவலைப்படத் தேவை​யில்​லை.

“கேரிமென்” (CarryMen) என்ற பெயரிலான இந்த வாடிக்​கை​யாளர் உதவிச் சேவை மையம், “நீங்​கள் பொருள்​கள் வாங்​குங்​கள்; சுமையை நாங்​கள் சுமக்​கிறோம்” என்ற எளிய தாரக மந்​திரத்​துடன் செயல்​படு​கிறது. அன்​றாட வாழ்​வில் எதிர்​கொள்​ளும் நடை​முறைச் சிக்​கல் ஒன்​றில் இருந்​து​தான் இந்த வணிக யோசனை பிறந்​துள்​ளது.

டெல்​லியைச் சேர்ந்த இந்​நிறு​வனத்​தின் நிறு​வனர்​கள், சிறு வயது முதற்​கொண்டே தங்​களது குடும்​பத்​தினருடன் இத்​தகைய நெரிசல்​மிக்க சந்​தைகளுக்​குச் சென்ற அனுபவம் கொண்​ட​வர்​கள்.

நீண்ட தூர நடைப்​பயணம், எல்​லை​யற்ற பொருள்​களின் எடை, உணவக வரிசைகள் ஆகிய​வற்​றால் பொருள்​கள் வாங்​கு​வ​தில் உள்ள மகிழ்ச்சி எவ்​வாறு மறைந்​து​போகிறது என்​பதை அவர்​கள் உணர்ந்​தவர்​கள்.

இதுகுறித்து அந்த ஸ்டார்ட்​-அப் நிறு​வனத்​தின் செய்​தித் தொடர்​பாளர் கூறுகை​யில், “மக்​களுக்​குப் பொருள்​கள் வாங்​கு​வது பிடிக்​கும்; ஆனால் அதனால் ஏற்​படும் உடல் ரீதி​யான சோர்வை அவர்​கள் வெறுக்​கிறார்​கள்.

மக்​கள் நெரிசலான சந்​தை​யின் நடு​வில் நின்​று​கொண்​டு, பத்து பைகளைச் சுமப்​ப​தைப் பற்​றிக் கவலைப்​ப​டா​மல், தங்​களுக்​குப் பிடித்​த​மான உணவு​களைச் சுவைத்து மகிழ்​வதையே நாங்​கள் விரும்​பு​கிறோம்” என்​றார்.

கட்டண விவர​மும் சேவை​களும்

இந்​தச் சேவை​யின் கீழ், ஒரு மணி நேரத்​திற்கு ரூ.149 என்ற கட்​ட​ணத்​தில், உதவி​யாளர் ஒரு​வர் வாடிக்​கை​யாளர்​களு​டன் சந்தை முழுவதும் வரு​வார்.

இந்த உதவி​யாளர்கள் பொருள்​களைச் சுமப்​பது மட்​டுமன்​றி, கடைகளுக்கு வழிநடத்​து​வது, உணவக வரிசைகளில் காத்​திருப்​பது, வாகன நிறுத்​து​மிடம் அல்​லது மெட்ரோ ரயில் நுழை​வா​யில் வரை பொருள்​களைக்கொண்டு வந்து சேர்ப்​பது மற்​றும் வாடிக்​கை​யாளர்​கள் ஓய்​வெடுப்​ப​தற்​கான இடங்​களைக் கண்​டறிவது உள்​ளிட்ட உதவி​களைச் செய்​கின்​றனர். இதன் மூலம் வாடிக்​கை​யாளர்​கள் நிம்​ம​தி​யாக உலா வர முடி​யும்.