惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
G
Google Developers Blog
J
Java Code Geeks
爱范儿
爱范儿
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
美团技术团队
人人都是产品经理
人人都是产品经理
Martin Fowler
Martin Fowler
IT之家
IT之家
博客园_首页
B
Blog RSS Feed
Google DeepMind News
Google DeepMind News
B
Blog
U
Unit 42
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
L
LangChain Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
罗磊的独立博客
N
Netflix TechBlog - Medium
T
Tailwind CSS Blog
博客园 - 聂微东
腾讯CDC
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து விசிக, கம்யூனிஸ்ட்...
2026-05-21 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: பெட்​ரோல், டீசல், சமையல் எரி​வாயு விலையை உயர்த்தியதை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

பெட்​ரோல், டீசல், சமையல் எரி​வாயு விலை உயர்வை கண்​டித்து விசிக மற்​றும் இடது​சா​ரி​கள் கட்​சிகள் நேற்று வள்​ளலார் நகர் பேருந்து நிலை​யம் அருகே கண்டன ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதில், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், மார்க்​சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர் பழ.ஆசைத்​தம்​பி, விசிக பொதுச்​செய​லா​ளர் ரவிக்​கு​மார் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

போக்​கு​வரத்​து, அத்​தி​யா​வசிய பொருட்​கள் விலை உயர்​வுக்கு காரண​மான பெட்​ரோல், டீசல் விலை உயர்வை கைவிட வேண்​டும். உணவகங்​கள், சிறு தொழில்​கள் மூட காரண​மான வணிக சிலிண்​டர் விலை உயர்வை கைவிட வேண்​டும் என ஆர்ப்​பாட்​டத்​தில் வலி​யுறுத்​தினர்.

ஆர்ப்​பாட்​டத்​துக்கு பின்​னர், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் செய்​தி​யாளர்​களிடம் கூறுகையில், ‘‘5 நாட்​கள் முன் பெட்​ரோல், டீசல் விலை உயர்த்​தப்​பட்​டது.

நான்கு நாட்​களுக்கு பிறகு விலை மேலும் உயர்த்​தப்​பட்​டுள்​ளது. ஏற்​கெனவே, வணிக சிலிண்​டர் விலை உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இதுபோல் சென்று கொண்​டிருந்​தால் அடுத்த சில நாட்​களில் வீட்டு உபயோக சிலிண்​டர் விலை​யும் கடுமை​யாக உயர்த்​தப்​படும். வாழ முடி​யாத நெருக்​கடிக்கு மக்​களை பாஜக அரசு தள்ளி உள்​ளது.

பெட்​ரோல், டீசல், எரி​வாயு என்​பது அத்​தி​யா​வசி​ய​மான பொருள். இதை அனைத்து மக்​களுக்​கும் குறை​வான விலை​யிலும், தட்​டுப்​பாடு இல்​லாமல் கிடைக்​க​வும் பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்​றார்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் வீர​பாண்​டியன் தனது உரையில், ‘‘பெட்​ரோல், டீசல் எரி​வாயு விலை உயர்​வுக்கு முழுக்க முழுக்க மத்​திய அரசும், பிரதமரும்தான் பொறுப்​பு. இந்த நெருக்​கடிக்கு மூல காரணம் அமெரிக்கா​வும், இஸ்​ரேலும்தான்.

நம் நட்பு நாடு ஈரான் தங்கு தடை இல்​லாமல் எரி​வாயு கொடுத்து கொண்​டிருந்​தார்​கள். அதன் அதிபரை கொன்று விட்​டார்​கள். செல்​வந்​தர்​கள் தான் தேசவளங்​களை கொள்ளை அடிக்​கிறார்​கள். பிரதமரின் அறி​வுரை வேண்​டு​கோள் எல்​லாம் அந்த பக்​கம்​ திரும்​ப வேண்​டும்​. உழைக்​கிற மக்​கள்​ பக்​கம்​ அல்​ல’’ என்​று கூறினர்​.