






















Updated on:
சென்னை: கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது: பிரச்சாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து திமுக, அதிமுக, தவெக வாக்காளர்களிடம் செல்வாக்கை செலுத்தியுள்ளன.
கடந்த ஏப்.21-ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பேசிய விஜய், தவெகவுக்கு வாக்களிக்கும்படி பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென குழந்தைகள் மீது உணர்வுப்பூர்வமாக செல்வாக்கை செலுத்தியுள்ளார். பல தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக செய்தி வெளியானது.
தேர்தல் நடவடிக்கைகளில் குழந்தைகள் மீது செல்வாக்கை செலுத்தியது, பணப்பட்டுவாடா உள்ளிட்ட ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பாக திமுக, அதிமுக, தவெக கட்சிகளுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, மே 29-க்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் மற்றும் திமுக, அதிமுக, தவெக கட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。