惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Jina AI
Jina AI
云风的 BLOG
云风的 BLOG
人人都是产品经理
人人都是产品经理
T
The Blog of Author Tim Ferriss
阮一峰的网络日志
阮一峰的网络日志
罗磊的独立博客
J
Java Code Geeks
博客园 - 聂微东
B
Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
WordPress大学
WordPress大学
腾讯CDC
L
LangChain Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
D
DataBreaches.Net
The GitHub Blog
The GitHub Blog
美团技术团队
博客园 - Franky
Google DeepMind News
Google DeepMind News
V
V2EX
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
月光博客
月光博客
The Cloudflare Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்கு வங்கம், அசாம் முதல்வர்களை தேர்வு செய்ய மத்திய பார்...
2026-05-05 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை அக்கட்சி தொடங்கி உள்ளது. இந்த மாநிலங்களுக்கான மத்திய பார்வையாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

மேற்கு வங்க வரலாற்றில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதில் பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 147 இடங்கள் தேவை எனும் நிலையில், கூடுதலாக 60 தொகுதிகளை பாஜக கைப்பற்றி உள்ளது.

பாஜகவின் வெற்றியை அடுத்து மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மம்தா பானர்ஜியை கடந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் தோற்கடித்தவர் சுவேந்து அதிகாரி. இதைத் தொடர்ந்து அவர் பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த தேர்தலில், மம்தா போட்டியிட்ட பபானிபூர் தொகுதியிலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றுள்ளார்.

மேற்கு வங்கத்தில் பாஜகவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சுவேந்து அதிகாரி பார்க்கப்படுகிறார். எனவே, அவர் முதல்வராக பதவியேற்கும் வகையில் கட்சியின் எம்எல்ஏக்கள் அவரை பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், பாஜக மூத்த தலைவரான திலீப் கோஷ், மூத்த பெண் தலைவரான அக்னிமித்ரா பால், பாஜக மாநில தலைவரான ஷமிக் பட்டாச்சார்யா ஆகியோரின் பெயர்களும் முதல்வர் பதவிக்கு அடிபடுகின்றன.

இந்நிலையில், கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் மத்திய பார்வையாளராக அமித் ஷாவை பாஜக நியமித்துள்ளது. ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி மத்திய இணைப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், அசாமில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக 82 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. அறுதிப் பெரும்பான்மைக்கு 63 தொகுதிகள் தேவை எனும் நிலையில், 19 தொகுதிகளை பாஜக கூடுதலாகப் பெற்றுள்ளது.

அதோடு, கூட்டணி கட்சிகளான போடோலாந்து மக்கள் முன்னணி மற்றும் அசாம் கன பரிஷத் ஆகியவை தலா 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் ஆட்சி முறை மற்றும் திறமையே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. எனவே, மீண்டும் அவர் முதல்வராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அசாம் மாநில பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் கவுகாத்தியில் விரைவில் நடைபெற உள்ளது. இதில் பாஜகவின் மத்திய பார்வையாளராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். இணை மத்திய பார்வையாளராக ஹரியானா மாநில முதல்வர் நாயப் சிங் சைனி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இங்கு மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில், என்ஆர் காங்கிரஸ் 12, பாஜக 4, லட்சிய ஜனநாயகக் கட்சி 1 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இங்கு பாஜக சட்டமன்றக் குழு தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் விரைவில் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இதில் பாஜகவின் மத்திய பார்வையாளராக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நியமிக்கப்பட்டுள்ளார். இணை மத்திய பார்வையாளராக புதுச்சேரிக்கான பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா நியமிக்கப்பட்டுள்ளார்.