惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
I
InfoQ
B
Blog RSS Feed
D
Docker
GbyAI
GbyAI
N
Netflix TechBlog - Medium
Y
Y Combinator Blog
F
Fortinet All Blogs
P
Proofpoint News Feed
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
人人都是产品经理
人人都是产品经理
Martin Fowler
Martin Fowler
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
M
MIT News - Artificial intelligence
C
Check Point Blog
Vercel News
Vercel News
云风的 BLOG
云风的 BLOG
博客园 - Franky
Google DeepMind News
Google DeepMind News
WordPress大学
WordPress大学
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
V
V2EX
Last Week in AI
Last Week in AI
L
LangChain Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்கு வங்க முதல்கட்ட தேர்தலில் 92.03% வாக்குப் பதிவு
2026-04-24 · via hindutamil

Updated on

2 min read

கொல்கத்தா: மேற்​கு​வங்க முதல் கட்ட தேர்​தலில் 92.03 சதவீத வாக்​கு​கள் பதி​வாகி உள்​ளன.

மேற்கு வங்​கத்​தில் மொத்​தம் 294 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. இந்த தொகு​தி​களுக்கு ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாகத் தேர்​தல் நடத்​தப்​படும் என்று தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது.

இந்​தச் சூழலில் முதல் கட்​ட​மாக 152 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு நேற்று வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. மொத்​தம் 1,478 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர்.

3.60 கோடி பேர் வாக்​குரிமை பெற்று உள்​ளனர். அவர்​களுக்​காக 44,376 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. காலை 7 மணிக்கு வாக்​குப்​ப​திவு தொடங்​கியது. அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் காலை முதலே பொது​மக்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்து வாக்​குரிமையை செலுத்​தினர்.

மேற்கு வங்​கத்​தின் அசன்​சோல் தக்​சின் தொகு​தி​யில் நேற்று வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. இந்த தொகு​தி​யின் பாஜக எம்​எல்​ஏ.​வாக அக்​னிமித்ரா பால் பதவி வகிக்​கிறார். தற்​போதைய தேர்​தலில் பாஜக சார்​பில் அவரே மீண்​டும் போட்​டி​யிடு​கிறார். அவரை எதிர்த்து திரிண​மூல் சார்​பில் தபஸ் பானர்ஜி களமிறங்கி உள்​ளார்.

இந்​தச் சூழலில் அசன்​சோல் தொகு​தி​யின் ஹர்​மத் நகர் பகு​தி​யில் பாஜக எம்​எல்ஏ அக்​னிமித்ரா பால் நேற்று காரில் சென்று கொண்​டிருந்​தார். அவரது காரை குறி​வைத்து கற்​கள் வீசப்​பட்​டன. இதில் காரின் கண்​ணாடிகள் உடைந்​தன. இதுதொடர்​பாக உள்​ளூர் போலீஸ் நிலை​யத்​தில் அவர் புகார் அளித்​துள்​ளார். மால்​டா​வில் உள்ள வாக்​குச்​சாவடி மையத்​தில் பாஜக ஏஜென்ட் ஒரு​வர் தாக்கப்பட்டார்.

அவரது கார் சேதப்​படுத்​தப்​பட்​டது. படு​காயமடைந்த பாஜக ஏஜென்ட் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். இதே​போல பதாஸ்​பூர் வாக்​குச்​சாவடி​யில் பிரான்​கிருஷ்ணா சாகு என்ற பாஜக ஏஜென்ட் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. நாராயண்​கர் தொகு​திக்கு உட்​பட்ட பாசிம் மேதினிபூரில் உள்ள வாக்​குச்​சாவடி​யில் ஒரு வாக்​காள​ருக்​கும் வாக்​குச்​சாவடி பெண் அதி​காரிக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. ஆத்​திரமடைந்த வாக்​காளர், பெண் அதி​காரியை சரமாரி​யாக தாக்​கி​னார்.

வீரர்​கள் மீது கல்​வீச்சு

பிர்​பூம் மாவட்​டம், கைரோ சோல் பகுதி வாக்​குச்​சாவடி​யில் மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரத்​தில் தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்​டது. இதன் காரண​மாக அந்த வாக்​குச்​சாவடியை வாக்​காளர்​கள் முற்​றுகை​யிட்​டனர். அப்​போது சிஆர்​பிஎப் போலீ​ஸாரை குறி​வைத்து சிலர் கற்​களை வீசி தாக்​குதல் நடத்​தினர். அவர்​கள் மீது போலீ​ஸார் தடியடி நடத்​தினர். இதில் சிலர் காயமடைந்​தனர்.

முதல் கட்ட வாக்​குப்​ப​திவு தொடர்​பாக தேர்​தல் ஆணை​யத்​திடம் நேற்று 700-க்​கும் மேற்​பட்ட புகார்​கள் அளிக்​கப்​பட்​டன. வன்​முறை சம்​பவங்​கள், மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் தொடர்​பாக இந்த புகார்​கள் அளிக்​கப்​பட்​டன. வாக்​காளர்​களைத் தாக்​கியது, கட்சி சார்​பில் அமைக்​கப்​பட்ட பந்​தல்​களை உடைத்​தது தொடர்​பாக சிஆர்​பிஎப் போலீ​ஸார் மீது புகார் மனுக்​கள் அளிக்​கப்​பட்டு உள்​ளன.

முதல்கட்ட தேர்தலில் 92.03 சதவீத வாக்குகள் பதிவாகி யுள்ளன. வரும் 29-ம் தேதி மீத​முள்ள 142 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு வாக்​குப்​ப​திவு நடை​பெற உள்​ளது. மேற்​கு​வங்​கத்​தின்​ 2 கட்​டத்​ தேர்​தல்​களில்​ பதி​வாகும்​ வாக்​கு​கள்​ மே 4-ம்​ தேதி எண்​ணப்​பட உள்​ளன.