

























கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியுடனான போட்டியின்போது கேட்ச்களை தவறவிட்டதால் தோல்வி கண்டோம் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தார். கொல்கத்தா, குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் கொல்கத்தா அணி, 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. அஜிங்க்ய ரஹானே 14, ஃபின் ஆலன் 93, அங்ரிஷ் ரகுவன்ஷி 82, கேமரூன் கிரீன் 52 ரன்கள் குவித்தனர். பின்னர் விளையாடிய குஜராத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. சாய் சுதர்ஷன் 53, ஷுப்மன் கில் 85, நிஷாந்த் சிந்து 1, ஜாஸ் பட்லர் 57, ராகுல் டெவாட்டியா 2 ரன்கள் எடுத்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。