惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Apple Machine Learning Research
Apple Machine Learning Research
爱范儿
爱范儿
博客园_首页
博客园 - 【当耐特】
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
月光博客
月光博客
美团技术团队
J
Java Code Geeks
小众软件
小众软件
Y
Y Combinator Blog
博客园 - Franky
Martin Fowler
Martin Fowler
博客园 - 聂微东
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
IT之家
IT之家
MyScale Blog
MyScale Blog
人人都是产品经理
人人都是产品经理
Microsoft Security Blog
Microsoft Security Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
阮一峰的网络日志
阮一峰的网络日志
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
云风的 BLOG
云风的 BLOG

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மே. வங்கத்தில் ‘லவ் ஜிஹாத்’, ‘நில ஜிஹாத்’ முடிவுக்கு வரும...
2026-04-23 · via hindutamil

Updated on

2 min read

மே 4-ஆம் தேதி மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மாநிலத்தில் நிலவி வரும் 'லவ் ஜிஹாத்' மற்றும் 'நில ஜிஹாத்' போன்ற விவகாரங்கள் முற்றிலும் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு சப்தகிராமில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு லவ் ஜிஹாத் மற்றும் நில ஜிஹாத் ஆகிய இரண்டுமே முடிவுக்கு வரும். அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு மற்றும் அகவிலைப்படி பலன்கள் கிடைக்கும்.

கிசான் சம்மான் நிதியின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6,000-க்கு பதிலாக ரூ.9,000 வழங்கப்படும். விதவைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.2,000 ஆக நிர்ணயிக்கப்படும். 

மோடி ஒரு பயங்கரவாதி என்று கார்கே கூறுகிறார். கார்கே சாப், உங்களுக்கு வெட்கமாக இல்லையா? பயங்கரவாதத்தை ஒழிக்கத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒருவரை பயங்கரவாதி என்று அழைக்கிறீர்கள். இதற்கான முழு கணக்கையும் பொதுமக்களே தீர்ப்பார்கள்.

பிரதமர் மோடி இந்த நாட்டை பயங்கரவாதம் மற்றும் நக்ஸலிசத்தில் இருந்து விடுவித்துள்ளார். இன்று நான் சொல்கிறேன், ஊடுருவல்காரர்களிடமிருந்து இந்த நாட்டை பாஜக விடுவிக்கும். எல்லை வேலி அமைக்க பி.எஸ்.எஃப்  அமைப்பிற்கு 600 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. மம்தா அதை வழங்கவில்லை. நீங்கள் பாஜக ஆட்சியை அமைத்தால், வேலி அமைப்பதற்காக அந்த நிலம் முழுவதையும் பி.எஸ்.எஃப் அமைப்பிடம் ஒப்படைக்கும் பணியை 45 நாட்களுக்குள் முடிப்போம் என்று நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன்.

ஊடுருவல்காரர்கள் வேலைவாய்ப்புகளைப் பறிப்பதோடு, ஏழைகளுக்கான வளங்களைச் சுரண்டி, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றனர். மம்தா பானர்ஜி ரூ.10,000 கோடி மதிப்பிலான பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளார். தங்களுக்கு ஒன்றும் ஆகாது என்று அவர்கள் நம்புகிறார்கள். மே 5-ஆம் தேதி பாஜக ஆட்சி அமைக்கும். அப்போது பல்வேறு ஊழல்கள் மூலம் விழுங்கிய பணத்தை அவர் திருப்பித் தர வேண்டியிருக்கும்.

மம்தாவின் குண்டர்களுக்கு அஞ்சாதீர்கள். நம்பிக்கையுடன் வாக்களியுங்கள். பாஜக ஆட்சி அமைக்கப் போகிறது, மம்தாவின் குண்டர்கள் சிறைக்குப் பின்னால் தள்ளப்படுவார்கள்.

மாலை 7 மணிக்கு மேல் தாய்மார்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மம்தா கூறுகிறார். நீங்கள் மோடியின் கரங்களை வலுப்படுத்தி பாஜக ஆட்சியை அமையுங்கள். நள்ளிரவில் கூட ஒரு சிறுமி தனது ஸ்கூட்டரில் வெளியே செல்ல முடியும், எந்த ஒரு ரவுடிக்கும் நிமிர்ந்து பார்க்கும் துணிச்சல் கூட இருக்காது.

பாஜக ஆட்சியைத் தேர்ந்தெடுங்கள், அரசு வேலைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். பெண்களுக்கும் மாதம் ரூ.3,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேற்கு வங்கம் முழுவதும் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம்” இவ்வாறு அமித் ஷா பேசினார்.