惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
U
Unit 42
Google DeepMind News
Google DeepMind News
B
Blog RSS Feed
S
SegmentFault 最新的问题
阮一峰的网络日志
阮一峰的网络日志
雷峰网
雷峰网
Microsoft Security Blog
Microsoft Security Blog
爱范儿
爱范儿
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园_首页
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
罗磊的独立博客
GbyAI
GbyAI
Stack Overflow Blog
Stack Overflow Blog
Martin Fowler
Martin Fowler
宝玉的分享
宝玉的分享
L
LangChain Blog
Engineering at Meta
Engineering at Meta
量子位
有赞技术团队
有赞技术团队
博客园 - 【当耐特】
A
About on SuperTechFans
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேகேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் ஏன் அவசியம்? ...
வெற்றி மயிலோன் · 2026-06-22 · via hindutamil

Updated on: 

சென்னை: “மேகேதாட்டு அணை பிரச்சினை என்பது உச்ச நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படாத ஒரு புதிய பிரச்சினை. இதற்கு நடுவர் மன்றத்தை நாடுவதுதான் சிறந்தது. மேகேதாட்டு தீர்மானத்தை விவாதப் பொருளாக்கினால், அது கர்நாடக அரசுக்கு சாதகமான சூழலை உருவாக்கிவிடும். எனவே, புதிய நடுவர் மன்றம் அமைப்பதை தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் இருந்து, ஒருமனதாக ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்” என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “மேகேதாட்டு பிரச்சினை குறித்து சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், அதிமுக மற்றும் இடதுசாரிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் திமுக முன்மொழிந்த திருத்தத்தை ஏற்றுக்கொண்டு, தமிழக அரசு தான் கொண்டுவந்த தீர்மானத்தில் அதனை சேர்த்துக்கொண்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய நீர்வள ஆணையம், சில நிபந்தனைகளோடு விரிவான திட்ட அறிக்கை ஒன்றை தயாரிக்க 28-11-2018 தேதியிட்ட கடிதத்தில் கர்நாடக அரசுக்கு ஒரு அறிவுரையினை வழங்கியிருந்தார்கள். அந்த அறிவுரையை எதிர்த்து, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக, தமிழக அரசின் சார்பில் வழக்கு தொடுத்தார்கள்.

இதனையொட்டி 2025-ம் ஆண்டு நவம்பர் 13-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மத்திய நீர்வள ஆணையம் சில நிபந்தனைகளோடுதான் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டி, அதன் அடிப்படையில் தமிழக அரசின் கோரிக்கையை அப்போதைய நிலையின் அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது ஆரம்ப நிலையிலானதாக இருக்கும் என உச்ச நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்தது.

அதுமட்டுமின்றி, தமிழக அரசின் ஆட்சேபனைகள் உள்ளிட்ட மூன்று முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாமல், தொடர்ந்து கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடரலாம் என்று அனுமதி அளித்துள்ளது.

மேகேதாட்டு அணை கட்டக் கூடாது என பலமுறை நம் சட்டப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். இதுகுறித்து பல்வேறு காலகட்டத்தில் பொறுப்பில் இருந்த பிரதமர்களை, ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து நம் தரப்பின் வாதங்களை முறையிட்டுள்ளோம். பல அனைத்துக் கட்சி கூட்டங்களையும் கூட்டி மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்.

கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், காவிரி இறுதி தீர்ப்புக்கு எதிராக நாங்கள் மேகேதாட்டு அணையை கட்டுவோம் என பிடிவாதமாக, அந்த செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கர்நாடக அரசின் இந்த செயல் தமிழக விவசாயிகளுக்கு பேராபத்தாக முடியும். இந்த பிரச்சினையை கவனமாக கையாள தவறினால், மீண்டும் இப்பிரச்சினை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகளின் வசம், அவர்களின் முடிவுக்கு செல்லக்கூடிய வகையில் அமைந்து, தமிழகம் ஒரு கிடுக்குப்பிடியில் சிக்கிக்கொள்ளும் சூழல் உருவாகும்.

மேகேதாட்டு அணை பிரச்சினை என்பது உச்ச நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படாத ஒரு புதிய பிரச்சினை. பல மாநிலங்களுக்கு இடையே இருக்கும் நதிநீர் தாவா படி, உச்ச நீதிமன்றத்தாலே பரிந்துரைக்கப்பட்ட 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான நடுவர் மன்றத்தை நாடுவதுதான் சிறந்தது என்று இந்த வழக்கில் தொடர்ந்து வாதாடி வரும் சட்ட வல்லுநர்கள் நமக்கு தெரிவித்துள்ளனர்.

எனவே மூத்த வழக்கறிஞர்கள், துறை வல்லுநர்கள் ஆலோசனையின் படி, மேகேதாட்டு அணை புதிய பிரச்சினை என்ற அடிப்படையில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த மார்ச் 4-ம் தேதி ஒன்றிய அரசுக்கு வைத்துள்ளோம்.

இந்த நடுவர் மன்றம் அமைக்கப்படும் சூழலில், ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் இறுதி செய்த காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு வராது. புதிய நடுவர் மன்றம் அமைக்கும் கோரிக்கை என்பது திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டிருந்தாலும், அது அடிப்படையில் தமிழக அரசின் முடிவு. தமிழக மக்கள், விவசாயிகளின் நலனை, காவிரி உரிமையை பாதுகாக்க எடுக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான முடிவு இது.

இந்த நடுவர் மன்றம் அமைப்பதால், 2018 ஆம் ஆண்டு பிப்.16-ம் தேதி வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எந்தவித பாதிப்பும் வராது. அந்த தீர்ப்பை எந்த விதத்திலும் மீண்டும் திறக்க இயலாது. ஏற்கெனவே 2018-ல் கர்நாடக அரசு பெண்ணையாற்றின் குறுக்கே அணைகட்ட முயற்சித்தபோது, அப்போதைய அதிமுக அரசு ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், ஒரு நடுவர் மன்றத்தை நியமிக்க மத்திய அரசை அணுக அனுமதி அளித்தது. அதன் விளைவாக 2019-ல் பெண்ணையாற்றில் அணைகட்டுவதை தடுக்க நடுவர் மன்றம் அமைக்க அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தில், நாங்கள் கொண்டுவந்த திருத்ததை ஏற்றுக்கொண்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விவசாயிகள் நலனை காக்கும் ஒரு முயற்சி. இதனை மீண்டும் விவாதப் பொருளாக்கினால், மேகேதாட்டு தீர்மானத்தின் மீது நாம் காட்டிய ஒற்றுமை உணர்வை பாதிப்பதாக அமைப்பும்.

மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளிடையே பிளவு என தோற்றத்தை உருவாக்கி, அதை அரசியல் ஆக்குவதைப் போல அமைந்துவிடும். இது கர்நாடக அரசுக்கு சாதகமான சூழலை உருவாக்கிவிடும். எனவே தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் இருந்து, ஒருமனதாக இதனை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்.” என்றார்.