惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

L
LangChain Blog
博客园 - 司徒正美
美团技术团队
Martin Fowler
Martin Fowler
雷峰网
雷峰网
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 三生石上(FineUI控件)
Vercel News
Vercel News
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
爱范儿
爱范儿
U
Unit 42
Y
Y Combinator Blog
月光博客
月光博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
有赞技术团队
有赞技术团队
GbyAI
GbyAI
H
Help Net Security
量子位
Last Week in AI
Last Week in AI
博客园_首页
腾讯CDC
小众软件
小众软件

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உட்கட்சி ஜனநாயகம் சிதைந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிம...
செய்திப்பிரிவு · 2026-06-15 · via hindutamil

Updated on: 

சென்னை: “உட்கட்சி ஜனநாயகம் சிதைந்து வருவதுடன், ஊழல்களும் மலிந்துவிட்டன” என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இன்றைய நாட்டின் அரசியல் சூழல் மிகுந்த மனச்சோர்வை அளிப்பதாக உள்ளது. பெரும்பாலான அரசியல் கட்சிகளில் ஒரு சிலரின் கைகளில் மட்டுமே அதிகாரம் குவிந்து கிடக்கிறது. கொள்கைப் பிடிப்பு பலவீனமடைந்து வருகிறது. கட்சிகளுக்குள் அர்த்தமுள்ள, ஆழமான ஜனநாயகக் கலந்தாலோசனைகள் முற்றிலுமாக விடுபட்டுவிட்டன. உட்கட்சி ஜனநாயகம் சிதைந்து வருவதுடன், ஊழல்களும் மலிந்துவிட்டன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அரசியல் கட்சிகளுக்குள்ளேயே நிலவும் பாலினம், சாதி மற்றும் வர்க்கப் பாகுபாடுகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. இவை சிறிய குறைபாடுகள் அல்ல, அரசியல் எத்தகைய விழுமியங்களைக் காக்க வேண்டுமோ, அவற்றின் அடித்தளத்தையே தகர்க்கும் செயல்களாகும். ஒரு சர்வாதிகார மற்றும் பாசிச ஆட்சி, நாட்டின் ஜனநாயக மற்றும் தாராளமய அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்பை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

கொள்கைகள் தொடர்ந்து சமரசம் செய்யக் கூடியவையாகத் தோன்றும்போதும், அரசியல் தேர்வுகளை நியாயப்படுத்துவது கடினமாக மாறும்போதும், சாதாரண மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீது கொண்டுள்ள அவநம்பிக்கையையும் வெறுப்பையும் நாமே மேலும் வலுப்படுத்துகிறோம். இது நம் அனைவரையும் கவலைகொள்ளச் செய்ய வேண்டிய ஒரு முக்கிய விஷயமாகும்.

ஆனால், ஜனநாயகம், அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் ‘இந்தியத் தன்மை’ என்ற உன்னதக் கருத்தியலைக் காக்க, இனி குடிமக்களே தமக்கான வழிகளைத் தாங்களாகவே கண்டறிய வேண்டியிருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. மிகுந்த மனவருத்தத்தோடும், அதேசமயம் முழுப் பொறுப்புணர்வோடும் இதை நான் கூறுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.