惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 三生石上(FineUI控件)
月光博客
月光博客
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
WordPress大学
WordPress大学
Hugging Face - Blog
Hugging Face - Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
M
MIT News - Artificial intelligence
腾讯CDC
B
Blog RSS Feed
H
Help Net Security
J
Java Code Geeks
有赞技术团队
有赞技术团队
Y
Y Combinator Blog
博客园_首页
Last Week in AI
Last Week in AI
博客园 - 【当耐特】
博客园 - Franky
B
Blog
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - 叶小钗
Martin Fowler
Martin Fowler

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திமுக ஆட்சியில் ரூ.58,000 கோடி முறைகேடு: வெள்ளை அறிக்கையை...
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தின் வருவாய், செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை சட்டம் மற்றும் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டார். திமுக ஆட்சியில் ரூ.58,000 கோடி அளவுக்கு முறைகேடாக மின்சாரம் கொள்முதல் நடந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

தமிழக மின்வாரியத்தின் திட்டப் பணிகள், வருவாய், செலவினங்கள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை தமிழக சட்டம் மற்றும் மின்துறை அமைச்சர் சிடிஆர்.நிர்மல் குமார் நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழக மின்வாரியத்துக்கு கடந்த 2001-06 வரை ரூ.59,084 கோடி வருவாய் கிடைத்தது. இந்த காலகட்டத்தில் ரூ.67,439 கோடி செலவு ஏற்பட்டதால் ரூ.8,355 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது. 2006-2011 காலகட்டத்தில் ரூ.92,737 கோடி வருவாய் கிடைத்தது. ரூ.1,28,200 கோடி செலவு செய்ததால், ரூ.35,463 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது.

2011-16 வரையில் ரூ.1,92,971 கோடி வருவாய் கிடைத்த போதும், ரூ.2,49,332 கோடி செலவு செய்ததால் ரூ.56,361 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது. 2016-21 காலகட்டத்தில் ரூ.3,20,140 கோடி வருவாய் கிடைத்த போதும், ரூ.78,674 கோடி செலவு செய்ததால் ரூ.58.534 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது.

கடந்த 2021-26 காலகட்டத்தில் ரூ.4,97,996 கோடி வருவாய் கிடைத்தபோதும் ரூ.5,32,443 கோடி செலவு செய்ததால் ரூ.34,447 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது. 2025-26-ல் ரூ.1,23,072 கோடி வருவாய் கிடைத்தது.

இதில் ரூ.1,24,004 கோடி செலவு செய்ததால் பற்றாக்குறை ரூ.933 கோடியாக குறைக்கப்பட்டுள் ளது. 3.16% மின்கட்டணம் உயர்த்தப்பட்டதுதான் இதற்கு காரணம். தற்போதைய நிலவரப்படி, மின்வாரியத்துக்கு ரூ.2,47,130 கோடி கடன் உள்ளது.

மின்வாரியத்துக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மொத்தமாக 3,495 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. தமிழகத்துக்குள் இருக்கும் சுயசார்பு மின் உற்பத்தி நிலையங்கள், காற்றாலை, சோலார் மின்உற்பத்தி நிலையங்களில் இருந்து சராசரியாக ஒரு யூனிட் ரூ.5.29-க்கு 4,246 மெகாவாட் மின்சாரமும், மத்திய தொகுப்பில் பிற மாநிலங்களில் இருந்து ஒரு யூனிட் ரூ.5.39-க்கு 13,566 மெகாவாட் மின்சாரமும் கொள்முதல் செய்யப்படுகிறது.

குறிப்பாக, மத்திய தொகுப்பில் இருந்து குறுகியகால ஒப்பந்தத்தில் மின்சாரம் வாங்குவதால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதை தடுக்க நீண்டகால ஒப்பந்தங்களுக்கு திட்டமிடப்பட் டுள்ளது. இதன்மூலம் மாதத்துக்கு ரூ.215 கோடி மிச்சமாகும்.

மின்வாரியத்தில் அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்கள் மொத்தம் 1,40,635. இதில் 74,714 பேர்தான் பணியில் உள்ளனர். 65,921 இடங்கள் காலியாக உள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்பதால் அன்றாடப் பணிகளை செய்வதில் சிக்கல் ஏற்படும்.

இதை தடுக்க விரைவில் 15,058 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.43,855 கோடியில் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். உடன்குடி, எண்ணூர் விரிவாக்கம், உப்பூர் அனல்மின் திட்டங்களை நிறைவேற்ற கூடுதலாக ரூ.8,076.72 கோடி நிதிதேவை.

அதேபோல், 6 இடங்களில் ரூ.4,109 கோடியில் திட்டமிடப்பட்ட நீர் மின்நிலைய கட்டுமானங்களுக்கு கூடுதலாக ரூ.825 கோடி தேவை. மின் விநியோகத்தை நிலைப்படுத்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் ரூ.49,532.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மின்கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை. டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் போல மின்கடத்திகள் வாங்குவதில் 9 டெண்டர்களில் ரூ.1,028 கோடி முறைகேடு கண்டறியப் பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் ரூ.58,000 கோடி அளவுக்கு முறைகேடாக மின்சாரம் கொள்முதல் நடந்துள்ளது. இதையெல்லாம் விசாரணை நடத்தி கண்டுபிடிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.