惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
Martin Fowler
Martin Fowler
I
InfoQ
腾讯CDC
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
爱范儿
爱范儿
Microsoft Security Blog
Microsoft Security Blog
Google DeepMind News
Google DeepMind News
D
DataBreaches.Net
云风的 BLOG
云风的 BLOG
F
Fortinet All Blogs
N
Netflix TechBlog - Medium
博客园 - 聂微东
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
D
Docker
博客园 - 三生石上(FineUI控件)
Y
Y Combinator Blog
博客园 - Franky
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
罗磊的独立博客
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Jina AI
Jina AI
V
Visual Studio Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மே.வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு
செய்திப்பிரிவு · 2026-05-09 · via hindutamil

மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் மேற்குவங்க முதல்வராக தேர்வாகி உள்ள சுவேந்து அதிகாரி

Updated on: 

கொல்கத்தா: மேற்​கு​வங்க மாநிலத்தில் சுவேந்து அதி​காரி இன்று காலை முதல்​வ​ராகப் பதவி​யேற்​கிறார்.

மேற்​கு​வங்​கத்​தில் கடந்த ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்​றது. இதில் பதி​வான வாக்​கு​கள் கடந்த 4-ம் தேதி எண்​ணப்​பட்டன. முடிவு​கள் அறிவிக்​கப்​பட்ட 293 தொகு​தி​களில் பாஜக 207 இடங்​களில் வெற்றி பெற்று ஆட்​சி​யைக் கைப்​பற்றி உள்​ளது. திரிண​மூல் காங்​கிரஸுக்கு 80 தொகு​தி​கள் மட்​டுமே கிடைத்​தன.

இதைத் தொடர்ந்து பாஜக எம்​எல்​ஏக்​களின் கூட்​டம் கொல்​கத்​தா​வில் நேற்று நடை​பெற்​றது. இதில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா மேலிட பார்​வை​யாள​ராக பங்​கேற்​றார். இந்த கூட்​டத்​தில் கட்​சி​யின் சட்​டப்​பேர​வைத் தலை​வ​ராக சுவேந்து அதி​காரி ஒரு​மன​தாக தேர்வு செய்​யப்​பட்​டார்.

கொல்​கத்​தா​வின் பிரி​கேட் பரேடு மைதானத்​தில் இன்று காலை 10 மணிக்கு புதிய அரசு பதவி​யேற்பு விழா நடை​பெறுகிறது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி முன்​னிலை​யில் மேற்​கு​வங்​கத்​தின் புதிய முதல்​வ​ராக சுவேந்து அதி​காரி பதவி​யேற்க உள்​ளார். இந்த விழா​வில் மத்​திய அமைச்​சர்​கள், பாஜக ஆளும் மாநிலங்​களின் முதல்​வர்​கள், பாஜக மூத்த தலை​வர்​கள் பங்​கேற்க உள்​ளனர்.

மத்​திய அமைச்​சர் அமித் ஷா கொல்​கத்​தா​வில் நேற்று நிருபர்​களிடம் கூறிய​தாவது: கடந்த மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் நந்​தி​கி​ராம் தொகு​தி​யில் மம்தா பானர்​ஜியை, சுவேந்து அதி​காரி தோற்​கடித்​தார். தற்​போது பவானிபூர் தொகு​தி​யில் மம்​தாவை அவர் தோற்​கடித்​திருக்​கிறார். பாஜக​வுக்கு ஆதர​வாக வாக்​களித்த பவானிபூர் மக்​களுக்கு நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்கு திருட்டு நடை​பெற்​ற​தாக குற்​றம் சாட்​டப்​படு​கிறது. கடந்த 1967-ம் ஆண்​டுக்​குப் பிறகு தமிழகத்​தில் காங்​கிரஸால் ஆட்சி அமைக்க முடிய​வில்​லை. அந்த மாநிலத்​தில் வாக்கு திருட்டு நடை​பெறுகிற​தா?

கடந்த 42 ஆண்​டு​களாக சிக்​கிமில் காங்​கிரஸ் முதல்​வர் இல்​லை. கடந்த 36 ஆண்​டு​களாக பிஹாரில் காங்​கிரஸ் முதல்​வர் பதவியேற்க முடிய​வில்​லை. குஜ​ராத்​தில் 30 ஆண்​டு​கள், ஒடி​சாவில் 26 ஆண்​டு​கள், நாகாலாந்​தில் 23 ஆண்​டு​கள், மகாராஷ்டிரா​வில் 12 ஆண்​டு​கள் வரை காங்​கிரஸ் புறக்கணிக்கப்​பட்டு உள்​ளது

மத்​தி​யில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி கடந்த 2014-ம் ஆண்​டில்​தான் ஆட்சி அமைத்​தது. அதற்கு முன்​பிருந்தே பல்​வேறு மாநிலங்​களில் காங்​கிரஸ் தோல்​வியைத் தழுவி வரு​கிறது. ராகுல் காந்தி தலை​மையி​லான காங்​கிரஸ் தொடர்ந்து பின்​னோக்கி செல்​கிறது. அவரது தலை​மை​யால் தற்​போது இண்​டியா கூட்​ட​ணி​யும் உடைந்​திருக்​கிறது. தேர்​தல் தோல்வி​கள் குறித்து காங்​கிரஸ் சுயபரிசோதனை செய்து கொள்​வது அவசி​யம்.

ஒரு காலத்​தில் மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வை​யில் பாஜக​வுக்கு 3 எம்எல்​ஏக்​கள் மட்​டுமே இருந்​தனர். இந்த எண்​ணிக்கை கடந்த சட்டப்​பேர​வைத் தேர்​தலில் 77 எம்​எல்​ஏக்​களாக உயர்ந்​தது. தற்போதைய சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 207 பாஜக எம்​எல்​ஏக்​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்டு உள்​ளனர். 9 மாவட்​டங்​களில் திரிண​மூல் காங்​கிரஸுக்கு ஒரு தொகு​தி​கூட கிடைக்​க​வில்​லை.

இனிமேல் மேற்​கு​வங்​கத்​துக்​குள் ஊடுரு​வல்​காரர்​கள் நுழைய முடி​யாது. இங்​குள்ள ஊடுரு​வல்​காரர்​கள் வெளி​யேற்​றப்​படு​வார்​கள். அடுத்த சில மாதங்​களில் சமூக​விரோத கும்​பல்​கள் ஒழிக்​கப்​படும். மாநிலத்​தின் சட்​டம், ஒழுங்கு சீரடை​யும். இரட்டை இன்​ஜின் ஆட்​சி​யால் மேற்​கு​வங்​கம் அதிவேக​மாக முன்​னேறும்.

இது​வரை 20 மாநிலங்​களில் பாஜக மற்​றும் பாஜக கூட்​டணி ஆட்சி நடை​பெறுகிறது. தற்​போது 21-வது மாநில​மாக மேற்​கு​வங்​கத்​தில் பாஜக ஆட்சி அமை​கிறது. இதற்​காக ஒட்​டுமொத்த மேற்​கு​வங்க மக்​களுக்​கும் நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன். இவ்​வாறு அமித் ஷா பேசி​னார்.