惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

人人都是产品经理
人人都是产品经理
aimingoo的专栏
aimingoo的专栏
Y
Y Combinator Blog
B
Blog
D
Docker
C
Check Point Blog
A
About on SuperTechFans
云风的 BLOG
云风的 BLOG
F
Fortinet All Blogs
Stack Overflow Blog
Stack Overflow Blog
Recent Announcements
Recent Announcements
MongoDB | Blog
MongoDB | Blog
WordPress大学
WordPress大学
Jina AI
Jina AI
罗磊的独立博客
月光博客
月光博客
博客园 - Franky
L
LangChain Blog
H
Help Net Security
Google DeepMind News
Google DeepMind News
Microsoft Security Blog
Microsoft Security Blog
小众软件
小众软件
T
Tailwind CSS Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் சென்னை துறைமுகத்தில் ...
செய்திப்பிரிவு · 2026-06-21 · via hindutamil

சென்னை துறைமுகத்தில் அதிநவீன பயணிகள் முனையம் நேற்று திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1,800 பயணிகளுடன் துறைமுகத்துக்கு வந்தடைந்த ‘எம்.வி. எம்பிரஸ்’ சொகுசுக் கப்பல்.படம்: பிடிஐ

Updated on: 

சென்னை: சென்னை துறை​முகத்​தில் உலகத்​தரம் வாய்ந்த உள்​கட்​டமைப்​புடன் அதிநவீன சொகுசு கப்​பல் பயணி​கள் முனை​யம் நேற்று திறந்து வைக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து, 1,800 பேருடன் வந்த பிரம்மாண்ட சொகுசு கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்​னிந்​தி​யா​வின் முதன்மை நுழை​வுவாயி​லாக விளங்​கும் சென்னை துறை​முகத்​தில், ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையி​லான 3 மாத காலத்​துக்​கான சொகுசு கப்​பல் சுற்​றுலா சீசன் தொடங்​கி​யுள்​ளது. இதையொட்​டி, சென்னை துறை​முகத்​தின் மேற்கு பகு​தி​யில் உலகத்​தரம் வாய்ந்த உள்​கட்​டமைப்​புடன் அதிநவீன சொகுசு பயண கப்​பல் பயணி​கள் முனை​யம், நேற்று பயணி​களின் பயன்​பாட்​டுக்கு திறந்து வைக்​கப்​பட்​டது.

இந்த முனை​யம் 4,103 சதுர மீட்​டர் பரப்​பளவுடன், ஒரு மணி நேரத்​துக்கு 800 பயணி​களைக் கையாளும் திறன் கொண்​டது. இதில் முழு​மை​யான குளிரூட்​டப்​பட்ட வசதி, சுங்​கத் துறை மற்​றும் குடி​யுரிமை சோதனை​களுக்​கான ஒருங்​கிணைந்த ஒற்​றைச்​சாளர வசதி, அதிநவீன பாது​காப்பு அமைப்​பு​கள், லக்​கேஜ் ஸ்கேனர்​கள், நவீன ஓய்​வறை​கள், நகரும் படிக்​கட்​டு​கள் மற்​றும் சிற்​றுண்​டிச் ​சாலை என உலகத்​தரம் வாய்ந்த பல்​வேறு வசதி​கள் இடம் பெற்​றுள்​ளன.

சுற்​றுலா சீசன் தொடங்​கியதை அடுத்​து, சென்னை துறை​முகத்​துக்கு தனி​யார் நிறு​வனத்​தின் ‘எம்​.​வி.எம்​பிரஸ்’ சொகுசு கப்​பல் 1,800 பயணி​களு​டன் நேற்று வந்​தடைந்​தது. கப்​பலில் இருந்து இறங்​கிய சர்​வ​தேச மற்​றும் உள்​நாட்டு பயணி​களுக்​கு, தமிழகத்​தின் பாரம்​பரிய கலாச்​சா​ரத்தை பிர​திபலிக்​கும் வகை​யில், தமிழ்​நாடு சுற்​றுலா வளர்ச்​சிக் கழகம் சார்​பில், இசை நிகழ்ச்​சி​யுடன் உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. பயணி​களுக்கு தில​கமிடப்​பட்​டு, மலர்க் கொத்து மற்​றும் வரவேற்பு பானங்​கள் வழங்​கப்​பட்​டன.

தொடர்ந்​து, துறை​முகத்​தில் அமைக்​கப்​பட்​டிருந்த நவீன சர்​வ​தேச சொகுசு கப்​பல் முனை​யத்​தின் வசதி​களை பயணி​கள் பார்வையிட்டனர்.

ஒரே நாளில் 3,600: பயணி​கள் இதையடுத்​து, அடுத்த 1,800 பயணி​கள் அக்​கப்​பலில் தங்​களது பயணத்தை தொடங்​கினர். அந்த வகை​யில், ஒரே நாளில் 3,600 பயணி​களின் பயணத்தை சென்னை துறை​முகம் கையாண்​டிருப்​பது குறிப்​பிடத்​தக்க சாதனை​யாக கருதப்​படு​கிறது. இந்த 3 மாத காலத்​தில் எம்​.​வி.எம்​பிரஸ் சொகுசு கப்​பல் மொத்​தம் 21 கடல் பயணங்​களை மேற்​கொள்ள திட்​ட​மிட்​டுள்​ளது.

அதன்​படி, இலங்​கையின் ஹம்​பாந்​தோட்​டா, திரிகோணமலை, காங்​கேசன்​துறை, ஆகிய சர்​வ​தேச துறை​முகங்​களுக்​கும், இந்​தி​யா​வின் விசாகப்​பட்​டினம், புதுச்​சேரி ஆகிய உள்​நாட்டு பகு​தி​களுக்​கும் இந்த கப்​பல் இயக்​கப்​பட​ உள்​ளது. உலகத்​தரம் வாய்ந்த உள்​கட்​டமைப்​புடன், தமிழகத்​தின் விருந்​தோம்​பலை​யும் இணைத்து சென்னை துறை​முகத்தை உலகளா​விய சொகுசு கப்​பல் வரை​படத்​தில் முன்​னிலைப்​படுத்த இந்த சுற்​றுலா சீசன் உதவும் என்​று துறை​முக நிர்​வாகம்​ தெரி​வித்​துள்​ளது.