惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
Last Week in AI
Last Week in AI
博客园_首页
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 叶小钗
大猫的无限游戏
大猫的无限游戏
人人都是产品经理
人人都是产品经理
V
Visual Studio Blog
宝玉的分享
宝玉的分享
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
月光博客
月光博客
T
Tailwind CSS Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
量子位
博客园 - 聂微东
S
SegmentFault 最新的问题
博客园 - 司徒正美
罗磊的独立博客
V
V2EX
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
美团技术团队
小众软件
小众软件
Jina AI
Jina AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“கோயில்களில் காலாவதியான பிரசாதங்கள் விற்கப்பட்டால் கடும் ...
மோகன் கணபதி · 2026-05-24 · via hindutamil

Updated on: 

திருச்சி: கோயில்களில் காலாவதியான, தேதி குறிப்பிடப்படாத பிரசாதங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், பிரசாத கடை ஒப்பந்ததாரர்கள் மற்றும் கடை நடத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ், திருச்சி, மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் மற்றும் திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு நேரில் சென்று அவற்றின் நிர்வாகம் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள், பிரசாத விற்பனை நிலையம் ஆகியற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

அருள்மிகு தாயுமானசுவாமி கோயிலுக்கு புதிய அம்பாள் மரத்தேர் உருவாக்கிடும் பணி உபயதாரர் நிதி ரூ. 57.80 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. அப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ், திருத்தேர் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயிலுக்கு சென்ற அமைச்சர் ரமேஷ், திருக்கோயில் நிர்வாகம், யானை பராமரிப்பு மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். திருக்கோயில் பிரசாத விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் மற்றும் பிரசாதங்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா எனவும், உணவு பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்பட்டுள்ளதா எனவும் பரிசோதித்தார்.

அவ்வாறு குறிப்பிடப்படாததை கண்டறிந்த அமைச்சர், அந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது எனவும், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பிரசாத கடை ஒப்பந்ததாரரிடமிருந்து உரிய விளக்கம் பெற வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் திருக்கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் (RO Unit) குடிநீரின் TDS அளவை கணக்கீடு செய்து, அது குறைவாக இருந்ததை கண்டறிந்து, அதில் இயற்கை கனிமச் சத்துக்கள் மற்றும் ஊட்டச் சத்துக்கள் போதுமான அளவில் இல்லாமல் இருக்கக்கூடும் என்பதால் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டியினை தொடர்ச்சியான கால இடைவெளியில் பராமரிப்பு மேற்கொள்ளவும், அதற்கென தனியாக பதிவேடுகளை பராமரிக்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்.

கோயில் வளாகத்திலுள்ள கழிப்பறைகள் தினமும் குறைந்தபட்சம் ஐந்து முறை சுத்தம் செய்யப்பட வேண்டுமென்றும், ஒவ்வொரு முறை சுத்தம் செய்யும் போதும் சுத்தம் செய்த நேரம் மற்றும் பணியாளர் விவரங்களுடன் கூடிய தனிப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். திருக்கோயில்களில் பக்தர்களின் காலணிகளை பாதுகாத்திட அமைக்கப்பட்டுள்ள இலவச காலணி பாதுகாப்பு மையங்களை சிறந்த முறையில் பராமரித்திடவும் அறிவுரைகளை வழங்கினார்.

இத்திருக்கோயில் சார்பில் ரூ. 5.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

யானை அகிலாவுக்கு பிறந்தநாள்: திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் யானை அகிலாவுக்கு இன்று 24-வது பிறந்தநாள். அதனை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் முன்னிலையில் திருக்கோயில் யானை அகிலா தனது இருப்பிடத்திலிருந்து மேள, தாள முழக்கத்துடன் நந்தவனத்திற்கு அழைத்து வரப்பட்டு கஜ பூஜை நடத்தப்பட்டது. பின்னர் அமைச்சர், திருக்கோயில் யானைக்கு இனிப்புகள், பழங்கள், காய்கறிகளை வழங்கி ஆசி பெற்றார்.

செய்தியாளர் சந்திப்பு: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திருக்கோயில் நிர்வாகங்களும் பிரசாதம் விற்பனை நிலையங்கள், அன்னதான சமையலறைகள், குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு வசதிகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டுமெனவும், பிரசாத விற்பனை நிலையங்களில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதனை தொடர்ச்சியாக ஆய்வு செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவது அல்லது காலாவதி தேதி குறிப்பிடப்படாத பொருட்களை விற்பனை செய்வது போன்ற குற்றச்செயல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், பிரசாத கடை ஒப்பந்ததாரர்கள் மற்றும் கடை நடத்துபவர்களிடம் விளக்கம் கோரப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டுமென்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கண்டறியப்பட்ட பிரசாத கடையின் விற்பனை நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படுவதோடு, இது குறித்து அமைச்சர் அலுவலகத்திற்கு உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டுமென்றும், தகுதியான அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே அந்தக் கடைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து திருக்கோயில்களிலும் FSSAI வழிகாட்டுதல்கள், உணவுப் பாதுகாப்பு தரநிலைகள், சுகாதார நடைமுறைகள் மற்றும் குடிநீர் தரக் கட்டுப்பாடுகள் ஆகியவை கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். இதனை சம்மந்தப்பட்ட இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, தொடர்ந்து தூய்மை பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயிலுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் ராஜகோபுர கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது மண்டல இணை ஆணையர் சு. ஞானசேகரன், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் செ. சிவராம்குமார், மலைக்கோட்டை திருக்கோயில் உதவி ஆணையர் அருள்செல்வன், திருவானைக்காவல் திருக்கோயில் உதவி ஆணையர் கி. உமா, மண்டல செயற் பொறியாளர் முத்து ஜெயம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.