惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
博客园 - 司徒正美
V
Visual Studio Blog
博客园 - 【当耐特】
T
Tailwind CSS Blog
美团技术团队
博客园 - 叶小钗
Jina AI
Jina AI
宝玉的分享
宝玉的分享
IT之家
IT之家
Hugging Face - Blog
Hugging Face - Blog
雷峰网
雷峰网
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园_首页
人人都是产品经理
人人都是产品经理
T
The Blog of Author Tim Ferriss
P
Proofpoint News Feed
Microsoft Security Blog
Microsoft Security Blog
Y
Y Combinator Blog
GbyAI
GbyAI
大猫的无限游戏
大猫的无限游戏
Martin Fowler
Martin Fowler
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
腾讯CDC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘ஒயிட் ஹீட்’ - 1949: தவறான தாயன்பின் விலை | ஹாலிவுட் மேட்...
ராம்குமார் சுப்பாராமன் · 2026-05-19 · via hindutamil

Updated on: 

தாயால் தவறாக வளர்க்​கப்​பட்​டு, உலகின் உச்​சியை அடைய நினைக்​கும் சைக்​கோபதி கேங்​ஸ்​டர் ஒரு​வன், எரி​வா​யுக் கலனின் உச்​சி​யில் சாம்​பலா​வதை விவரிப்​பதே ‘ஒயிட் ஹீட்’ (WHITE HEAT – 1949) திரைப்​படத்​தின் ஒரு​வரிக்​கதை.

கலி​போர்​னியா மலைச் சுரங்​கத்​தில் அஞ்​சல் ரயிலை வழிமறித்​து, நான்கு ஊழியர்​களைக் கொன்று 3 லட்​சம் டாலர்​களைக் கொள்​ளை​யடிக்​கிறான் கோடி ஜாரெட். கடும் தலை​வலி​யில் துடிக்​கும் அவனது தலையை வருடி, “மகனே, நீ உச்​சியை அடையப் பிறந்​தவன்” என்று உற்​சாகமூட்​டித் தேற்​றுகிறாள் தாய் மா ஜாரெட்.

கொள்​ளைப் பணத்​தைப் பங்கு பிரிக்​கும்​போது போலீஸ் தேடி வர, இந்த மாபெரும் கொலை வழக்​கி​லிருந்து தப்​பிக்​கப் புத்​தி​சாலித்​தன​மாகத் திட்​ட​மிடு​கிறான் கோடி. அதே நேரத்​தில் வேறொரு மாகாணத்​தில் நடந்த சாதா​ரணக் கொள்​ளை​யை, தானே செய்​த​தாக ஒப்​புக்​கொண்​டு, ஓராண்டு சிறைத்​தண்​டனை பெறுகிறான்.

ஆனால், கோடி​யின் மீது சந்​தேகம் கொள்​ளும் போலீஸ் அதி​காரி எவான்​ஸ், ‘ஹாங்க் ஃபாலோன்’ என்ற ரகசிய அதி​காரியை ‘பார்​டோ’ என்ற பெயரில் கோடி இருக்​கும் சிறைக்கே கைதி​யாக அனுப்​பு​கிறான். சிறைக்​குள் நுழைந்த பார்​டோ, ஒரு விபத்​தில் கோடி​யின் உயிரைக் காப்​பாற்றுகிறான்.

கோடிக்​குத் தலை​வலி வரும்​போதெல்​லாம் அவனது தாயைப் போல​வே, தலையை வருடி ஆறு​தல் கூறி, அவனது அசைக்க முடி​யாத நம்​பிக்​கை​யைப் பெறுகிறான். இரு​வரும் சில கைதி​களின் உதவி யுடன் சிறையி​லிருந்து தப்​பிக்​கத் திட்​ட​மிடு​கின்​றனர்.

வெளி​யில், கோடி​யின் மனைவி வெர்​னா​வும் கூட்​டாளி பிக் ஹெட்​டும் நெருங்கி பழகிக் கொண்டு கோடியைச் சிறை​யிலேயே தீர்த்​துக்​கட்​டச் சதி செய்​கின்​றனர். சிறைக்கு வந்து மகனிடம் இதை எச்​சரிக்​கும் மா ஜாரெட், “பிக் ஹெட்டை நானே கவனித்​துக் கொள்​கிறேன்” எனக் கூறி​விட்​டுக் கிளம்​பு​கிறாள்.

சில நாட்​களுக்​குப் பின் சிறை உணவுக் கூடத்​தில், புதி​தாக வந்த கைதி மூலம் “மா ஜாரெட் சுட்​டுக் கொல்​லப்​பட்​டாள்!” என்ற செய்தி எட்​டியதும், கோடி வெறிபிடித்த மிரு​கம் போல் அலறிச் சிறையையே கலவர பூமி​யாக்​கு​கிறான்.

அவனை மனநல மருத்​து​வ​மனைக்கு மாற்ற முடி​வெடுக்​கும்​போது, சாதுர்​ய​மாகத் துப்​பாக்​கியைக் கடத்​தி, பார்டோ மற்​றும் கூட்​டாளி​களு​டன் மருத்​து​வரின் காரிலேயே சிறையி​லிருந்து வெளி​யேறுகிறான். நேராகப் பிக் ஹெட்​டின் இருப்​பிடத்​துக்​குச் செல்​கிறான்.

உண்​மை​யில் மா ஜாரெட்​டைக் கொன்ற வெர்​னா, தந்​திர​மாகப் பழியை பிக் ஹெட் மீது சுமத்​துகிறாள். தாயின் மரணத்​துக்​குப் பழி​வாங்​கும் கொதிப்​பில் கோடி, பிக் ஹெட்டை இரக்​க மின்​றிக் கொன்​று​விடு​கிறான். அதன்​பின், ரசாயனத் தொழிற்​சாலை​யைக் கொள்​ளை​யடிக்​கக் கோடி, திட்​ட​மிடும் போது அவனது கூட்​டாளி​கள் காலி​யாக இருக்​கும் ஒரு பெட்​ரோல் லாரியைக் காண்​பிக்​கின்​றனர்.

அதில் மறைந்து கொண்டு கொள்​ளை​யடிக்​கக் கிளம்​பு​கின்​றனர். அப்​போது லாரி​யின் அடிப்​பகு​தி​யில் ரகசிய டிரான்​ஸ்​மீட்​டரைப் பொருத்​தி, சிக்​னல்​களை அனுப்​பு​கிறான் பார்​டோ. அந்​தச் சிக்​னலைப் பின்​தொடர்ந்து வரும் போலீஸ் படை, தொழிற்​சாலை​யைச் சுற்​றிவளைக்​கிறது. வெடிக்​கும் துப்​பாக்​கிச் சண்​டைக்கு நடு​வே, தன் உயிர் நண்​ப​னாக நம்​பிய பார்​டோவே போலீஸ் உளவாளி என்​பதை அறி​யும் கோடி, முற்​றி​லும் சிதறிப்​போகிறான்.

தப்​பிக்க வழி​யின்​றி, தொழிற்​சாலை​யின் உச்​சியி​லிருக்​கும் பிரம்​மாண்ட எரி​வா​யுக் கலனின் (Gas Tank) மீது ஏறி, போலீ​ஸாரை நோக்கி வெறித்​தன​மாகச் சுடு​கிறான். தீயும் புகை​யும் சூழும் அந்த இறுதி நொடி​யில், வானத்​தைப் பார்த்​து, “Made it, Ma! Top of the World!” என்று வெறிக்​கூச்​சலிட, அடுத்த கணமே அந்த டேங்க், பேரொலி​யுடன் வெடித்​துச் சிதறுகிறது.

கீழே நிற்​கும் அதி​காரி எவான்​ஸ், “இறு​தி​யாக கோடி உலகத்​தின் உச்​சியை அடைந்​து​விட்​டான்​... ஆனால் அது அவன் முகத்​திலேயே வெடித்​துச் சிதறி​விட்​டது” என்று கூறு​வதுடன் படம் நிறைவடைகிறது. 1940-களின் அமெரிக்​கக் கூட்​டுக்​கொள்​ளைக் கலாச்​சா​ரப் பின்​னணி​யில், அதிரடித் திரைமொழி​யின் முன்​னோடி​யான இயக்​குநர் ரவுல் வால்​ஷ்,

தாயின் தவறான அரவணைப்பு எவ்​வாறு ஒரு​வனை அழி​வின் உச்​சிக்​குத் தள்​ளுகிறது என்​பதை ஆழமான உளவியல் காவிய​மாகக் காட்​சிப்​படுத்​திய திரைப்​படம் இது.

வார்​னர் பிரதர்ஸ் தயாரிப்​பில், வர்​ஜீனியா கெல்​லாக்​கின் மூலக்​கதையை இவான் கோஃப், பென் ராபர்ட்ஸ் இரு​வரும் புத்​தி​சாலித்​தன​மான திரைக்​கதை​யாக்கி உள்​ளனர். சிறு​வய​தில் தலை​வலி வந்​தது​போல் நடித்​துத் தாயின் பாசத்​தைப் பெற்றவனுக்​கு, வளரும்​போது அதுவே உண்​மைத் தலை​வலி​யாகி மனச்​சிதைவை ஏற்​படுத்​து​வ​தாகக் காட்​டி​யிருப்​பது அசாத்​திய உளவியல் நுட்​பம்.

ஜிபிஎஸ் இல்​லாத அக்​காலத்​திலேயே நடமாடும் வயர்​லெஸ் கருவி​கள் மூலம் குற்​ற​வாளியைத் துல்​லிய​மாகக் கண்​டறி​யும் காட்​சிகள் அன்​றைய நவீனத் தொழில்​நுட்​பத்​தின் உச்​ச​மாகத் திகழ்​கின்​றன. ஒளிப்​ப​தி​வாளர் சிட் ஹிக்​கோக்​ஸ், கறுப்​பு–வெள்ளை ஒளியமைப்​பில் மலைச் சுரங்​கங்​கள், இரவுத் தொழிற்​சாலைகள், சிறைக்​கொட்​டகைகள் என இருளும் அச்​ச​மும் சூழ்ந்த வெளி​களைத் தத்​ரூப​மாகப் பதிவு செய்​துள்​ளார்.

படத்​தொகுப்​பாளர் ஒவன் மார்க்​ஸ், குற்​ற​வாளி​களின் முரட்​டுத் தாக்​குதல்​களை​யும் போலீ​ஸின் உளவு வலை​யை​யும் கச்​சித​மாக இணைத்​திருக்​கிறார். குறிப்​பாகச் சிறை உணவகக் காட்​சி​யில், அம்​மா​வின் மரணச் செய்தி ஒவ்​வொரு கைதி​யாகக் கடந்து கோடியை வந்​தடைவதும், மா ஜாரெட்​டின் காரைப் போலீ​சார் ஏ, பி, சி எனப் பிரிந்து துரத்​து​வதும் படத்​தின் விறு விறுப்​பைக் கூட்​டு​கின்​றன.

மேக்ஸ் ஸ்டெய்​னரின் பின்​னணி இசை படம் முழு​வதும் உளவியல் பதற்​றத்​தைத் தக்​கவைக்​கிறது. குறிப்​பாக, இறு​திக்​காட்​சி​யில் கோடி​யின் வெறிக்​கூச்​சலுக்கு முன்​பாக இசையை முற்​றி​லு​மாக நிறுத்​தி, அந்த மரண அமை​தி​யையே மிகப்​பெரிய உணர்​வுத் தாக்​க​மாக மாற்​றி​யிருக்​கிறார்.

வெளி​யில் கொடூர​மான குற்​ற​வாளி​யாக​வும் உள்​ளுக்​குள் தாயின் அன்​புக்​காக ஏங்​கும் சிதைந்த மனித​னாக​வும் கோடி​யின் உணர்​வுப் போராட்​டத்​தைத் தீவிர உடல்​மொழி​யால் உயிர்ப்​பித்த ஜேம்ஸ் காக்​னி​யின் நடிப்பு ஹாலிவுட்​டின் மிகச்​சிறந்த மைல்​கல். ரகசிய போலீ​ஸாக எட்​மண்ட் ஓ’பிரையன் அமை​தி​யான கம்​பீரத்​துடன் இப்​படத்​தின் உளவியல் மோதலுக்கு வலு​வான எதிர்​தளத்தை உரு​வாக்​கி​யுள்​ளார்.

கோடி​யின் சதி​கார மனைவி வெர்​னா​வாக, வர்​ஜீனியா மேயோ, பேராசை​யும் துரோக​மும் கலந்த ‘ஃபெம் ஃபட்​டேல்’ பாத்​திரத்தை இயல்​பாக வெளிப் படுத்​தி​யுள்ளார். மா ஜாரெட்​டாக வரும் மார்​கரெட் வைச்​சர்​லி, பாச​முள்ள தாயாக​வும் இரக்​கமற்ற கும்​பல் தலை​வி​யாக​வும் இரு முரண்​பட்ட முகங்​களை வெளிப்​படுத்​தி, கோடி​யின் மனப்​பிறழ்​வுக்​கான வேரைத் திரையில் அழுத்​த​மாகப் பதி​யச்​செய்​துள்​ளார்.

கோடி ஜாரெட் கதா​பாத்​திர​மும் “Made it, Ma! Top of the World!” என்ற வசன​மும் உலக சினிமா வரலாற்​றின் அடை​யாளங்​கள். தாயின் தவறான அன்​பும் மகனின் அந்​தஸ்து வெறி​யும் உரு​வாக்​கும் பேராபத்தை உளவியல் காவிய​மாக மாற்றியிருப்​பதே இப்​படம், க்ரைம் நோயர் சினி​மா​வில் தனி​யிடம் பிடித்​திருக்​கக் காரணம்.

மனிதனுள் மறைந்​திருக்​கும் இருண்ட அகவெடிப்​பு​களைத் தவிர்க்க முடி​யாது என்​ப​தை, எரி​வா​யுக் கலனின் உச்​சி​யில் சாம்​பலாகும் கோடி​யின் வழியே இப்​படம்​ உணர்த்​துகிறது. காலத்​தைத்​ தாண்​டி ஜொலிக்​கும்​ இந்​த உளவியல்​ கா​வி​யத்​தை, ஓர்​ ஓய்​வு நாளில்​ அமை​தி​யாகக் கண்​டு​களிக்​கலாம்​.

(செவ்​வாய்​ தோறும்​ படம் பார்ப்போம்)

- ramkumaraundipatty@gmail.com