惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

C
Check Point Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Jina AI
Jina AI
Microsoft Security Blog
Microsoft Security Blog
IT之家
IT之家
V
Visual Studio Blog
量子位
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 聂微东
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
大猫的无限游戏
大猫的无限游戏
Y
Y Combinator Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
D
Docker
MyScale Blog
MyScale Blog
小众软件
小众软件
云风的 BLOG
云风的 BLOG
美团技术团队
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Last Week in AI
Last Week in AI
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 【当耐特】

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“உலக நன்மைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து நெருக...
மோகன் கணபதி · 2026-05-23 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சந்தித்த நிலையில், உலக நன்மைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து நெருக்கமாக செயல்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அப்போது, பாதுகாப்பு, தொழில்நுட்பங்கள், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, இணைப்பு, கல்வி, மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்து பிரதமருக்கு மார்கோ ரூபியோ விளக்கினார்.

மேற்கு ஆசிய நிலவரம் உட்பட பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த அமெரிக்காவின் கண்ணோட்டத்தை ரூபியோ பகிர்ந்து கொண்டார்.

அப்போது, அமைதி முயற்சிகளுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார். பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் மோதல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்ற தனது எண்ணத்தை மீண்டும் வலியுறுத்தினார். மேலும், அதிபர் ட்ரம்ப்புக்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கெண்ட பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்ச்சியான கலந்துரையாடல்களை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் கூறினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மார்கோ ரூபியோ உடனான சந்திப்பை அடுத்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை வரவேற்றதில் மகிழ்ச்சி. இந்தியா - அமெரிக்கா இடையேயான ஆழமான ஒத்துழைப்புடன் கூடிய உத்திசார் உறவில் ஏற்பட்டுள்ள தொடர் முன்னேற்றங்கள் குறித்தும் பிராந்திய மற்றும் உலக அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம். உலக நன்மைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து நெருக்கமாக செயல்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் வெளியிட்டுள்ள பதிவில், “வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சார்பில் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அழைப்பு விடுத்தார்.

பாதுகாபபு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அமெரிக்கா - இந்தியா இடையேயான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தினோம். இத்துறைகள் நமது இரு நாடுகளையும் வலுப்படுத்தி, சுதந்திரமான இந்தோ-பசுபிக் பகுதியை வலுப்படுத்துகின்றன. இந்தியா அமெரிக்காவின் ஒரு முக்கிய கூட்டாளி” என தெரிவித்துள்ளார்.