惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Microsoft Security Blog
Microsoft Security Blog
J
Java Code Geeks
GbyAI
GbyAI
aimingoo的专栏
aimingoo的专栏
L
LangChain Blog
I
InfoQ
D
Docker
F
Fortinet All Blogs
Y
Y Combinator Blog
Martin Fowler
Martin Fowler
月光博客
月光博客
B
Blog
Engineering at Meta
Engineering at Meta
T
Tailwind CSS Blog
罗磊的独立博客
博客园_首页
G
Google Developers Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Recent Announcements
Recent Announcements
D
DataBreaches.Net
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
B
Blog RSS Feed
IT之家
IT之家
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“முதுகில் குத்துபவர்களை சும்மா விடமாட்டோம்” - அதிருப்தி எ...
மோகன் கணபதி · 2026-06-17 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: சிவ சேனா (யுபிடி) கட்சியை விட்டு வெளியே செல்ல விரும்பும் எம்பி, எம்எல்ஏக்கள் முதலில் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும் என்றும் முதுகில் குத்துபவர்களை மகாராஷ்டிர மக்கள் இம்முறை சும்மா விட மாட்டார்கள் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான சஞ்சய் ராவத் எச்சரித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா (யுபிடி) கட்சியில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க ஏக்நாத் ஷிண்டேவின் சிவ சேனா கடந்த சில வாரங்களாக முயன்று வருவதாக மகாராஷ்டிர அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. எம்எல்ஏக்களில் 16 பேரும், எம்பிக்களில் 7 பேரும் ஏக்நாத் ஷிண்டே உடன் தொடர்பில் இருப்பதாகவும், வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாக அவர்கள் சிவ சேனாவில் இணையக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவ சேனாவின் இந்த நடவடிக்கை, ஆபரேஷன் டைகர் என அழைக்கப்படுகிறது. இதனிடையே, ஜூன் 14 அன்று உத்தவ் தாக்கரே கூட்டிய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தமுள்ள 9 மக்களவை உறுப்பினர்களில் 5 பேர் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிவ சேனா(யுபிடி) எம்பிக்களான அரவிந்த் சாவந்த், அனில் தேசாய் ஆகியோருடன் இணைந்து சஞ்சய் ராவத் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “யாரேனும் செல்ல விரும்பினால் அவர்கள் பதவியை ராஜினமா செய்துவிட்டு செல்லட்டும். எங்கள் கட்சியின் எம்பிக்கள் குறித்து இதுபோன்ற செய்திகள் வருகின்றன. இதற்கு அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். முதுகில் குத்துபவர்களை மகாராஷ்டிர மக்கள் இம்முறை சும்மா விட மாட்டார்கள்.

இந்த எம்பிக்களின் வெற்றிக்காக எங்கள் கட்சித் தலைவர் ஓய்வின்றி உழைத்துள்ளார். இவர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் ரத்தம் சிந்தி உழைத்துள்ளோம்; தேர்தலின்போது பணம் கொடுத்துள்ளோம். இப்போது, இதுபோன்ற செய்திகள் வருகின்றன. நாங்கள் அவர்களை சும்மா விட மாட்டோம்.

எம்பிக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 கோடி முன்பணமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. குறைந்தது ரூ.50 கோடி கொடுக்கப்படும் என அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த உத்தரவாதத்தை அடுத்தே அவர்கள் நான்டெட், புனே உள்பட மூன்று இடங்களில் இருந்து தனி விமானம் மூலம் சென்றுள்ளார்கள். இவர்கள் ரூ.50 ஆயிரத்துக்குக்கூட தகுதியானவர்கள் கிடையாது. சிவ சேனா என்ற பெயர் காரணமாகவே இவர்களுக்கு இவ்வளவு மதிப்பு. எங்கள் கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்சிக் குழு கூட்டத்தை நாளைய தினம் கூட்டியுள்ளோம். எங்கள் கட்சியின் கொறடா அரவிந்த் சாவந்த் இது தொடர்பாக மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்,” என தெரிவித்துள்ளார்.