惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
博客园 - 三生石上(FineUI控件)
WordPress大学
WordPress大学
博客园 - 【当耐特】
月光博客
月光博客
Vercel News
Vercel News
D
Docker
I
InfoQ
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 叶小钗
MongoDB | Blog
MongoDB | Blog
GbyAI
GbyAI
有赞技术团队
有赞技术团队
雷峰网
雷峰网
博客园 - 聂微东
小众软件
小众软件
Y
Y Combinator Blog
腾讯CDC
L
LangChain Blog
The GitHub Blog
The GitHub Blog
宝玉的分享
宝玉的分享
Stack Overflow Blog
Stack Overflow Blog
大猫的无限游戏
大猫的无限游戏
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகத்தின் மின் தேவை, மின் நுகர்வில் புதிய உச்சம்
2026-04-30 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழகத்​தின் மின் தேவை, மின் நுகர்வு புதிய உச்​சத்தை எட்​டி​யுள்​ளது. நேற்று முன்​தினம் (28-ம் தேதி) மின் நுகர்வு 470 மில்​லியன் யூனிட்​டாக​வும் மின் தேவை 21,211 மெகா​வாட்​டாக​வும் பதி​வாகி​யுள்​ளது.

தமிழகத்​தில் கோடை வெயி​லின் தாக்​கம் கடந்த சில நாட்​களாக அதி​கரித்து வரு​கிறது. வெப்​பம் அதி​கரித்​துள்​ளால் வீடு​களில் எந்த நேர​மும் மின் விசிறிகள் ஓடிக்​கொண்டே இருக்​கின்​றன. இரவு நேரங்​களில் குளிர்​சாதன பெட்டி பயன்​பாடு அதி​கரித்து காணப்​படு​கிறது.

தமிழகத்​தின் தினசரி மின்​சார தேவை சரசரி​யாக 16 ஆயிரம் மெகா​வாட் என்ற அளவில் இருக்​கும். கோடை காலங்​களில் 20 ஆயிரம் மெகா​வாட்​டை​யும் கடந்து மின் தேவை அதி​கரி​கரிக்​கும். இந்த ஆண்டு கோடை​காலத்​துக்கு முன்​பாக தமிழகத்​தில் அதி​கபட்ச மின் தேவை கடந்த 2024ம் ஆண்டு மே 2ம் தேதி 20,830 மெகா​வாட்​டாக​வும், அதி​கபட்​சம் மின் நுகர்வு 2024ம் ஆண்டு ஏப்​.30-ம் தேதி 454.32 மில்​லியன் யூனிட்​கள் பதி​வானது. தமிழகத்​தில் கத்​திரி வெயில் வரும் மே 4-ம் தேதி தொடங்​கும் என கூறப்​பட்​டுள்​ளது. ஆனால் ஏப்​ரல் மாதத்​திலேயே வெயில் சுட்​டெரித்​து வருகிறது.

தமிழகத்​தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கி பின் இந்த ஏப்​ரல் மாதத்​திலேயே 3 முறை அதி​கபட்ச மின் தேவை மற்​றும் மின் நுகர்வு பதி​வாகி​யிருக்​கிறது. மின் தேவையை பொறுத்​தவரை கடந்த 17-ம் தேதி 21,010 மெகா​வாட்​டாக​வும், 22-ம் தேதி 21,051 மெகா​வாட்​டாக​வும் பதி​வான நிலை​யில், நேற்று முன்​தினம் (ஏப்​.28) 21,211 மெகா​வாட் என்ற புதிய உச்​சத்தை எட்​டி​யுள்​ளது.

அதே​போல மின் நுகர்வு கடந்த 18-ம் தேதி 462.66 மில்​லியன் யூனிட்​களாக​வும், ஏப்​.23-ம் தேதி 466.16 மில்​லியன் யூனிட்​களாக பதி​வான நிலை​யில் நேற்று முன்​தினம்​(ஏப்​.28) 470.67 மில்​லியன் யூனிட்​களு​டன் புதிய உச்​சத்தை எட்​டி​யுள்​ளது. இது குறித்து மின் வாரிய அதி​காரி​கள் கூறியதாவது: பகல் நேரங்​களில் வெயி​லின் தாக்​கம் காரண​மாக அனைத்து இடங்​களி​லும் குளிர்​சாதன இயந்​திரங்​களின் பயன்​பாடு அதி​கரித்து காணப்​படு​கிறது, இதனால் மதிய நேரத்​தில் மின்​சா​ரத் தேவை உச்​சத்​தில் இருக்​கிறது.

மேலும் இரவு நேரங்​களி​லும் வீடு​களில் ஏசி பயன்​பாடு அதி​கரித்​துள்​ள​தால் மின் தேவை மற்​றும் மின் நுகர்வு அதி​கரித்​துள்​ளது. வெயி​லி​னால் மின் தேவை அதி​கரித்​தா​லும், அந்த தேவையை பெரும்​பாலும் பூர்த்தி செய்ய சூரிய சக்​தியே உதவு​கிறது. நேற்று முன்​தினம் பதி​வான மின் தேவையை விட மொத்த மின் உற்​பத்தி அதி​க​மாகவே இருந்​தது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.